தமிழ் சினிமாவின் தந்தை  என்று கூறப்படும் R நடராஜ முதலியார்!

தமிழ் சினிமாவின் தந்தை என்று கூறப்படும் R நடராஜ முதலியார்!

தமிழகத்திற்கு 5 முதலமைச்சர்களைக் கொடுத்த தமிழ் சினிமாவின் தந்தை யார் என்றே நம்மில் பலருக்குத் தெரியாது. அவர் பெயர் R நடராஜ முதலியார்!  இந்தியாவின் முதல் மவுனப் படமான ‘ஹரிச்சந்திரா’ துண்டிராஜ் கோவிந்த பால்கே என்ற மராட்டியரால் 1913-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதை வாங்கி பாம்பே காரனேஷன் தியேட்டரில் வெளியிட்டவர் இந்திய சினிமாவின் தந்தை எனப் புகழப்படும் தாதா சாகிப் பால்கே. பம்பாயில் திரையிடப்பட்ட அடுத்த ஆண்டே மதராஸுக்கு வந்த ‘ஹரிச்சந்திரா’, கெயிட்டி தியேட்டரில் 1914-ம் ஆண்டு திரையிடப்பட்டது. அதைக் காண வந்தார் 29 வயதே நிரம்பிய இளைஞரான ஆர். நடராஜ முதலியார். புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலையில் கார் கம்பெனி நடத்திவந்த அவரை அந்தப் படம் பெரிதும் பாதித்தது. ஆங்கிலேய வியாபாரிகள் நடத்திவந்த ‘அடிசன் & கம்பெனி’ என்ற கார் விற்பனை கடை மட்டுமே அன்று மதராஸில் இருந்த நிலையில் ஆங்கிலேயர் அல்லாத ஒருவரால் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கார் ஷோரூம் நடராஜ…
Read More
கோலிவுட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’

கோலிவுட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’

தமிழ் சினிமாவின் கருவறை ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’. சென்னையில் மையம் கொண்டு இன்று ஆஸ்கர் வரை ஆழப்பாய்ந்து புதுமைகளால் வியக்க வைப்பதில் தமிழ் சினிமாவுக்கு தனி இடம் உண்டு. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் சினிமாத்துறையின் அத்தனை புதுமைகளையும் அரை நூற்றாண்டுக்கு முன்பே பரீட்சித்துப் பார்த்தது. முதல் பேசும் படம், முதல் ஜாவா கலர் படம், முதல் திகில் படம், முதல் சமூகப் படம், முதல் இரட்டை வேடம், முதல் விளம்பரப் படம், தமிழகத்தின் முதல் ஆங்கிலப் படம் என்று அத்தனை சாதனைகளுக்குமான முதல் விதை இங்குதான் விதைக்கப்பட்டது. இன்றைய சினிமா பெண்ணை வணிகப் பொருளாக பயன்படுத்தி வரும் நிலையில் சினிமாவின் துவக்க காலம் வேறு மாதிரியாக இருந்தது. பெண்கள் சினிமாவில் கால் பதிக்க வருவதே சாதனையாக பார்க்கப்பட்ட அந்தக் காலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் பெண்களுக்கு சம உரிமை அளித்தது. பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து கண்ணியம் போற்றி பெருமை சேர்த்துள்ளது. சேலம்-ஏற்காடு சாலையில் 1935ல்…
Read More
உலக நாயகன் கமல் எண்ட்ரி ஆன ’களத்தூர் கண்ணம்மா’!

உலக நாயகன் கமல் எண்ட்ரி ஆன ’களத்தூர் கண்ணம்மா’!

