28
Sep
இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கங்கை அமரன் கலந்துகொண்ட தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின், 11 வது சீசன் வெகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் இசைக்கடவுள் இசை ஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக 'Celebrating இசை' என்ற தலைப்பில் அடுத்த மூன்று எபிசோடுகள் நடைபெறவுள்ளது. முழுக்க முழுக்க இளையராஜா பாடல்களை பங்கேற்பாளர்கள் பாடவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் கங்கை அமரன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு பாடகர்களை ஊக்குவித்தனர். அச்சு அசல் இளையராஜாவின் பிரதி போலவே பாடும் பாடகர் சரணுக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இளையராஜாவின் புகைப்படம் பதித்த டீசர்டை பரிசளித்து வாழ்த்தியது மிக நெகிழ்வான தருணமாக அமைந்தது. தமிழக…