ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ – Google டிரெண்டிங்கில் நம்பர் 1!

ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ – Google டிரெண்டிங்கில் நம்பர் 1!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, கடந்த ஜூன் 20-ஆம் தேதி, மலையாள முன்னணி நடிகர் திலீப் நடித்த ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்படத்தைத் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியிட்டது. திரை ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், Google இல் ரசிகர்களின் விருப்பத் தேடலில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளது. மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் திலீப்பின் 150வது படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நவீன கால குடும்ப உறவுகளின் விசித்திரங்களையும், டிஜிட்டல் சோஷியல் மீடியா குடும்பங்களில் எவ்வளவு தாக்கத்தை உருவாக்குகிறது என்பதையும், நகைச்சுவை கலந்து, ஒரு அருமையான ஃபேமிலி எண்டர்டெயினராக சொல்லும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் பாராட்டுச்செய்திகளைத் தொடர்ந்து, ரசிகர்கள் இணையத்தில் படத்தைப் பற்றி அதிகம் தேட, Google டிரெண்டிங்கில் இப்படம் முதலிடத்தைப் பிடித்தும் சாதனை படைத்துள்ளது. எழுத்தாளர் ஷாரிஸ் முகமது எழுதியுள்ள…
Read More
‘மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !!

‘மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !!

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும் நல்ல படைப்பு என்ற விமர்சனத்தை வழங்கி வருகிறது. இதனால் இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நடிகர் 'லொள்ளு சபா' சாமிநாதன்…
Read More
நாகபந்தம் படத்திற்காக 10 கோடியில் உருவாக்கப்பட்ட  பிரம்மாண்டமான செட் !

நாகபந்தம் படத்திற்காக 10 கோடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான செட் !

விராட் கர்ணா, அபிஷேக் நாமா, கிஷோர் அன்னபுரெட்டி, NIK ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸ், பான் இந்தியா திரைப்படமான “நாகபந்தம்” படத்தின் பாடல் ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்க ஆனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் பிரம்மாண்ட செட்டில் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இளம் ஹீரோ விராட் கர்ணா, இந்த பான் இந்திய திரைப்படமான நாகபந்தத்தில் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார். அபிஷேக் பிக்சர்ஸுடன் இணைந்து NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கிஷோர் அன்னபுரெட்டி இப்படத்தை தயாரிக்கிறார். லட்சுமி இரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோர் பெருமையுடன் இப்படத்தை வழங்குகிறார்கள். படத்தின் முன்னோட்டம், அதைத் தொடர்ந்து வந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விராட் கர்ணா இந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டுள்ளார். அதிரடி அவதாரத்தில் தோன்றிய அவரது ஜிம் படங்கள் படத்திற்கான அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகின்றது. படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது,…
Read More
வித்தியாசமான புரமோ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ZEE5 !!

வித்தியாசமான புரமோ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ZEE5 !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான "டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படம், ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் விதத்திலும், ரசிகர்களைக் கவரும் விதத்திலும், "டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தின் பேய் தீமை அடிப்படையாக வைத்து, ஒரு வித்தியாசமான புரமோ நிகழ்ச்சியை நடத்தியுள்ளது Zee5. சந்தானம் நடிப்பில் "டிடி நெக்ஸ்ட் லெவல்" படம் Zee5 தளத்தில் வெளியான வேகத்தில், 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை மேலும் மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில், Zee5 ஒரு பஸ்ஸில் படத்தின் தீமை மையமாக வைத்து, படத்தின் போஸ்டர்களுடன் படத்தின் கருவை மையமாகக் கொண்ட செட் அமைக்கப்பட்டு, அதில் பேய் வேடமிட்ட ஒருவர் உலாவும் வகையில் உருவாக்கி, சென்னை முழுக்க மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் காட்சிப்படுத்தி வருகிறது. முதல் முறையாக இந்த பஸ் மக்கள் அதிகம் புழங்கும்,…
Read More
*விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா*

*விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா*

  அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் நடிகர் - இயக்குநர் முருகானந்தம் பேசுகையில், '' இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஜூனியர்கள் சீனியர்களை இயக்குவது போல் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் கலைஞர்களை அவர்கள் கையாண்ட விதம் நன்றாக இருந்தது. ஒரு குடும்பம் போல் படப்பிடிப்பு தளம் கலகலப்பாக இருந்தது. ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்கும். இந்தப் படத்தில் நடிக்க தொடங்கி நிறைவை எட்டிய போது, ஆஹா! படத்தின் படப்பிடிப்பு இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே? என்ற ஏக்கத்தை உண்டாக்கியது. இதுதான் இயக்குநர்…
Read More
நடிகர் விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!

நடிகர் விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில், காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படம், பூஜையுடன் துவங்கியது. காரைக்குடியில், படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியுள்ளது. மலையாளத் திரையுலகில் சமீபததில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற “ககனச்சாரி, பொன்மேன்” படங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் நிறுவனம், இந்த புதிய படம் மூலம், தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ளனர். தயாரிப்பாளர் விநாயகா அஜித் இப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார். இப்படத்தில் கதாநாயகனாக விமல் மற்றும் கதாநாயகியாக முல்லை அரசி நடிக்க, 'விடுதலை' சேத்தன், 'பருத்திவீரன்' சரவணன் உட்பட மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து, நடித்து வருகிறார்கள்.…
Read More
அஜித் அண்ணா தான் இன்ஸ்பிரேஷன் – நடிகர் மஹத் ராகவேந்திரா!

