ஜனாதிபதி மடியில் அமர்ந்து  ‘டா’ போட்டு பேசிய சந்திரபாபு!

ஜனாதிபதி மடியில் அமர்ந்து ‘டா’ போட்டு பேசிய சந்திரபாபு!

தூத்துக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரரான ஜோசப் ராட்சிக் என்பவரின் மகன் தான் சந்திரபாபு. அவர் (இதே ஆகஸ்ட் 5ம் தேதி) பிறந்து சில நாட்களிலேயே விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். குழந்தை தப்புமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. தாயும் தகப்பனும், "ஏசுவே இந்தக் குழந்தை நீர் எமக்குக் கொடுத்த பிச்சை, குழந்தையை உயிர் பிழைக்கச் செய்தருளும், குழந்தைக்குப் பிச்சை எனப் பெயரிடுகிறோம்' என்று முழந்தாளிட்டு இயேசுவிடம் மன்றாடினர். அந்த மன்றாட்டத்தினால் தப்பிப் பிழைத்த குழந்தைக்கு ஜோசப்பிச்சை எனப் பெயரிட்டனர். சந்திர பாபுவுக்கு முன்னால் ஜோசப் பிச்சையின் முதல் எழுத்துக்கள் ஒட்டிக் கொண்டதால் ஜே.பி. சந்திரபாபு ஆனார். திரைப்படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் சினிமா கம்பனிகளில் ஏறி இறங்கிய இளைஞர்களில் ஜே.பி. சந்திரபாபுவும் ஒருவர். ஓர் இடத்தில் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றால் அடுத்த ஸ்ரூடியோவை நோக்கிச் சென்று தமது சந்தர்ப்பத்தைத் தேடிக் கொள்ளாமல். விதி விலக்காக தற்கொலைக்கு முயன்றார் ஜே.பி. சந்திரபாபு. 1947 ஆம்…
Read More