16
Aug
சுதந்திர தினத்தை முன்னிட்டு, மும்பையின் புகழ்பெற்ற பாந்த்ரா-வோர்லி கடல் பாலம் (Bandra Worli Sea Link) ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவான பெரும் எதிர்பார்ப்புமிக்க திரில்லர் படமான ‘டெஹ்ரான்’ திரைப்படத்தின் மாபெரும் விளம்பர மேடையாக மாறியது. ZEE5-இல் வெளியாகும் முன்பு, பாலம் முழுவதும் ஒளிர்ந்த திரைப்படத்தின் கண்கவர் போஸ்டர், பயணிகள் மற்றும் பாதசாரிகளின் பார்வையை கவர்ந்து, அனைவரும் தங்கள் மொபைலில் அந்த தருணத்தை படம் பிடிக்க வைக்கும், உற்சாக தருணமாக மாறியது. இந்த அபூர்வமான புரஜெக்சன், சுதந்திர தின வாரத்தின் தேசப்பற்று உணர்வையும், உளவு திரில்லர் திரைப்படத்தின் அதிரடி துடிப்பையும் ஒருங்கிணைத்தது. இரவின் இருளில் ஒளிர்ந்த கடல் பாலம், தேசப்பற்று மற்றும் சினிமா காட்சியின் கலவையாக, ஒரே நேரத்தில் கொண்டாட்டத்தையும் உற்சாக அனுபவத்தையும் அளித்தது. இந்நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்ற ஜான் ஆப்ரஹாம், இதை “பெருமையும் மறக்க முடியாத தருணமும்” என்று விவரித்து, டெஹ்ரான்-படத்தில் பங்கேற்றது ஒரு அற்புதமான பயணமாக இருந்தது என்றார்.…