24
May
Tam’s Consultancy நிறுவனம் சார்பில், தமிழ்வாணன் தயாரித்து, நாயகனாக நடிக்க, போங்கு பட இயக்குநர் தாஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தின் அடிப்டையில் அசத்தலான புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது. உலகில் பணத்தை விட அதிகாரம் தான் பெரியது. இதைப் புரிந்து கொண்ட ஒருவன், வாழ்வில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து என்ன செய்கிறான் என்பது தான் இந்தக்கதையின் மையம். அந்த இளைஞனுக்கு ஏற்படும் காதலில் வரும் பிரச்சனைகளையும், அவன் நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், தன் அதிகாரத்தால் எப்படி சரி செய்கிறான் என்பது தான் இப்படத்தின் கதை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் குடும்பத்தினருடன் ரசிக்கும் காதல் காமெடி கலந்து ஒரு அட்டகாசமான கமர்சியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது. நட்டி நடிப்பில் 'போங்கு' படத்தை இயக்கிய தாஜ் இயக்கும் இரண்டாவது படம். இப்படத்தை, எழுதி, இயக்குகிறார். நாயகனாக தமிழ்வாணன் நடிக்க இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை சாய்…
