காதல் என்பது பொதுவுடமை படம் TentKotta OTT யில் வெளியானது. !!

காதல் என்பது பொதுவுடமை படம் TentKotta OTT யில் வெளியானது. !!

சிறந்த படம் என்கிற விமர்சனத்தை பெற்ற காதல் என்பது பொதுவுடமை படம் TentKotta OTT யில் வெளியானது. BOFTA G. தனஞ்ஜெயன் வெளியீட்டில் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'காதல் என்பது பொதுவுடமை' . மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக வரும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசுகிற படம் . ரோகிணி, லிஜோமோல் , வினித் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படம் சர்வதேச திரைப்படவிழாக்களிலும் சிறந்த வரவேற்பைபெற்றிருந்தது. 'நல்ல திரைப்படங்களுக்கு எப்போதும் வரவேற்ப்பு கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு 'என்று இத்திரைப்படத்தை இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் G தனஜ்செயன் வெளியிட்டிருந்தார். சிறந்த படம் என்று பார்வையாளர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டுக்களை பெற்றிருந்தது. படம் இன்று TENTKOTTA OTT தளத்தில் வெளியாகியுள்ளது.
Read More
கமலுக்கு வெளி வேலை இல்லை- ராதாதவி

கமலுக்கு வெளி வேலை இல்லை- ராதாதவி

டர்ம் புரொடக்ஷன்ஸ் பேனரில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியுள்ள 'ட்ராமா' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினருடன் நடிகர் 'டத்தோ' ராதா ரவி மற்றும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர். அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், 'ஸ்மைல்' செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவை கவனிக்க. ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார் . படத்தொகுப்பு பணிகளை முகன்வேல் கையாள, கலை இயக்கத்தை முஜிபுர் ரகுமான் மேற்கொண்டிருக்கிறார். மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. வரும் 21ம் தேதியன்று…
Read More
ஆச்சரியங்களை அள்ளித் தெளிக்கும் ’ஜென்டில்வுமன்’ திரைப்படம் !!

ஆச்சரியங்களை அள்ளித் தெளிக்கும் ’ஜென்டில்வுமன்’ திரைப்படம் !!

இயக்குனர் - ஜோஷ்வா சேதுராமன் நடிகர்கள் - லிஜோ மோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா இசை - கோவிந்த் வசந்தா தயாரிப்பு - கோமளா ஹரி பிக்சர்ஸ் - கோமளா ஹரி , ஹரி பாஸ்கரன் அறிமுக இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் முழுக்க பெண்களை மையமாக வைத்து வந்திருக்கும் படம். ஒரு மலையாள பட சாயல் அதிகமாக தெரிந்தாலும், படம் முழுக்க ஆச்சரியங்களை அள்ளித் தெளித்து கொண்டிருக்கிறது இந்த ஜெண்டில்வுமன்.   சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு தம்பதியர் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர், தன் மீது கணவர் அளவுக்கு அதிகமான பாசத்தோடு இருக்கிறார் என்று நினைக்கும் போது, கணவரின் செல்போன் மூலம் அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை தெரிந்துக் கொள்கிறார். இதனால் கடும் கோபமடையும் அப்பெண் எதிர்பாராமல் கணவரை கொலை செய்து விடுகிறார். இரத்த வெள்ளத்தில் கணவர் இறந்ததை பார்த்து சற்றும் கலங்காதவர்,…
Read More
“எமகாதகி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

“எமகாதகி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கிராம பின்னணியில், முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக , கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் "எமகாதகி". வித்தியாசமான களத்தில், ஒரு தரமான படைப்பாக பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசராவ் ஜலகம் பேசியதாவது.... இப்படத்திற்கு பெரும் ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. நான் 20 வருடங்களாகத் தமிழ் நாட்டில் வேலை பார்த்து வருகிறேன். இது கலாச்சாரத்தைப் போற்றும் நிலம். இந்த தமிழ் நாட்டிற்கு ஏதாவது பணியாற்ற வேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இந்தக்கதையைச் சொன்ன போது, அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தை இணைந்து தயாரித்த கணபதி ரெட்டிக்கு என் நன்றி. இப்படத்திற்காக உழைத்திட்ட…
Read More
 ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு !!

 ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு !!

YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா  சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 'ஸ்வீட்ஹார்ட் ' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார். எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின்…
Read More
தேன் குரல் ஸ்ரேயா கோஷல் பர்த் டே டுடே!

தேன் குரல் ஸ்ரேயா கோஷல் பர்த் டே டுடே!

