விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!

ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம், பிரபலமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 59வது தயாரிப்பாக, ஹைதராபாத் நகரில் சிறப்பாக நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கின்றனர். ‘ராஜா வாரு ராணி காரு’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ரவி கிரண் கோலா இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முஹூர்த்தக் காட்சிக்காக பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் அடிக்க, தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டி கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் ஹனு ராகவபுடி முதல் காட்சியை இயக்கினார். கிராம பின்னணியிலான ஆக்சன் டிராமா கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் வழக்கமான படப்பிடிப்பு அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த பிரமாண்டமான படத்தை அடுத்த ஆண்டு வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Read More
கத்தி, ரத்தம், சத்தம் என இந்த மூன்றை நம்பித்தான் படம் எடுக்க வருகிறார்கள்” – எஸ்.ஏ.சந்திரசேகர்

கத்தி, ரத்தம், சத்தம் என இந்த மூன்றை நம்பித்தான் படம் எடுக்க வருகிறார்கள்” – எஸ்.ஏ.சந்திரசேகர்

  அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ் சார்பில் TS.கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் த.ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஹீரோவாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராம் அப்துல்லா ஆண்டனி”. ஆண்டனி கதாபாத்திரத்தில் பூவையார், அப்துல்லா கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் ராம் கதாபாத்திரத்தில் அஜய் அர்னால்டு ஆகியோர் நடித்துள்ளனர்,. மேலும், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, சௌந்தர்ர்ராஜா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன், பிக் பாஸ் அர்ணவ் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜய்குமார் நடிக்கிறார்.. டி.ஆர்.கிருஷ்ண சேட்டன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்ய, வினோத் சிவகுமார் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். வரும் அக்-31ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று காளை சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.. இந்த…
Read More
நடிகர் பிரதீப் ரங்கநாதன் பின்னணி பாடகராக அறிமுகமாகும் ‘சிங்காரி’!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் பின்னணி பாடகராக அறிமுகமாகும் ‘சிங்காரி’!

  ‘டியூட்’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்காகியுள்ளது. மேலும், நடிகர் பிரதீப் ரங்கநாதனின் முந்திய படங்களான ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களும் பெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ‘டியூட்’ படத்திற்கு சாய் அபயங்கரின் இசையும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சிங்காரி’ பாடலை நடிகர் பிரதீப் ரங்கநாதன் பாடியிருப்பதன் மூலம் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார். பாடல் வெளியான ஒரே இரவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதை அடுத்து ஆல் ரவுண்ட் எண்டர்டெயினர் என்பதை நிரூபித்துள்ளார் பிரதீப். சஞ்சய் செம்வியின் எனர்ஜிட்டிக்கான பாடல் வரிகளும் இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் கண்ணைக் கவரும் பாடல் உருவாக்கமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. திரையரங்குகளில் நிச்சயம் ஆடியோ- வீடியோ விஷூவல் ட்ரீட்டாக இந்தப் பாடல் அமையும் என்பதில்…
Read More
சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் இல் புதிய இனோவேஷன் ஹப் தொடக்க விழா

சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் இல் புதிய இனோவேஷன் ஹப் தொடக்க விழா

தொழில்முறை CRM மற்றும் வணிக தானியங்க செயல்முறைத் தீர்வுகளில் முன்னணி நிறுவனமான RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் வளாகத்தில் தனது புதிய அலுவலகத்தை திறந்துவைத்தது. இந்த புதிய விரிவாக்கம், புதிய முயற்சிகள், வாடிக்கையாளர் வெற்றி மற்றும் உலகளாவிய வளர்ச்சி குறித்த நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணத்தை பிரதிபலிக்கிறது. இந்த தொடக்க விழா ஜூலை 19, 2025 அன்று நடந்தது. முக்கிய விருந்தினர்களாக Mr. Abhishek Mehta, அர்பன் ட்ரீ ஹோம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மற்றும் Mr. Priyank Pincha, லைஃப்ஸ்டைல் ஹவுசிங் & இன்பிராஸ்டிரக்சர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்வு, ஆர்சாப்டின் 12வது ஆண்டு விழாவையும் 12x12x12 பயணத்தை விழாக்கருத்தாகக் கொண்டு 12வது ஆண்டு விழா நடைபெற்றது 12 முன்னோடியான தயாரிப்புகள், 12 முக்கிய தொழில்துறைகளில் செயல்பாடு, மற்றும் 12 நாடுகளில் ஆர்சாப்டின் விரிவாக்கத்தை குறிக்கிறது. இது, தொழில்துறை…
Read More
அருண் விஜய்யின் “ரெட்ட தல” பட டீசரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் !!

அருண் விஜய்யின் “ரெட்ட தல” பட டீசரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் !!

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள “ரெட்ட தல” படத்தின் அதிரடியான டீசரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க, பட அறிவிப்பு முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இந்தப்படத்தின் டீசரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் தன் சமூக வலைத்தளம் வழியாக வெளியிட்டார். முழுக்க முழுக்க ஸ்டைலீஷாக ஆக்சன் ரொமான்ஸ் கலந்து, ஒரு கலர்ஃபுல் எண்டர்டெயினராக, அருண் விஜய்யின் இரண்டு விதமான லுக்கை காட்டும், இந்த டீசர் படம் பற்றிய ஆவலைத்தூண்டுவதாக அமைந்துள்ளது. இந்த டீசர் வெளியான வேகத்தில் இணையம் முழுக்க வைரலாக பரவி ரசிகர்களிடம் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. நடிகர் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார், இவர்களுடன் தான்யா…
Read More
ZEE5  “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா” படத்தை பிரீமியர் செய்யவுள்ளது. !!

ZEE5 “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா” படத்தை பிரீமியர் செய்யவுள்ளது. !!

~ சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் நீதி மன்ற பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15 முதல், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது ~ இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, வரும் சுதந்திர தினத்தன்று, எளியவர்களுக்குக் குரல் கொடுக்க, அமைப்பைக் கேள்விக்குட்படுத்தத் துணிந்த, அமைதியாக இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்கும் ஒரு கதையை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் "ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா" ஒரு அழுத்தமான மலையாள திரைப்படமாகும். இப்படத்தினை பிரவீன் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் J பனிந்திர குமார் தயாரித்ததுள்ளார். சேதுராமன் நாயர் கன்கோல் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். சுரேஷ் கோபி தார்மீக ரீதியாக செயல்படும் வழக்கறிஞர் டேவிட் ஆபெல் டோனோவனாகவும், அனுபமா பரமேஸ்வரன் ஜானகி என்ற பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படம், ஒரு கொடூரமான பாலியல்…
Read More
“மதராஸி” படத்தின் முதல் சிங்கிள் “சலம்பல” பாடல் வெளியானது !!

“மதராஸி” படத்தின் முதல் சிங்கிள் “சலம்பல” பாடல் வெளியானது !!

டைம்ஸ் மியூசிக்கின் ஒரு பிரிவான ஜங்லீ மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான "மதராஸி" படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை வெளியிட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடல், இந்த ஜோடியின் 8வது படத்தில், ரசிகர்களின் ஃபேவரைட்டாக வெளியாகியுள்ளது. துடிப்பான குரல் மற்றும் பன்முக வித்தகராக, வளர்ந்து வரும் சக்தி வாய்ந்த இளம் திறமையாளர், சாய் அபயங்கர் தனது பிரத்யேகமான குரலில், துடிதுடிப்பான “சலம்பல” பாடலை பாடியுள்ளார். அனிருத்தின் முத்திரை இசையில், அதிரடி டியூனில், மனதை அதிரடிக்கும் தாளத்தில், அழுத்தமான பிரேக்அப் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. "மதராஸி" படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறுகையில், நாங்கள் வழக்கமான பிரேக்அப் பாடல் மனநிலையிலிருந்து விடுபட்டு "சலம்பல” பாடலை, மாறுபட்ட பாடலாக உருவாக்க விரும்பினோம். இது வித்தியாசமான, கணிக்க முடியாத பாடலாக இருக்கும், மேலும் SK உடன் இணைவது எப்போதும் மிரட்டலான ஒன்றாக இருக்கும். இயக்குநர் முருகதாஸின் தொலைநோக்குப்…
Read More
காந்தாரா: சாப்டர் 1 ‘ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!!

காந்தாரா: சாப்டர் 1 ‘ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!!

  'காந்தாரா : சாப்டர் 1' படத்தின் மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இது மூன்று வருட சினிமா பயணத்தின் சக்தி வாய்ந்த பார்வையை வழங்குகிறது ' ராஜ குமாரா' , 'கே ஜி எஃப்', 'சலார் ' மற்றும் ' காந்தாரா' போன்ற சாதனை படைத்த படங்களுக்கு பின்னால் உள்ள - அனைவராலும் பாராட்டப்பட்ட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், நேற்று 'காந்தாரா :சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.‌ படத்தின் பின்னணியில் உள்ள காவிய தன்மையின் அளவையும், அதற்கான கடினமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இந்த வீடியோ வழங்குகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்ததைக்கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், 250 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பின் உச்சக்கட்டத்தை விவரிக்கிறது. மேலும் இது மூன்று ஆண்டுகளுக்கும் மேலான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். ஆயிரக்கணக்கானவர்கள் இப்படத்தின் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும்…
Read More
கன்னடத்து பைங்கிளி: பி. சரோஜா தேவி-நினைவஞ்சலி!

கன்னடத்து பைங்கிளி: பி. சரோஜா தேவி-நினைவஞ்சலி!

இந்தியத் திரைப்பட உலகின் மறக்க முடியாத நட்சத்திரமாக விளங்கிய பி. சரோஜா தேவி  2025 ஜூலை 13 நேற்று தனது 87-வது வயதில் பெங்களூருவில் காலமானார். “கன்னடத்து பைங்கிளி”, “அபிநய சரஸ்வதி”, “கனவு கன்னி” என்று பல புனைப்பெயர்களால் அன்போடு அழைக்கப்பட்ட இவர், கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்தவர். இவரது மறைவு, இந்தியத் திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். திரைப்பயணத்தின் தொடக்கம் 1938 ஜனவரி 7-ஆம் தேதி பெங்களூரில், காவல்துறை அதிகாரி பைரப்பா மற்றும் இல்லத்தரசி ருத்ரம்மாவின் நான்காவது மகளாகப் பிறந்தவர் சரோஜா தேவி. 17 வயதில், 1955-ல் ‘மகாகவி காளிதாசா’ என்ற கன்னடத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் அவரது திரையுலக பயணத்திற்கு அடித்தளமிட்டது. கன்னடத்தில் தாம் நடித்த முதல் படத்திலேயே கதாநாயகியாகப் புகழ்பெற்ற அவர், 1958…
Read More
“பைசன் காளமடான்”, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!

“பைசன் காளமடான்”, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும், ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பைசன் காளமாடன்” திரைப்படம், வரும் 2025 அக்டோபர் 17 அன்று, தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின், ஆழமான கதையை சொல்ல வருகிறது. நடிகர் துருவ் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தமிழ்த் திரையுலகப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது. மாறுபட்ட கதைக்களத்தில், அழுத்தமான திரைக்கதையுடன், மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பில், புதுமையான அனுபவம் தரும் படைப்பை, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் வழங்கியுள்ளது.
Read More
error: Content is protected !!