அஜித் அண்ணா தான் இன்ஸ்பிரேஷன் – நடிகர் மஹத் ராகவேந்திரா!

‘மங்காத்தா’, ‘பேக்பென்ச் ஸ்டூடண்ட்’, ‘டபுள் XL’ போன்ற படங்களில் தனது தனித்துவமான கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. தனது பிசிக்கல் டிரான்ஸ்ஃபர்மேஷனுக்காக தற்போது பாக்ஸிங் கற்றுள்ளார். கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பாக்ஸிங்கில் நடிகர் மஹத் கடுமையான பயிற்சி பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்றார். இந்த வருடம் அதாவது 2025 ஆஸ்திரேலிய சூப்பர் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான கோயன் மசூடியரிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்ததுதான் நடிகர் மஹத் குத்துச்சண்டை பயணத்தின் சிறப்பம்சம். இந்த அனுபவத்தை "சக்தி, வேகம், கவனம், சமநிலை மற்றும் திறமை ஆகியவற்றின் நம்பமுடியாத பயணம். இதில் பல சவால்கள் இருந்தாலும் அதை சமாளித்து பயிற்சி பெற்றேன். இது ஃபிட்னஸ் தொடர்புடையது மட்டுமல்ல, ஒரு போராளியின் மனநிலையையும் எனக்குள் உருவாக்கியது" என்று நடிகர் மஹத் கூறினார். மேலும் கோயனுடன் பயிற்சி பெற்றது பற்றி விவரிக்கும்போது, "கோயனிடம் பயிற்சி…
Read More
ரிலீஸுக்குத் தயாராகும் சயின்ஸ் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ’கைமேரா’ !!

ரிலீஸுக்குத் தயாராகும் சயின்ஸ் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ’கைமேரா’ !!

  நடித்த கதாபாத்திர பாதிப்பில் இருந்து மீள முடியாமல் மருத்துவ சிகிச்சை பெற்று மீண்ட ‘கைமேரா’ படத்தின் ஹீரோ பரமு, செல்பிஷ் படங்களை இயக்கிய மாணிக் ஜெய்.N இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. ‘வச்சுக்கவா’ படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் ‘பரமு’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக மாறினார். தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகி வரும் செல்பிஷ் என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது கைமேரா என்கிற படத்தை தயாரித்து, இயக்கி முடித்துள்ளார் மாணிக் ஜெய். இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.. மாறுபட்ட வேடங்களில் தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார் மற்றும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் மாணிக் ஜெய் நடித்துள்ளனர்.. கதையின் நாயகிகளாக சௌமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் நடித்திருக்கின்றனர்.. மனித உடம்புக்குள் மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டால், மனிதனின் குணம் மிருகக் குணமாக மாறினால் அதன் தாக்கம்…
Read More
‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம். தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை-இயக்குநர் ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக ரேவதி ஓடிடியில் அறிமுகமாகிறார். இதே சீரிஸ் இந்தியிலும் ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ என்ற பெயரில், நடிகர்கள் கஜோல் மற்றும் ஜிஷூ சென்குப்தா நடிப்பில் உருவானது. இது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகி வெற்றிப்பெற்றது. இப்போது தமிழ் ரசிகர்ளுக்கு ஏற்றபடி இந்த தொடர் உருவாகியுள்ளது. ஓடிடியில் இயக்குநராக அறிமுகவாது குறித்து நடிகை- இயக்குநர் ரேவதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தி ரீமேக்கில் ‘குட் வொய்ஃப்’ வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தமிழில் இதனை இயக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி.…
Read More
திரைக்கலைஞன்  நா. முத்துக்குமாருக்காக  இசை நிகழ்ச்சி !!

திரைக்கலைஞன் நா. முத்துக்குமாருக்காக இசை நிகழ்ச்சி !!

தமிழ்த் திரையுலகில் தனது பாடல்கள் மூலம் தனி முத்திரை பதித்ததோடு கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் நீங்காமல் நிறைந்து இருப்பவர் மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார். அவரது 5௦வது பிறந்தநாளை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர், இதற்கான முயற்சிகளை திரைத்துறையினர் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளனர். இதன் அறிவிப்பு நிகழ்வில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சம்மேளனத்தின் தலைவர் - இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் - இயக்குநர் ஆர் வி உதயகுமார், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ராம், தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர் விஜய் , எழுத்தாளர்கள் பவா செல்லத்துரை, அஜயன் பாலா ஆகியோர் கலந்துகொண்ட 'ஆனந்த யாழை' விழா சென்னையில் நடைபெற்றது. இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் திறம்பட நடத்தி வரும் ஏசிடிசி நிறுவனத்துடன் கைகோர்த்து ஆனந்த யாழை விழாவை நடத்த இருக்கின்றனர். வரும் ஜூலை 19 ஆம் தேதி இந்த விழா நேரு உள்ளரங்கம்- சென்னையில்…
Read More