விஷால் கூறியதில் எனக்கு உடன்பாடு இல்லை ! எனக்கு என்டே கிடையாது’ பட விழாவில் தயாரிப்பாளர் ஆவேசம்!

விஷால் கூறியதில் எனக்கு உடன்பாடு இல்லை ! எனக்கு என்டே கிடையாது’ பட விழாவில் தயாரிப்பாளர் ஆவேசம்!

  Hungry Wolf Entertainment And Production LLP சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு என்டே கிடையாது’. அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ளார்.தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தளபதி ரத்னம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சந்திரமுகி 2, யாத்திசை உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர் ஓம் பிரகாஷ் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். படத்தொகுப்பை வேல்முகனும் கலை வடிவமைப்பை சூர்யாவும் கவனித்துள்ளார். அக்டோபர் 6 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆக்சன் ரியாக்சன் சார்பில் ஜெனிஷ் இந்தப்படத்தை வெளியிடுகிறார். இதனை முன்னிட்டு…
Read More
ஜெயம் ரவியின் ‘ இறைவன்’ பட ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் ! விஜய்சேதுபதி மற்றும் எச் வினோத் கலந்து கொண்டனர்!

ஜெயம் ரவியின் ‘ இறைவன்’ பட ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் ! விஜய்சேதுபதி மற்றும் எச் வினோத் கலந்து கொண்டனர்!

  பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் இறைவன். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி 'இறைவன்' படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், இயக்குநர் அகமது, "நிகழ்விற்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி. 'மனிதன்' படத்திற்கு பிறகு ஐந்தாறு வருடங்கள் கழித்து இந்த மேடையில் நிற்கிறேன். ஒரு படம் நடக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளரும் ஹீரோவும் மனது வைக்க வேண்டும். ரவியுடன் இதற்கு முன்பு 'ஜனகனமண' ஆரம்பித்தோம். ஆனால், கோவிட் காரணமாக அது நடக்கவில்லை. ரவியை வைத்து புது ஜானரில் ஒரு படம் எடுக்க நினைத்தேன். அந்த கதையை புரிந்து கொண்ட ரவிக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. அதனால்தான் 'இறைவன்' படமே வந்துள்ளது. இதுவரை நான் சாஃப்ட்டான படங்கள் மட்டுமே…
Read More
30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான தடகள போட்டியில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்! ஆர்யா மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் விருது வழங்கி சிறப்பித்தனர்!

30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான தடகள போட்டியில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்! ஆர்யா மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் விருது வழங்கி சிறப்பித்தனர்!

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "XX Chennai District Masters Athletic Championship 2023" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) நடைபெற்றது இப்போட்டியை சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திருமதி ருக்மணி, பொருளாளர் திருமதி சசிகலா மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது திரு மயில்வாகனன் IPS, திரு MP லக்‌ஷ்மிபதி துவக்கிவைத்த இந்த போட்டியின் முதல் நாளில் (செப்டம்பர் 23, 2023) நடிகர் இயக்குனர் SJ சூர்யா, நடிகர் ஆர்யா, நடிகர் சித்தார்த், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை தேஜு அஷ்வினி, ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வென்றவர்களூக்கு பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர். விருதுகள் விவரம் 60+ வயதினருக்கான 100 மீட்டர் ஆண்களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் திரு M.செண்பகமூர்த்தி…
Read More
விஷாலின் முதல் 100 கோடி வசூல் படமாகவுள்ள மார்க் ஆண்டனி ! அஜித்துக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்!

விஷாலின் முதல் 100 கோடி வசூல் படமாகவுள்ள மார்க் ஆண்டனி ! அஜித்துக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்!

  விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் கடந்த 15ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக ரித்து வர்மா நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை போன்ற தோற்றத்தில் இருக்கும் பெண்ணை நடிக்க வைத்துள்ளனர். டைம் டிராவல் ஜானரில் காமெடியாக எடுத்து இருக்கும் மார்க் ஆண்டனி படம் வசூலிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை ரூ.70 கோடி வரை வசூலாகி உள்ளதால் பாக்ஸ் ஆபிசில் ரூ, 100 கோடியை இப்படம் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க் ஆண்டனி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் சென்னையில் படக்குழு சார்பில் சக்சஸ் மீட்டிங் நடைபெற்றது. அதில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியதாவது, “மார்க் ஆண்டனி…
Read More
இசைஞானி இளையராஜா விழக்கேற்றி தொடங்கி வைத்த சாரா படத்தின் பூஜை!

இசைஞானி இளையராஜா விழக்கேற்றி தொடங்கி வைத்த சாரா படத்தின் பூஜை!

  Viswa Dream World நிறுவனம் சார்பில் R விஜயலக்‌ஷ்மி மற்றும் செல்லம்மாள் - குருசாமி G தயாரிப்பில், இயக்குநர் ரஜித் கண்ணா இயக்கத்தில் நாயகி சாக்‌ஷி அகர்வால் மற்றும் நாயகன் விஜய் விஷ்வா இணைந்து நடிக்கும் “சாரா” திரைப்படம் படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது. இவ்விழாவினில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு விழக்கேற்றி படக்குழுவினரை வாழ்த்தினார். இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா பேசியதாவது… இங்கு வந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி, வந்துள்ள அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள், இந்தப் பூஜையை விளக்கேற்றி துவக்கி வைத்த என் தந்தைக்கு நன்றி. இந்தப் படம் அனைத்து உணர்வுகளையும் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும், கண்டிப்பாக ஒரு நல்ல படமாக உருவாகும் என்று நம்புகிறேன் நன்றி. கதாநாயாகன் விஜய்விஷ்வா பேசியதாவது .. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். சாரா திரைப்படத்தின் பூஜைக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. கார்த்திக்ராஜாவின் இசையில் நான்…
Read More
பல திரை பிரபலங்கள் கலந்து கொண்ட ‘மார்கழி திங்கள்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா !

பல திரை பிரபலங்கள் கலந்து கொண்ட ‘மார்கழி திங்கள்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா !

  இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் வரவேற்புரை வழங்கிய சுசீந்திரன் பேசியதாவது... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குந‌ர் இமயம் பாரதிராஜா மற்றும் மனோஜ் பாரதிராஜாவை ஒன்று சேர்த்து படம் தயாரிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்த விழாவிற்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி. நடிகர் கார்த்தி பேசியதாவது. அனைவருக்கும் வணக்கம், பாரதிராஜா ஐயா அவர்களுக்கு பெரிய வணக்கம். மனோஜ் பாரதிராஜா இவ்வளவு சீக்கிரம் திரைப்படத்தை இயக்குவார் என்று நான் நினைக்கவில்லை. இதற்கு காரணமான‌ சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி.…
Read More
தனது 50 வது படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி! குரங்கு பொம்மை படத்தின் இயக்குனரின் இரண்டாவது படம் !

தனது 50 வது படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி! குரங்கு பொம்மை படத்தின் இயக்குனரின் இரண்டாவது படம் !

  பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் 'குரங்கு பொம்மை' நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக 'மஹாராஜா' உருவாகி வருகிறது. இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் 7 ஸ்கிரின் ஸ்டுடியோ லலித் மற்றும் சிலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், நடிகர் நட்டி பேசியதாவது, "'மஹாராஜா' தமிழ் சினிமாவின் முக்கிய படமாக அமையும். இந்த படத்தின் திரைக்கதை இனி வரும் படங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். விஜய் சேதுபதியுடன் எனக்கு இது முதல் படம். படக்குழு அனைவரும் சிறப்பாக வேலை செய்தனர். நிதிலன் இன்னும் சில வருடங்களில் பான் இந்தியா படம் இயக்கும் அளவிற்கு பெரிய ஆளாக வருவார்". இயக்குநர் நிதிலன் பேசியதாவது, " இந்த கதை மீது நம்பிக்கை வைத்து கடுமையாக உழைக்கும் என்னுடைய அணிக்கு நன்றி. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அபிராமி மேம், மம்தா மேம்,…
Read More
தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத கதைக்களம் கொண்டு உருவாகியுள்ள ‘வெப்பன்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத கதைக்களம் கொண்டு உருவாகியுள்ள ‘வெப்பன்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

  நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள சஸ்பென்ஸ்- ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் 'வெப்பன்'. புதிய டெக்னாலஜியில் வெளியீட்டிற்குத் தயாராகி வரும் இந்தப் படத்தை மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் தயாரித்திருக்க, குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஹைதராபாத் மற்றும் மும்பையில் நடைபெற்றது.   நடிகை தான்யா ஹோப், "'வெப்பன்' படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. என் கதாபாத்திரம் குறித்து அதிகம் நான் இங்கு சொல்ல முடியாது. நல்ல கான்செப்ட், வித்தியாசமான கதை. படம் பார்க்குபோது உங்களுக்கும் பிடிக்கும். இயக்குநர் குகன், தயாரிப்பாளர் மன்சூர், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" நடிகர் வசந்த் ரவி பேசியதாவது, "'அஸ்வின்ஸ்', 'ஜெயிலர்' படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. சரியான கதை மீது நம்பிக்கை வைத்துள்ள தயாரிப்பாளர்கள் எங்கள் படத்திற்கு கிடைத்துள்ளார்கள். படத்தின் புரோமோஷன்களை அவ்வளவு சின்சியராக செய்து வருகிறார்கள். டிசி போல தமிழ், தெலுங்கிலும் இந்த கான்செப்ட் நிச்சயம் வெற்றி பெரும்…
Read More
ரசிகர்கள் மத்தியில் நடைபெற்ற ‘சந்திரமுகி 2’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு ! நடனமாடிய நடிகை கங்கனா !

ரசிகர்கள் மத்தியில் நடைபெற்ற ‘சந்திரமுகி 2’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு ! நடனமாடிய நடிகை கங்கனா !

  இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார் தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி.கே.எம் தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற இப்படத்தின் பிரத்யேக டிரெய்லர் வெளியீட்டு விழாவில், 'சந்திரமுகி 2'…
Read More
ஆஸ்கார் விருது பெற்ற எம். எம். கீரவாணி இசையில் உருவான ‘சந்திரமுகி 2’ பட பாடல்கள் வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது

ஆஸ்கார் விருது பெற்ற எம். எம். கீரவாணி இசையில் உருவான ‘சந்திரமுகி 2’ பட பாடல்கள் வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது

  இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார் தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி.கே.எம் தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை…
Read More