உலக நாயகன் என்று வர்ணிக்கப்படும் கமல்ஹாசனை தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய படம் ஏ.வி.எம்மின் "களத்தூர் கண்ணம்மா'. சிறுவனாக இருந்த கமல் நடிக்கும் ஆர்வத்தில் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரை சந்தித்தான். முதல் சந்திப்பிலேயே அவருடைய மனதைக் கவர்ந்ததனால் "களத்தூர் கண்ணம்மா'வில் நடிக்கும் வாய்ப்பு கமலுக்குக் கிடைத்தது. முன்னதாக திரைப்படங்களை வாங்கி விநியோகித்த ஏ.வி.எம்.மின் பிள்ளைகள் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தடை கூறாது அனுமதி வழங்கினார்.அதற்கும் முன்னதாக பட்டுவும் கிட்டுவும் என்ற கதையைப் படித்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நல்ல கதை. ஆனால் இப்போதைக்கு தன்னால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக ஜவார் சீதாராமனுக்கு தெரிவித்தார். படம் தயாரிப்பதற்கு தகப்பன் அனுமதி வழங்கிய பின்னர் கதையைத் தேடி அலைந்த சரவணனும் சகோதரர்களும் ஜவார் சீதாராமன் எழுதிய நல்ல கதை ஒன்று அப்பாவிடம் இருப்பதை அறிந்த பிள்ளைகள் அந்தக் கதையை படமாக்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.…
Read More
எம்.ஜி.ஆரின் ராஜாதேசிங்கு பட கலாட்டா!

எம்.ஜி.ஆரின் ராஜாதேசிங்கு பட கலாட்டா!

  இலட்சிய நடிகர் எனப்பெயர் பெற்றவர்எஸ். எஸ். ராஜேந்திரன். இவரை எஸ்.எஸ். ஆர். என்று அன்புடன் அழைப்பார்கள். இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும்அருமையானது. நடிகர் திலகத்துக்குஇணையாக வசனம் பேசி நடிக்கும் திறமை உள்ளவர் எஸ். எஸ். ஆர்.எஸ். எஸ். ஆரும் எம்.ஜி. ஆரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். திராவிடமுன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய மக்கள் திலகம் அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த போது அவருடன்இணைந்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றிக்காகப் பாடுபட்டதுடன்அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் சட்டசபைத் தேர்தலில்நின்று வெற்றிபெற்றவர். லேனா செட்டியார் என்பவர் "ராஜா தேசிங்கு' என்ற படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகவும் நாட்டியப் பேரொளி பத்மினி கதாநாயகியாகவும் நடிப்பது என்றுமுடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆரின் நண்பனாக என்.டி. ராமராவும் அவரது ஜோடியாக பானுமதியும் நடிப்பது எனவும் தயாரிப்பாளர் திட்டமிட்டார்."ராஜா தேசிங்கு' படத்துக்கு கவியரசுகண்ணதாசன் வசனம் எழுதினார். கவிய ரசு கண்ணதாசனின் வசனங்களை படித்த…
Read More
எம்.ஜி.ஆர்-கிட்டே இருந்த ரியல் தாய் பாசம் – சிவகுமார் நினைவூட்டிய நிகழ்ச்சி

எம்.ஜி.ஆர்-கிட்டே இருந்த ரியல் தாய் பாசம் – சிவகுமார் நினைவூட்டிய நிகழ்ச்சி

டிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து 1965-ம் ஆண்டில் வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார். அதன்பின்னர், 'கந்தன் கருணை', 'உயர்ந்த மனிதன்' உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து இன்றளவும் . தமிழக திரைத்துறையில் நன் மதிப்புடன் இருப்பவர் சிவக்குமார். சூர்யா, கார்த்திக் என்ற இரண்டு நடிகர்களை வீட்டிலேயே வைத்திருப்பவர். சிறந்த பேச்சாளாரான அவர் எம்.ஜி.ஆர் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொண்ட பேச்சு இது: ”உலகத்தின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அன்பு காட்டுவது என்கிறார்கள். பிற மனிதனை நேசிப்பதைவிட உயர்ந்த விஷயம் எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார்கள். அதாவது காசு பணம் கொடுப்பது வேறு. துணி மணிகள் அளிப்பது வேறு. ஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய…
Read More
எம்.ஜி.ஆர் நடித்த “மலைக்கள்ளன்”  – ஒரு சுவையான பின்னணி!

