தனது அடுத்த படத்திற்காக துப்பாக்கி பயிற்சி செய்யும் கமலஹாசன் !

தனது அடுத்த படத்திற்காக துப்பாக்கி பயிற்சி செய்யும் கமலஹாசன் !

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்த பின் தற்போது இயக்குனர் ஹெச் வினோத் உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விக்ரம் பட வெற்றிக்கு பின்னர் ராஜ்கமல் நிறுவன தயாரிப்பில் கமல் நடிக்கும் படம் இதுவாகும். இது குறித்து அதிகாரப்பூர்வமாகப் படக்குழு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். ஹெச் வினோத்தின் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற முந்தைய படங்கள் தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.அதே போல மீண்டும் கமலை வைத்து மாபெரும் ஹிட் படத்தை கொடுப்பார் என்று சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில்  கமலின் 233 படத்தின் ஸ்டண்ட் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது https://twitter.com/RKFI/status/1699656596794814508
Read More
ஜெயம் ரவியின் இறைவன் பட முன்னோட்டம் வெளியானது ! மீண்டும் போலிஸாக நடிக்கிறார்!

ஜெயம் ரவியின் இறைவன் பட முன்னோட்டம் வெளியானது ! மீண்டும் போலிஸாக நடிக்கிறார்!

  பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகியுள்ள 'இறைவன்' படத்தில் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் பொருந்திப் போகும் ஜெயம் ரவி இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார் என்பதை டிரெய்லர் தெளிவாக காட்டுகிறது. 2 நிமிடம் 35 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டிரெய்லர் ஒரு மனநோயாளி கொலையாளியின் (ராகுல் போஸ் நடித்துள்ளார்) இருண்ட உலகத்தையும், கதாநாயகனின் (ஜெயம் ரவி) வருகையையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. நேர்மையும் கோபமும் கொண்ட இளம் காவல் துறை அதிகாரியாக ஜெயம் ரவி வருகிறார். ஆனாலும், எதிர்பாராத அவரது பயணம் எதிராளியை தேடி புதிரான இடத்திற்குள் அழைத்து செல்கிறது. இயக்குநர் அகமதுவின் முந்தைய படங்களான 'மனிதன்', 'என்றென்றும் புன்னகை' ஆகியவற்றிலிருந்து மாறுபட்டு, புதிய ஜானரில் தனது இயக்கத் திறமையை நிரூபிக்கும்படி டிரெய்லர் அமைந்திருப்பது பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் கதாநாயகியாக நடித்துள்ள நயன்தாராவின்…
Read More
கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது !

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது !

'டாடா' படத்தின் ஹிட்டுக்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'ஸ்டார்'. இப்படத்தை 'பியார் பிரேமா காதல்' எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்குகிறார். இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் கவின் நடிக்க இவருடன் பாலிவுட் நடிகை ஒருவரும், கோலிவுட் நடிகை ஒருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஒருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். 'நித்தம் ஒரு வானம்' படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், 'விருபாக்ஷா' படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனிக்கிறார். தேசிய விருது வென்ற ஆடை வடிவமைப்பாளரான சுஜித் சுதாகரன் ஆடை வடிவமைப்பாளராகவும், எஸ். வினோத்குமார் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு…
Read More
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கங்குவா படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு!

தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கங்குவா படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு!

ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா கடந்த 16 வருடங்களில் ‘சிங்கம்’ பட சீரிஸ், ‘பருத்தி வீரன்’, ‘சிறுத்தை’, ‘கொம்பன்’, ‘நான் மகான் அல்ல’, ‘மெட்ராஸ்’, ‘டெடி’ மற்றும் சமீபத்தில் ‘பத்து தல’ போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தென்னிந்தியத் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து சூர்யா நடிக்கும் ’கங்குவா’ படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படம் துவங்கியதில் இருந்தே இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. இப்படம் 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக வட்டாரத்திலும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான இன்று படத்தின் புரோமோ டீசரை வெளியிடுவதில் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புரோமோ டீசர் வெளியாகியுள்ளது. மேலும் நான்கு மொழிகளில் விரைவில் டீசர் வெளியாகவுள்ளது.…
Read More
பத்திரிக்கையாளர்கள் இணைந்து வெளியிட்ட “லவ்” படத்தின் டிரெய்லர் ! பரத்தின் 50வது படம்

பத்திரிக்கையாளர்கள் இணைந்து வெளியிட்ட “லவ்” படத்தின் டிரெய்லர் ! பரத்தின் 50வது படம்

  RP Films சார்பில் RP பாலா தயாரித்து இயக்க, நடிகர்கள் பரத் - வாணி போஜன் நடிப்பில், காதல், த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள படம் "லவ்". ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மூத்த பத்திரிக்கையாளர்கள் இணைந்து “லவ்” படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர். இன்னிகழ்வினில் நடிகை வாணி போஜன் பேசியதாவது, நான் நிறையப் படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் சில படங்களே மனதிற்கு முழு திருப்தியை கொடுக்கும். இந்தப்படத்தில் நான் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது. இந்தப் படத்தில் நானும் பரத்தும் நிறைய சண்டைகள் போட்டுள்ளோம், அடிகளும் பட்டது. ஆனால் அது படத்திற்காக மட்டும் தான், படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது உங்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி. இயக்குநர் RP பாலா பேசியதாவது.. படம் ஜூலை 28 ஆம் தேதி…
Read More
இந்திய திரையுலகமே எதிர்பார்த்த ஜவான் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துவிட்டது!

இந்திய திரையுலகமே எதிர்பார்த்த ஜவான் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துவிட்டது!

  ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜவான் திரைப்படத்தின் ப்ரிவ்யூ இன்று வெளியாகி, இணையத்தை புயலாக தாக்கியுள்ளது. சமூகத்தில் உள்ள தவறுகளை சரிசெய்யும் ஒரு மனிதனின் உணர்ச்சிகரமான பயணத்தை, கோடிட்டுக் காட்டும் ஒரு உயர்தரமான அதிரடி ஆக்சன் திரில்லராக இப்படம் இருக்கும் என்பதை, இந்த ப்ரிவ்யூ உறுதி செய்கிறது. அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த ப்ரிவ்யூ காட்சி, படத்திற்கான எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்குத் எடுத்து சென்றுள்ளது. பார்வையாளர்களை வசீகரித்துள்ள இந்த ப்ரிவ்யூ ஒரு அசாதாரண சினிமா அனுபவத்தை உறுதியளிக்கிறது. ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிகளின் சரியான கலவையை ஒன்றிணைத்துள்ள, ஜவான் ப்ரிவ்யூ பிரமிக்க வைக்கும் காட்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது. ப்ரிவ்யூ உடைய ஒவ்வொரு ஃபிரேமும் கவனத்தை ஈர்ப்பதுடன் ஜவான் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. ப்ரிவ்யூ கிங் கானின் குரலில் தொடங்குகிறது, அடுத்து என்ன எனும் ஆர்வத்தை உருவாக்குகிறது. ரசிகர்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த சிறப்பம்சம் என்னவென்றால், அவர்கள் இதுவரை பார்த்திராத…
Read More
அரன்மணை படம் போல தொடர்ந்து பல பாகங்களாக வெளியாகும் தலைநகரம்! சுந்தர் சி இன் அறிவிப்பு!!

அரன்மணை படம் போல தொடர்ந்து பல பாகங்களாக வெளியாகும் தலைநகரம்! சுந்தர் சி இன் அறிவிப்பு!!

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்த காமெடி கலந்த ஆக்சன் படம் தான் தலைநகரம் இந்தப் படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. இப்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் .. தயாரிப்பாளர் SM பிரபாகரன் பேசியதாவது.. எங்கப்பாவுக்குப் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்குமென்று ஒரு ஆசை உண்டு. அவர் ஆசைப்படி எங்களை ஆளாக்கினார். எனக்கு சினிமா மீது நிறையக் காதல். நடிப்பு நமக்கு செட்டாகுது, நாம் ஒரு படம் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். துரை அண்ணா எனக்கு…
Read More
ரசிகர்களிடையே மாபெரும் வரவெற்பை பெற்று வரும் தோனி எண்டர்டெய்ன்மென்ட்டின் ‘எல் ஜி எம்’ பட டீசர்

ரசிகர்களிடையே மாபெரும் வரவெற்பை பெற்று வரும் தோனி எண்டர்டெய்ன்மென்ட்டின் ‘எல் ஜி எம்’ பட டீசர்

  தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் 'எல் ஜி எம்' படத்தின் டீசரை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான எம். எஸ். தோனி, அவருடைய முகநூலில் வெளியிட்டார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இப்படத்தின் டீசருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பு 'எல் ஜி எம்'. ( லெட்ஸ் கெட் மேரீட்). இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதற்கு பேராதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில், '' நகைச்சுவையையும், குடும்பத்தையும் ஒன்றாக இணைத்து குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக 'எல் ஜி எம்' தயாராகி…
Read More
‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் இந்த இடத்திலா நடந்தது!

‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் இந்த இடத்திலா நடந்தது!

  நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான திருப்பதியில், நடிகர் பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் 'ஆதி புருஷ்' திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே, தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், இயக்குநர் ஓம் ராவத், பாடலாசிரியர் மனோஜ் முண்டாஷீர், இசையமைப்பாளர்கள் அஜய்- அதுல் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டு, முன்னோட்டத்தை வெளியிட்டனர். சீதையை மீட்டெடுக்க ராமன், வானர சேனையுடன் அசாதாரணமான பயணத்தை மேற்கொள்வதையும், தீமையின் மீது நன்மையின் வீரம், சக்தி மற்றும் வெற்றியின் ஒரு பார்வையையும் முன்னிறுத்தும் இந்த முன்னோட்டம், இம்மாதம் பதினாறாம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. 'ஆதி புருஷ்'…
Read More
ஒவ்வொரு காட்சிகளிலும் ஒரு இருக்கை காலியாக விட வேண்டும் “ஆதிபுருஷ்” படக்குழு அறிவிப்பு

ஒவ்வொரு காட்சிகளிலும் ஒரு இருக்கை காலியாக விட வேண்டும் “ஆதிபுருஷ்” படக்குழு அறிவிப்பு

மாபெரும் இதிகாசங்களில் ஒன்று ராமாயணம், அந்த கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் "ஆதிபுருஷ்". இதை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார், இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 16ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.மேலும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. "ஆதிபுருஷ்" படத்தின் டிரைலர் வெளிவந்த போது அனைத்து மொழிகளையும் சேர்த்தி 6 கோடிக்கு மேல் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளிவரும் போது ஒவ்வொரு காட்சிகளிலும் ஒரு இருக்கை காலியாக விட வேண்டும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதை ட்விட்டரில் பகிர்ந்துள்ள படக்குழு "அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தின் உருவமான அனுமனுக்கு மிகுந்த மரியாதை உடன் கூடிய பணிவான அஞ்சலி".இப்படத்தை ஒரு காலி இருக்கையுடன்…
Read More