16
Jul
தற்போது உள்ளங்கையில் அடங்கி விட்ட இணையத்தில் அதிகமாக தென்படும் விஷயம் தமிழ் சினிமாதான். நடப்பு சம்வங்களை ஃபேச் புக் லைவ் மூலம் உடனே டெலிகாஸ்ட் செய்யும் போக்கு அதிகரித்து விட்டது. அது போல் பழைய கால தமிழ் சினிமா பற்றிய கவல்கள், நினைவலைகள் ஆங்காங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இந்த செய்திகளும் நினைவுகளும் ஒருவகையான வாய்மொழி வரலாறு என்கிறார்கள். ஆனால் இந்த டெக்னாலஜிக்கு முன்னோடி யாக தமிழ் தென்னிந்திய திரைப்பட உலகின் தகவல் களஞ்சியமாக இருந்தவர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். இவர்தான் திரைப்படத் துறையில் மக்கள் தொடர்புப் பணி என்ற டிப்பார்மெண்டையே ஓப்பன் செய்தவர். இவர் தான் அறிந்த, அறிய விரும்பிய, அறிய ஆவல் படும் அத்தனை நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் குறித்தான் தகவல்க ளையும் சேகரித்து வைத்திருந்தார். அத்துடன் அவற்றை யார் கேட்டாலும் உடனுக்குடன் பகிர்ந்து வந்தார். ஆனந்தன் சென்னையில் பல ஆண்டுகளாக “ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச்…