ரசிகர்களிடையே மாபெரும் வரவெற்பை பெற்று வரும் தோனி எண்டர்டெய்ன்மென்ட்டின் ‘எல் ஜி எம்’ பட டீசர்

ரசிகர்களிடையே மாபெரும் வரவெற்பை பெற்று வரும் தோனி எண்டர்டெய்ன்மென்ட்டின் ‘எல் ஜி எம்’ பட டீசர்

  தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் 'எல் ஜி எம்' படத்தின் டீசரை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான எம். எஸ். தோனி, அவருடைய முகநூலில் வெளியிட்டார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இப்படத்தின் டீசருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பு 'எல் ஜி எம்'. ( லெட்ஸ் கெட் மேரீட்). இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதற்கு பேராதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில், '' நகைச்சுவையையும், குடும்பத்தையும் ஒன்றாக இணைத்து குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக 'எல் ஜி எம்' தயாராகி…
Read More
வெளியானது “போர் தொழில்” டீசர்! பரபரக்கும் திரில் பயணம்!!

வெளியானது “போர் தொழில்” டீசர்! பரபரக்கும் திரில் பயணம்!!

பரபரக்கும் திரில் பயணம், வெளியானது “போர் தொழில்" டீசர் குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லர், “போர் தோழில்,” திரைப்படம் ஜூன் 9 அன்று திரைக்கு வர உள்ளது. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான டீசரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில் பயணத்தை அழகாக காட்டுகிறது டீசர். வன்முறை மிகுந்த இருண்ட உலகில், ஒவ்வொரு மூலையிலும் எதிர்பாராத ஆபத்து பதுங்கியிருக்கும் நிலையில், ஒரு பிரகாசமான ஆனால் இளகிய இதயம் கொண்ட ஒரு புதிய இளம் காவலதிகாரி தனது வாழ்வில், மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறார். அவரது முதல் விசாரணையில் பணியில் வெற்றிபெற, அவருக்கு எதிர்தன்மை கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மூத்த காவலருடன் இணைய வேண்டும். ஒன்றாக, அவர்கள் தங்கள் வேறுபாடுகளைக் கடந்து, ஒரு சைக்கோ கொலையாளியை வேட்டையாடும் பயணத்தில் ஈடுபடுகிறார்கள்., சரத்குமார், அசோக் செல்வன் முதன்மை பாத்திரங்களில் இணைந்து நடிக்க நிகிலா…
Read More
‘The Marvels’ திரைப்படத்தின் டீசர் வெளியானது

‘The Marvels’ திரைப்படத்தின் டீசர் வெளியானது

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் MCU யுனிவர்ஸின் அடுத்த படமாக வெளியாகிறது `The Marvels'. நியா டகோஸ்டா வின் இயக்கத்தில் வெளிவரும் இப்படத்தில் ப்ரி லார்சன், டெயோனா பாரிஸ், இமான் வெல்லானி, சாமுவேல் எல். ஜாக்சன், ஜாவே ஆஷ்டன் மற்றும் பார்க் சியோ-ஜூன் ஆகியோர் நடித்துள்ளனர். 2019-ம் ஆண்டு வெளியாகி மார்வெல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'கேப்டன் மார்வெல்' திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் 'The Marvels' திரைப்படத்தின் டீசர் வெளியானது. நடிகை ப்ரி லார்சன் கேப்டன் மார்வெல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். https://www.youtube.com/watch?v=cMSUtgb_OH0 அது மட்டுமின்றி சமீபத்தில் ஓ.டி.டி-யில் வெளியான 'மிஸ்.மார்வெல்' வெப்சீரிஸில் இடம்பெற்றிருந்த 'கமலா கான்' பாத்திரமும், 'வாண்டாவிஷன்' தொடரில் இடம்பெற்றிருந்த 'மோனிகா ராம்போ' பாத்திரமும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களாக இடம்பெற்றுள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 10ம் தேதி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபமாக மார்வெல் திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப்…
Read More
ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாள் பரிசாக வெளியான ‘கப்ஜா’ பட டீசர்!

ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாள் பரிசாக வெளியான ‘கப்ஜா’ பட டீசர்!

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கப்ஜா’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் ராணா டகுபதி வெளியிட்டிருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கன்னட திரையுலகிலிருந்து ‘கே ஜி எஃப் 1 & 2 ‘, ‘777 சார்லி’, ‘விக்ராந்த் ரோணா’ என பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டு மொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. இங்கு நட்சத்திர நடிகர்களாக ரசிகர்களின் பேராதரவுடன் உலா வரும் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் ‘கப்ஜா’ படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும்…
Read More
Eternals – புதிய டீசர்,- இணையத்தில் வைரலாகி வருகிறது !

Eternals – புதிய டீசர்,- இணையத்தில் வைரலாகி வருகிறது !

Eternals - புதிய வீடியோவில்,  இந்திய திருமண காட்சிகள்,  ஏஞ்சலினா ஜோலி, ரிச்சர்ட் மேடன் மற்றும் பலர் நடிப்பில்,  இணையத்தில் வைரலாகி வருகிறது ! Marvel Studios வழங்கும் மார்வல் சூப்பர்ஹீரோ திரையுலகத்தின்  25 வது திரைப்படம் Eternals, இதுவரை நீங்கள் திரையில் கண்டிராத, புத்தம் புதிய சக்தி மிக்க 10 புதிய சூப்பர்ஹீரோக்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இத்திரைப்படம் தீபாவளி திருநாள் கொண்டாட்டமாக, நவம்பர் 5 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரமாண்ட வெளியீடாக வெளியாகிறது. Eternals டீசர் ரசிகர்களுக்கு சில ஆச்சரயங்களை தந்துள்ளது. இந்த டீசரில் முழுக்க முழுக்க இந்திய மரபிலான திருமண காட்சி ஒன்று, நடன காட்சி, இறுதியாக Eternals அனைவரும் தங்களை வெளியுலகிற்கு அறிமுகபடுத்தி கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த டீசரில் இந்திய நடிகரான ஹரீஷ் படேல் பாத்திரம் இன்னும் தெளிவாக காட்டப்பட்டிருக்கிறது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.…
Read More