இளையராஜாவின் இசையில் மற்றுமொறு பாலு மகேந்திராவின் மாணவர் இயக்கும் முதல் படம் !’பேரன்பும் பெருங்கோபமும்’ !

இளையராஜாவின் இசையில் மற்றுமொறு பாலு மகேந்திராவின் மாணவர் இயக்கும் முதல் படம் !’பேரன்பும் பெருங்கோபமும்’ !

  பாலு மகேந்திராவின் 'சினிமா பட்டறை' மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜே. பி. தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சரவணன் கவனித்திருக்கிறார். நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய இந்த திரைப்படத்தை ரியோட்டா மீடியா படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி…
Read More
நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘தி கோட் லைஃப்’ படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு!

நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘தி கோட் லைஃப்’ படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு!

  தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸி இயக்கத்தில், நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியாகவுள்ள 'தி கோட் லைஃப்' படத்தின் முதல் போஸ்டரை அவரது 'சலார்' படத்தின் கோ-ஸ்டார் பிரபாஸ் வெளியிட்டது பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள மிகப்பெரிய சர்வைவல் அட்வென்சரான இந்தப் படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் இன்று தனது சமூக ஊடக தளத்தில் வெளியிட்டார். படத்தின் போஸ்டர்களில் நடிகர் பிரித்விராஜின் மாறுபட்ட தோற்றங்கள், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக 'தி கோட் லைஃப்'பை மாற்றியுள்ளது. இப்போது வெளியாகியுள்ள படத்தின் இரண்டாவது தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆர்வத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள ’தி கோட் லைஃப்’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான…
Read More
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் குடும்ப படத்தில் நடிக்கும் சாக்‌ஷி அகர்வால்!

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் குடும்ப படத்தில் நடிக்கும் சாக்‌ஷி அகர்வால்!

  தமிழில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு, இந்த தீபாவளி பான் இந்திய தீபாவளியாக அமைந்திருக்கிறது. நடிகை சாக்‌ஷி அகர்வால், தமிழில் அரை டஜன் படங்களில் ஹீரோயினாக நடிப்பது மட்டுமல்லாது, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், பல மொழிகளிலிருந்தும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவருக்கு இந்த தீபாவளி மிகச்சிறப்பானதாக அமைந்திருக்கிறது. பிக்பாஸ் மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்‌ஷி அகர்வால். தற்போது தமிழ்த் திரையுலகில் நாயகியாக வித்தியாசமான வேடங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். ஆக்‌ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்தி வரும் சாக்‌ஷியின் திறமை, பிற மொழி படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறார். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் மிக…
Read More
‘நானி 31’ படத்தில் இணைந்துள்ளார் நடிப்பின் அரக்கன் எஸ். ஜே. சூர்யா!

‘நானி 31’ படத்தில் இணைந்துள்ளார் நடிப்பின் அரக்கன் எஸ். ஜே. சூர்யா!

  நேச்சுரல் ஸ்டார் நானியும், 'அந்தே சுந்தரானிகி' போன்ற கல்ட் என்டர்டெய்னரை வழங்கிய இயக்குநர் விவேக் ஆத்ரேயா 'நானி 31' படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை 'ஆர் ஆர் ஆர்' போன்ற ஆஸ்கார் விருது பெற்ற படத்தை தயாரித்த  டிவி வி என்டர்டெயின்மென்ட்ஸ்   சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரிக்கிறார்கள். 'நானி 31' தொடர்பாக ஒரு சிறிய அறிவிப்பு வீடியோவை வெளியிடுவதன் மூலம் படக் குழு தங்களின் திட்டத்தையும் விவரித்தது. இதனால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தயாரிப்பாளர்கள் தங்கள் இரண்டாவது பயணத்தில் இந்த முறை வித்தியாசமான படைப்பை தருவதற்கு முயற்சிக்கப் போவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளனர். தற்போது 'நானி 31' படத்தின் நடிகர்கள் பற்றிய தகவல்களை வெளியிட தொடங்கியுள்ளனர். இப்படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் தற்போது நடிகர் எஸ். ஜே. சூர்யா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்…
Read More
ராஷ்மிகா நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விடியோ வெளியாகியுள்ளது!

ராஷ்மிகா நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விடியோ வெளியாகியுள்ளது!

  கீதா ஆர்ட்ஸ் துவங்கிய காலத்திலிருந்தே, தனித்துவமான திரைப்படைப்புகளை வழங்கி, தனக்கென தனியொரு பெயரைப்பெற்றிருக்கும் புகழ்மிகு நிறுவனம் ஆகும். வித்தியாசமான கதைக்களத்தில் மீண்டும் மீண்டும் பல வெற்றிப்படைப்புகளை தந்து வரும் கீதா ஆர்ட்ஸ் தற்போது, புதிய பிளாக்பஸ்டர் தயாரிப்பு நிறுவனமான மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு அற்புதமான ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. தேசிய அளவிலான இளைஞர்களின் கனவு நாயகி மற்றும் தனித்துவமான நடிகை என புகழ் பெற்றிருக்கும் ராஷ்மிகா மந்தனா முக்கியப் பாத்திரத்தில் நடிக்க, திறமைமிகு இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். அனைத்துப் படங்களிலும் அழுத்தமான நடிப்பை வழங்கி ரசிகர்களை ஈர்த்து வரும் ராஷ்மிகா , தற்போது பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த புதிய படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த தயாராகி வருகிறார். இப்படக்குழு படம் பற்றிய ஒரு அழகான ஸ்னீக் பீக்கை வெளியிட்டுள்ளது, இப்படம்…
Read More
‘டெவில்’ படத்தில் எல்னாஸ் நோரூஸியின் கதாபாத்திர லுக் வெளியாகியுள்ளது!

