14                                    
                                    
                                        Jul                                    
                                
                            
                        
                        
                    
                        ‘நெடுஞ்சாலை’, ‘அதே கண்கள்’ போன்ற படங்களில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த ஜொலித்த நாயகி ஷிவதா நாயர். அருமையான, வித்தியாசமான கதைகளை தேடிப் பிடித்து நடிக்கும் இவரது அடுத்த படம் ‘கட்டம்’. இந்தப் படத்தில் புதுமுகம் நந்தன் மற்றும் நிவாஸ் ஆகியோர் ஷிவதாவோடு சேர்ந்து முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ‘i create wonder films’ சார்பில் சந்தியா ஜனா தயாரித்துள்ளார். ‘முரண்’ படத்தை இயக்கிய ராஜன் மாதவ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ‘கட்டம்’ படம் குறித்து ஷிவதா நாயர் பேசுகையில், ”இந்தப் படத்தின் கதையை இயக்குநர் ராஜன் மாதவ் என்னிடம் முழுவதும் சொன்னபோது, அது என்னை பெரியளவில் கவர்ந்தது. நான் உடனே ஒப்புக் கொள்ளும் அளவிற்கு புத்தம் புது கதைக் களமாகவும், புது வகை சினிமாகவும் இருந்தது. இதுவொரு ஒரு ‘கர்மிக் திரில்லர்’ திரைப்படம். ரசிகர்களுக்கு முற்றிலும் புதுவகையான சினிமா. இந்தப் படத்தின் கதையும், திரைக்கதை பின்னப்பட்டுள்ள விதமும், எதிர்பாராத…                    
                                            
                                    