13
Oct
சிலம்பரசன் TR - இயக்குநர் வெற்றிமாறன் - பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு - ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் 'அரசன்' படத்தின் ஐந்து நிமிட ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்கிலும், 17 ஆம் தேதி இணையத்திலும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, புதிய சாதனையை படைக்க உள்ளனர். சிலம்பரசன் TR நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு, 'அரசன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக்கும் கடந்த வாரம் வெளியானது. இதில் சிலம்பரசனின் தோற்றம் மற்றும் டைட்டில் ரசிகர்களை வெகுவாக வசீகரித்ததுடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற செய்தது. அத்துடன் படத்தை பற்றிய புது தகவல்களுக்காக ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் படக் குழுவினர் ப்ரோமோ வீடியோ குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டரை பகிர்ந்துள்ளனர். 'அரசன்' படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் ஐந்து நிமிட அளவிலான காணொலியை அக்டோபர் 16ஆம் தேதி அன்று மாலை ஆறு மணியளவில்…