என் பேரை மிஸ் யூஸ் பண்ணப் படாது! – அஜித் காட்டம்!

என் பேரை மிஸ் யூஸ் பண்ணப் படாது! – அஜித் காட்டம்!

இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் ‘விவேகம்’ நாயகன் அஜித் -தின் சட்ட ஆலோசகர் பரத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘25 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்து வரும் எனது கட்சிகாரர் அஜித்குமார், நேர்மையான முறையில் வரி செலுத்துபவர். சமூகத்துக்கு தனிப்பட்ட முறையில் உதவுபவர் மற்றும் இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்படும் ஒரு குடிமகன் ஆவார். எனது கட்சிக்காரர் எந்த அரசியல் இயக்கத்தையும் (பிராந்திய மற்றும் தேசிய கட்சிகள் உட்பட) சார்ந்தவர் இல்லை. தனது சுயசிந்தனைப்படி ஜனநாயக முறையில் வாக்களிப்பவர். தனது ஜனநாயக நம்பிக்கையையும், சிந்தனையையும் தனது ரசிகர்கள் இடையேயும், பொதுமக்கள் இடையேயும் அவர் எப்பொழுதும் திணித்ததும் இல்லை. எனது கட்சிக்காரர் எந்த வணிக சின்னத்தையும், பொருளையும், நிறுவனத்தையும், அமைப்பையும், சங்கத்தையும் சார்ந்து அதன் விளம்பர தூதராக, நேரடியாகவோ, மறைமுகமாகவோ தற்போது செயல்படுவதில்லை. எனது கட்சிக்காரர் தனது வளர்ச்சிக்கு ஊக்க துணையாக இருந்த உண்மையான ரசிகர்கள், தன்னை பின்பற்றுபவர்கள், திரை பத்திரிகையாளர்கள்,…
Read More
என் படத்துக்கு ஏன் விருது இல்லை? சுசீந்தரன் அப்செட்

என் படத்துக்கு ஏன் விருது இல்லை? சுசீந்தரன் அப்செட்

2009 - 2014ம் ஆண்டுகள் வரைக்கான தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பால், தமிழ் திரையுலகினர் பலரும் பெரும் மகழ்ச்சியில் உள்ளனர். விருதுகள் அறிவிப்புக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவை தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன. இந்த வேளையில் இயக்குநர் சுசீந்திரன் தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், “நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழ் திரையுலகிற்கு விருதுகள் அறிவித்த தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இதில் என்னுடைய படங்கள் எந்த விருதிற்கும் தேர்வு செய்யப்படாததிற்கு தேர்வுக் குழுவினருக்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக தேசிய விருது பெற்ற 'அழகர்சாமியின் குதிரை' மற்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட 'நான் மகான் அல்ல' க்ளை மாக்ஸ்…
Read More