எம்.ஜி.ஆர் நடித்த “மலைக்கள்ளன்” – ஒரு சுவையான பின்னணி!

”மலைக்கள்ளன்”, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலாகும். அதை படமாக்க ஸ்ரீராமுலு நாயுடு முடிவு செய்ததும், அதற்கு வசனம் எழுத கருணாநிதியை அழைத்தார். “பராசக்தி” வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த நேரம் அது. “மனோகரா” படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார். “நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்று அஞ்சுகிறேன்” என்று கூறி, வசனம் எழுத மறுத்து விட்டார். இந்த சமயத்தில், ஸ்ரீராமுலு நாயுடுவை எம்.ஜி.ஆர். சந்தித்தார். “மலைக்கள்ளன் படத்திற்கு கலைஞர் வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்” என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியமும் (வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.…
Read More
’எப்படி இருந்த’ சினிமா  “இப்படி ஆயிடுச்சு!” – 1

’எப்படி இருந்த’ சினிமா “இப்படி ஆயிடுச்சு!” – 1

திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டைரக்ஷன் என்பன ஒரு படத்தை உச்ச நிலைக்கு உயர்த்துகின்றன. ஆரம்பகால தமிழ்த்திரைப்படங்களைப் பாடல்களே ஆக்கிரமித்தன 85 சங்கீதங்கள் நிறைந்த படம் எனறே அறிமுகப்படுத்துவார்கள். ஹரிதாஸ், சிந்தாமணி போன்ற படங்களின் பாடல்களை அந்த காலத்து ரசிகர்கள் இன்றும் …கித்துப் பேசுவார்கள். பாடல்களுக்கிடையே ஒரு சில வசனங்கள் பேசப்படும் அன்பே, சுவாமி, கண்ணே, நாதா, ஆரமுதே, பிராணநாதா போன்ற சொற்கள் அடிக்கடி உச்சரிக்கப்படும் நாயகனும் நாயகியும் எட்ட நின்றே உரையாடுவார்கள். கையைப் பிடிப்பார்கள் கட்டிப்பிடிக்கமாட்டார்கள். 1935 ஆம் அண்டு வெளிவந்த மேனகா என்ற படம் இந்தக் கட்டுப்பாடுகளை உடைத்தெரிந்தது. முத்தம், கற்பழிப்பு என்பன இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியது. முத்தம் என்றதும் கன்னாபின்னாவென்று கற்பனை செய்ய வேண்டாம். கை, கன்னம் உச்சியென்பனவற்றிலே தான். நாயகன் முத்தமிட்டான் இப்படத்தைப்பற்றிய விமர்சனங்கள் கடுமையாக…
Read More
ரஜினி + ஷங்கரின் கூட்டணியில் உருவாகும் 2.0 மார்ச வரை ஷூட்டிங்!

ரஜினி + ஷங்கரின் கூட்டணியில் உருவாகும் 2.0 மார்ச வரை ஷூட்டிங்!

ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் 350 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வந்தது. கிராபிக்ஸ் காட்சிகளின் பணியை மெருகேற்றும் விதமாக, அப்பணிகளுக்கு மேலும் 50 கோடியை ஒதுக்கியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். இதன் மூலம் படத்தின் பொருட்செலவு சுமார் 400 கோடிக்கு ஆகியிருக்கிறது. சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒருபுறம் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தாலும், மறுபுறம் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 3டி தொழில்நுட்பக் கேமிராவில் படமாக்கப்பட்டுவருவதால், இரண்டு கேமிராக்களில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்திவருகின்றனர். அதாவது, ஒரே காட்சியை இரண்டு கேமிராக்களில் ஒரே நேரத்தில் படமாக்குகின்றனராம், அதன்பின்  இரண்டு கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் தனித்தனியே கிராஃபிக்ஸ் செய்து காட்சியை உருவாக்கிவருகின்றனர். அதுபோல, ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும்…
Read More
error: Content is protected !!