சவுத்திலிருந்து தென்றலாய் வீசிய குரல்களைப் போலவே, நார்த்திலிருந்து வீசிய வாடைக் குரல்களுக்கும் கோலிவுட் சினிமாவில் பஞ்சமில்லைதான். கான்பூரைப் பூர்விகமாகக் கொண்ட கே.ராணி, கொல்கத்தாவில் பிறந்து, வளர்ந்த பாம்பே ஜெயஸ்ரீ, மதுஸ்ரீ, இந்தியாவின் வானம்பாடி சகோதரிகள் லதா மங்கேஷ்கர் - ஆஷா போஸ்லே, சாதனா சர்கம், மால்குடி சுபா, மகாலஷ்மி ஐயர், டெல்லியில் பிறந்த கவிதா கிருஷ்ணமூர்த்தி அப்படீன்னு தமிழ் தெரிஞ்ச, தெரியாத பாடகியர் பலர் இருந்தாலும் பாடல்களின் எண்ணிக்கை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத ஒருவர் தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும் விதம், விருதுகளின் எண்ணிக்கை ஆகிய அளவுகோல்களில் ஸ்ரேயா கோஷல் தொட்ட உயரத்தைத் தொட்டதில்லை என்பதுதான் உண்மை. தமிழில் மட்டுமே 250 பாடல்களைப் பாடி முடிச்சுப்புட்டார். அந்த ஒரு குரல்.. பல சாதனைகளை படைத்தும், உடைத்தும் உள்ளது அந்த குரல்..எந்த ஒரு இளம் பாடகியும் அடைந்திடாத புகழுக்கு சொந்தகாரி அவர் இசை மேடைகளில், மேக் சம் நாய்ஸ், (make some noise) கம்…
Read More
கடல் பேய் கதை சொல்லும் ’கிங்ஸ்டன்’ !!

கடல் பேய் கதை சொல்லும் ’கிங்ஸ்டன்’ !!

இயக்கம் - கமல் பிரகாஷ் நடிகர்கள் - ஜிவி பிரகாஷ் குமார், திவ்யா பாரதி, சேதன் , அழகம் பெருமாள், இசை - ஜிவி பிரகாஷ் குமார் தயாரிப்பு - ஜீ ஸ்டுடியோ & ஜிவி பிரகாஷ் குமார் நடிகர் ஜிவி பிரகாஷ் 25 வது படமாக அவரே தயாரித்து இசையமைத்து நடித்துள்ள படம். இது அவரது முதல் தயாரிப்பு  ஆனால்  என்ன சிறப்பு ? தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு  கடற்கரை கிராம மக்களின் வாழ்க்கையில் மையம் தான் கதை. அங்குள்ளவர்கள் மீன்பிடி தொழிலை நம்பியிருந்தாலும், அவர்களால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியவில்லை. காரணம், பேராசை பிடித்த ஒருவரது ஆன்மா அந்த கடலை ஆட்கொண்டு அங்கு வருபவர்களை கொன்று குவிப்பது தான். இதனால், அந்த ஊர் மக்கள் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு, கிடைக்கும் வேலைகளை செய்கிறார்கள். சில இளைஞர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்த…
Read More
‘பெருசு’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

‘பெருசு’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’. திரையரங்குகளில் மார்ச் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், "'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்குப் பிறகு இன்னும் பெரிதாக என்ன செய்யலாம் என்று நாங்கள் காத்திருந்தபோது வந்த படம் தான் 'பெருசு'. இளங்கோவுக்கு அதற்கு நன்றி. ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் 16ஆவது படம் இது. அடல்ட் ஃபிலிம் என்றாலே சில விஷயங்களை டார்கெட் பண்ணி தான் இந்தியாவில் படங்கள் இருக்கும். ஆனால், மேற்கத்திய நாடுகளில் இதை இந்த சுவாரசியமாகவும் முகம் சுழிக்காத விதமாகவும் எடுப்பார்கள். இந்த விஷயங்களை 'பெருசு' படத்தில் உடைத்து சிறப்பாக கொண்டு வந்திருக்கிறோம். அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம். இதை சாத்தியப்படுத்தி கொடுத்த…
Read More
“அந்தோனி” பட திரைப்பட படப்பிடிப்பு, இலங்கையில் ஆரம்பமாகியது !!

“அந்தோனி” பட திரைப்பட படப்பிடிப்பு, இலங்கையில் ஆரம்பமாகியது !!

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்… “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த T.J.பானு நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பு, பூஜையுடன் இலங்கையில் ஆரம்பமாகியது. ஓசை பிலிம்சின் கலை வளரி சக இரமணா - சுகா , விஜய் பாலசிங்கம் பிலிம்சின் விஜய் சங்கர், டிரீம் லைன் புரடக்‌ஷன்சின் சிரீஸ்கந்தராஜா மற்றும் கனா புரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெறயிருக்கும் இப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு நண்பர்கள் இணைந்து இயக்குகின்றனர். இத்திரைப்படத்தை கயல் வின்சன்ட் மற்றும் T.J பானுவுடன் சேர்ந்து இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், செளமி போன்றோரும் தமிழகத்திலிருந்து அருள்தாஸ் போன்ற நடிகர்கள் என இரு நாட்டினரும் சேர்ந்து நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தை “மணல்” என்கிற திரைப்படத்தினூடாக சர்வதேச விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம்…
Read More
‘வருணன்- காட் ஆஃப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்டம்!!

‘வருணன்- காட் ஆஃப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்டம்!!

யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி - சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'வருணன் - காட் ஆப் வாட்டர்'' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'வருணன் - காட் ஆஃப் வாட்டர்' திரைப்படத்தில் டத்தோ ராதாரவி, சரண்ராஜ் , துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா, சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன், ஹைடு கார்த்தி, பிரியதர்ஷன், கௌஷிக், துங்கன் மாரி, கிரண் மயி, பேபி ஜாயிஸ் , ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீ ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை யு. முத்தையன் கையாள, கலை இயக்கத்தை பத்து கவனித்திருக்கிறார். 'நீரின்றி அமையாது உலகு' எனும் டேக் லைனுடன் தயாராகி இருக்கும் இந்த…
Read More