‘டெவில்’ படத்தில் எல்னாஸ் நோரூஸியின் கதாபாத்திர லுக் வெளியாகியுள்ளது!

  நந்தமுரி கல்யாண் ராம் திரையுலகில் அறிமுகமாகும் போதே தனித்துவமான திரைக்கதைகளை தேர்வு செய்து நடித்து நற்பெயரை சம்பாதிப்பதில் பெயர் பெற்றவர். இவர் தற்போது மற்றொரு சுவாரசியமான திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை குறிக்கும் வகையில் 'டெவில்' என பரபரப்பாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் 'பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்' என்ற வாசகத்துடன் வெளியாகிறது. இப்படத்தை அபிஷேக் நாமா இயக்கி, தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை மாளவிகா நாயரின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டு பார்வையாளர்களையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது படத்தின் தயாரிப்பாளர்கள், பாலிவுட்டின் முன்னணி நடிகை எல்னாஸ் நோரூஸி நடித்திருக்கும் ' ரோஸி' எனும் கதாபாத்திர போஸ்டரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இதை தெரிவித்துவிட்டு, ''திறமை…
Read More
சந்தானம் 80-ஸ் லுக்கில் இருக்கும் ‘பில்டப்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

சந்தானம் 80-ஸ் லுக்கில் இருக்கும் ‘பில்டப்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

  காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகனாக உயர்ந்து இருப்பவர் சந்தானம். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படியான படத்தில் நடித்து வரும் சந்தானம், தற்போது 80-ஸ் பில்டப் என்ற நடித்து இருக்கிறார். கல்யாண் இயக்கி இருக்கும் இப்படத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ் காந்த், கூல் சுரேஷ், சூப்பர்குட் சுப்பிரமணி, தங்கதுரை, கும்கி அஸ்வின், நெபு சாமி, கலைராணி என பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். நடிகர்கள் மனோபாலா மற்றும் மயில்சாமி நடித்த கடைசி படமாக இது அமைந்து இருக்கிறது. 80-களில் நடக்கும் இந்த படத்தின் கதை ஃபேன்டசி டிராமா-வாக உருவாகி வருகிறது. 1980 காலக்கட்டத்தில் நடைபெறும் கதையம்சம் கொண்டிருப்பதால், இதற்காக உடை, இடம் ஆகியவற்றில் படக்குழுவினர் அதிக கவனம் செலுத்தி இருக்கின்றனர். காமெடி கலந்து ஃபேன்டசி டிராமா-வாக உருவாகி இருக்கும்…
Read More
“டெவில்” படத்தில் நடிக்கும் மாளவிகா நாயரின் கதாபாத்திர ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!

“டெவில்” படத்தில் நடிக்கும் மாளவிகா நாயரின் கதாபாத்திர ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!

“நந்தமுரி கல்யாண் ராம் தனது திரைவாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே தனித்துவமான ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர், தற்போது மிக சுவாரஸ்யமான ஒரு படத்தோடு ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும் வகையில் “டெவில்” எனப் பெயரிடப்பட்ட இப்படம், பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் என்ற டேக்லைனுடன் வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் நவம்பர் 24, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. இந்த ஞாயிற்றுக்கிழமை, தயாரிப்பாளர்கள் இந்த படத்திலிருந்து சக்திவாய்ந்த அரசியல்வாதி வேடத்தில் நடிக்கும் கதாநாயகி மாளவிகா நாயரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக வெளியிட்டனர். இப்படத்தில் மணிமேகலா எனும் கதாப்பாத்திரத்தில் மாளவிகா நாயர் நடிக்கிறார். இவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் அரசியல்வாதியாக தோன்றும் இவரது கதாப்பாத்திர பின்னணியில் , அமைதியை வெளிப்படுத்தும் புறாக்கள் போஸ்டரில் காணப்படுகின்றன. 'டெவில்'…
Read More
விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் ! ஐந்து மொழிகளில் வெளியாகிறது!

விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் ! ஐந்து மொழிகளில் வெளியாகிறது!

  விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்து வெற்றிகண்ட Chendur film international தங்களது 7வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. D.ராஜா வழங்கும், T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” படத்தின் முதல் பார்வையை படக்குழு மோஷன் போஸ்ட்டராக வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக்,  மற்றும் விஜய் ஆண்டனி தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய தனா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். ஹிட்லர் திரைப்படத்தை ஆக்‌ஷன் திரில்லர் வகையில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் தனா. பரபர திருப்பங்களுடன் பறக்கும் திரைக்கதையில், ஒரு அழகான காதலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அனைவரும் ரசிக்கும்…
Read More
மீண்டும் கமர்சியலில் களமிறங்கும் ஜெயம் ரவி ! ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !

மீண்டும் கமர்சியலில் களமிறங்கும் ஜெயம் ரவி ! ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !

  ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது. கலகலப்பான குடும்ப படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் எட்டாவது தயாரிப்பான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகி வருகிறது. 'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், 'கே ஜி எஃப்', 'புஷ்பா' புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 'பிரதர்' திரைப்படத்திற்காக 'ஒரு கல் ஒரு கண்ணாடி'க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள்…
Read More