பார்ட்டி டீசர் ட்ரெண்டிங்கில் உள்ளதாக்கும்!.

பார்ட்டி டீசர் ட்ரெண்டிங்கில் உள்ளதாக்கும்!.

எந்த ஒரு படத்துக்கும் ரசிகர்களை தயார்படுத்தும் முதல் ஆயுதம் டீசர் தான். ஒரு சிறந்த டீசரே ரசிகர்களிடம் படத்துக்கான எதிர்பார்ப்பை தூண்டுகிறது. அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் பார்ட்டி. இரு நாட்களுக்கு முன்பு வெளியான பார்ட்டி படத்தின் டீசருக்கு ரசிகர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது. டீசரில் இருக்கும் புதுமை, இளமை, எனர்ஜி ரசிகர்களை ஈர்க்கும் விஷயங்களால் சமூக வலைத்தளங்களில் பார்ட்டி டீசர் ட்ரெண்டிங்கில் உள்ளது. டீசர் ரிலீஸுக்கு பிறகு படத்தை பார்க்கும் ஆர்வம் இளம்  ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. டீசருக்கு கிடைத்த வரவேற்பால் பார்ட்டி படக்குழு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது. சத்யராஜ், நாசர், ஜெய்ராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ஷாம், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ்,…
Read More
கெளதம் மேனன் வெளியிட்ட ‘கோலி சோடா 2’ ஆடியோ டீசர்!

கெளதம் மேனன் வெளியிட்ட ‘கோலி சோடா 2’ ஆடியோ டீசர்!

‘காதல், தீபாவளி, வழக்கு எண் : 18/9’ போன்ற பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் SD.விஜய் மில்டன். இவர் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான படம் ‘கடுகு’. பரத் – ராஜகுமாரன் இணைந்து நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, 2014-ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். புதுமுக நடிகர்கள் நடிக்கும் இந்த படத்திற்கு விஜய் மில்டனே ஒளிப்பதிவு செய்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரஃப் நோட் புரொடக்ஷன்’ மூலம் தயாரிக்கிறார். இப்படத்தின் கதையில் ஒரு பகுதி மட்டும் கூடைப்பந்து விளையாட்டின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் இயக்குநர் சமுத்திரக்கனி நெகட்டிவ் ஷேடில் நடித்து வருகிறார். அச்சு இசையமைத்து வரும் இதற்கு தீபக் படத்தொகுப்பாளராக…
Read More
1 மில்லியன்  ரசிகர்களை கவர்ந்த ஜூலி என்ற லட்சுமிராய்!

1 மில்லியன் ரசிகர்களை கவர்ந்த ஜூலி என்ற லட்சுமிராய்!

தீபக் ஷிவதாசன் இயக்த்தில் பிரபல நடிகை ராய் லட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘ஜூலி-2’ படத்தின் டீசர் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இது 2004-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘ஜூலி’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த படத்தில் ரதி அக்னிஹோத்ரி, சஹில் சலாதி, ரவி கிஷென் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒரு சராசரி பெண் மிகப் பெரிய நடிகையாக உருவாக அவள் மேற்கொள்ளும் பயணம் தான் இப்படத்தின் கதை என ராய் லட்சுமி குறிப்பிட்டிருந்தார்.வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸரில் இடம்பெற்ற ராய் லட்சுமியின் கிளாமர் காட்சிகள் பாலிவுட் ரசிகர்களிடையே பெரும் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. அதோடு இதுவரை அந்த டீஸரை 1 மில்லியனுக்கும் அதிகமாக ரசிகர்களுக்கு பார்த்து மயங்கியிருக்கிறார்கள் இந்த படம் அடுத்த மாதம் அக்டோபர் 6-ம் தேது வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. https://www.youtube.com/watch?v=2VMjcw8V2KE
Read More