“கண்ணம்மா  என்னம்மா” ஆல்பம் பாடல் வெளியீடு!

“கண்ணம்மா என்னம்மா” ஆல்பம் பாடல் வெளியீடு!

இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலபடுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், Noise and Grains புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. அஸ்கமாரோ, குட்டிப்பட்டாஸ் பாடல்களின் பிரமாண்ட வெற்றியினை தொடர்ந்து, Noise and Grains தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் பாடலாக, ரியோ ராஜ் மற்றும் பவித்ரா லக்‌ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “கண்ணம்மா என்னம்மா”. தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ JB இயக்கியுள்ளார். இன்று இப்பாடலின் வெளியீட்டு விழா, சின்னத்திரைபிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், சூப்பர் சிங்கர் பாடகர்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கலை நிகழ்வுகள், நடனம் என கோலகலமாக நடைபெற்றது. பாடலை நடன இயக்குநர் சாண்டி வெளியிட பிரபலங்கள் பெற்றுக்கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட செஃப் தாமு, நடிகை சுனிதா “கண்ணம்மா என்னம்மா” பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். *நடிகர் ரக்‌ஷன் பேசியதாவது…* ரியோ என் மச்சான். இவங்களோட திறமைய…
Read More
“நெஞ்சுக்கு நீதி” உடன் கலமிறங்கும் உதயநிதி!

“நெஞ்சுக்கு நீதி” உடன் கலமிறங்கும் உதயநிதி!

ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்கும், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் வழங்கும் உதயநிதி ஸ்டாலினின் “நெஞ்சுக்கு நீதி”படத்தின், டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது (more…)
Read More
வெளியானது சூர்யாவின் அடுத்த பட டீசர்

வெளியானது சூர்யாவின் அடுத்த பட டீசர்

  தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் ஜெய் பீம். அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா நாயகனாக நடிக்க டி ஜே ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. வெளியாகவுள்ள நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் பரபரப்பான டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசனின் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியாகிறது. தங்களுக்கென…
Read More
“கோல்மால்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

“கோல்மால்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

  Jaguar Studios சார்பில் B. வினோத் ஜெயின் தயாரிக்க, அறிமுக இயக்குநர் பொன் குமரன் இயக்கத்தில், நடிகர் ஜீவா, மிர்ச்சி சிவா, தான்யா ஹோப், பாயல் ராஜ்புத் நடிப்பில் காமெடி கலாட்டாவாக உருவாகும் புதிய திரைப்படம் “கோல்மால்”. முழுக்க முழுக்க மொரிஷியஸ் தீவில் படமாக்கப்படவுள்ள இப்படத்தில் ஆடுகளம் நரேன், பாடகர் மனோ சோனியா அகர்வால், சஞ்சனா சிங், சாது கோகுல் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இன்று 10.10.2021 காலை, விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் RB சௌத்திரி, தயாரிப்பாளர் தனஞ்செயன், உட்பட தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. பின்னர் பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வில் *கிரியேட்டிவ் புரடியூசர் நரேஷ் ஜெயின் பேசியதாவது…* இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நாங்கள் ஆரம்பித்துள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறோம். இயக்குநர்…
Read More
நயன்தாரா உடைய அடுத்த படத்தில் இணையும் கவின்

நயன்தாரா உடைய அடுத்த படத்தில் இணையும் கவின்

  கவின், விக்னேஷ் சிவன் உடைய அடுத்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர், இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் " காத்துவாக்குல ரெண்டு காதல்". விக்னேஷ் சிவன் இயக்கம் மட்டுமல்லாது, நயன்தாரா உடன் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமல்லாது, விஜய் டிவி தொலைகாட்சி சீரியல்களில் நடித்து வந்தவர். இவரது நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான " லிப்ட்" திரைப்படம் விமர்சகர் இடத்தில் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் கவினுடன்- பிகில் திரைப்பட தென்றல் அமிர்தா நடித்திருந்தார். விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளனர். அந்த நிறுவனத்தில் பல படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்களது தயாரிப்பில் அடுத்து உருவாக உள்ள படத்தில் நடிகர் கவின் நடிக்கிறார்.…
Read More
ஐஸ்வர்யா தனுஷ் உடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு!

ஐஸ்வர்யா தனுஷ் உடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு!

  நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடைய மகளும், நடிகர் தனுஷ் உடைய மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ்  தமிழில் ஒரு இயக்குனராக இருக்கிறார். தனுஷ் நடிப்பில் 2012-ல் 3 திரைப்படத்தின்  மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  அதன் பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் “ வை ராஜா வை “ திரைப்படத்தை இயக்கினார். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் உடைய அடுத்த படம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.  இந்தியன் 2, பொன்னியின் செல்வன் என பிரம்மாண்ட படங்களையும், பல முக்கிய படங்களையும் தயாரித்து வரும் லைகா நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் படத்தினை பற்றி அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா தனுஷ்  இயக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 2015-ம் ஆண்டிற்கு பிறகு, ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனராக கலமிறங்கும் படம். முக்கிய படங்களையும், முன்னணி நடிகர்களையும் வைத்து, படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம், இப்போது ஐஸ்வர்யா தனுஷ் உடன் இணைந்துள்ளது. படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றிய…
Read More
பெஃப்ஸி தொழிலாளர்களின் குடியிருப்பு திட்டத்திற்காக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை

பெஃப்ஸி தொழிலாளர்களின் குடியிருப்பு திட்டத்திற்காக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை

  ’விஜய் சேதுபதி போன்ற மனிதர்களால் தான் உலகம் தழைத்தோங்குகிறது’- ஆர்.கே.செல்வமணி ‘ஒரு கோடி மட்டுமல்ல...இன்னும் உதவுவேன்’ ஃபெப்ஸி விழாவில் விஜய் சேதுபதி திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ் தாணு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பெஃப்ஸியின் தலைவர் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பெஃப்ஸி நிர்வாகிகளிடம் வழங்கினார். முன்னதாக மேன் கைண்ட் ( Man Kind) என்ற நிறுவனம் சார்பில் முப்பத்தியோரு லட்ச ரூபாய் நிதி உதவியாக பெஃப்ஸி சம்மேளனத்தின் வங்கி…
Read More
இந்திய திரையுலகில் கால் பதிக்கும் உலகப்புகழ் வரலாற்று நாயகன் மைக் டைசன் !

இந்திய திரையுலகில் கால் பதிக்கும் உலகப்புகழ் வரலாற்று நாயகன் மைக் டைசன் !

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான LIGER ( saala Crossbreed )படத்தில் மைக் டைசன் இணைகிறார் ! கமர்ஷியல் படங்களின் ராஜாவாக திகழும் திறமைமிக்க இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் விஜய் தேவரகொண்டா அவர்களின் முதல் பன்மொழி இந்திய திரைப்படமான “LIGER” படத்தை, ஒவ்வொரு கட்டமாக மெருகேற்றுவதில், எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் பிரமாண்டமாக உருவாக்கிவருகிறார். மொத்த படக்குழுவிற்கும், ஆக்‌ஷன் ரசிகர்களுக்கும், மற்ற அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் முக்கியமான படமான இந்த படம் இருக்கும்.   அகிலம் அதிரும்படியான ஒரு அட்டகாச தகவலை LIGER படக்குழு வெளியிட்டுள்ளது. படக்குழு மிகபெருமையுடன் கூறுவது என்னவென்றால், இந்திய திரைப்படங்களில் முதன்முறையாக, உலக அளவில் வரலாறு படைத்த ஒரு நபர், யாராலும் அசைக்கமுடியாத ஜாம்பவான், மைக் டைசன், பெருமைமிக்க பன்மொழி திரைப்படமான LIGER படத்தில் இணைகிறார். ஆம், நீங்கள் இப்பொழுது வாசித்தது சரி தான். மிகவும் ஆக்ரோஷம்…
Read More
வெற்றி விழா கொண்டாடிய ” கோடியில் ஒருவன் “

வெற்றி விழா கொண்டாடிய ” கோடியில் ஒருவன் “

விஜய் ஆண்டனி ,ஆத்மிகா  நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD  ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பட  கோடியில் ஒருவன் படக்குழு மற்றும் பலர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர். விஜய் ஆண்டனி பேசியவை: வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. விழாவின் நாயகன் உண்மையாகவே ஆனந்தகிருஷ்ணன் தான். எந்தப்படம் ஜெயிச்சாலும் அதற்கு காரணம் இயக்குனர்தான். இந்தப் படம் மட்டுமல்ல நான்  நடித்த அனைத்து படத்திற்குமே இது பொருந்தும். ஆனந்த் என்னிடம் கதை சொல்லும் போதே கண் கலங்கி விட்டார். உண்மையான விஜயராகவன் அவர்தான். இயக்குனர்கள் அட்லி ,லோகேஷ் கனகராஜ் போல ஆனந்த கிருஷ்ணனும் விஜய் ,அஜித் போன்றவர்களை  வைத்து படம் இயக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து தகுதியும் இவருக்கு இருக்கிறது. என் மேல் நம்பிக்கை வைத்து இந்த…
Read More