சாய் அபயங்கர், ஷேன் நிகாமின் “பல்டி” படத்திற்கு இசையமைக்கிறார்!!

சாய் அபயங்கர், ஷேன் நிகாமின் “பல்டி” படத்திற்கு இசையமைக்கிறார்!!

ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது ஷேன் நிகாமின் 25வது படமான “பல்டி” படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படம் இயக்குநர் உன்னி சிவலிங்கம் என்பவரின் அறிமுக முயற்சியாகவும், இசைக்கும் , ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவும் உருவாகி வருகிறது. மேலும் வரும் திருவோண பண்டிகை வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் அதிரடி ஆக்சன் களத்தில், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. சாய் அபயங்கர் இப்படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடதக்கது. இதற்காக வெளியான ஒரு பிரத்யேக ப்ரோமோ வீடியோவில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு போன் கால் மூலம் சாய் அபயங்கரை மலையாள திரையுலகிற்கு வரவேற்கும் காட்சி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.…
Read More
நமித் மல்ஹோத்ராவின் ராமாயணம் – உலகின் மிகப்பெரிய காவியத்தின் அறிமுகம்!

நமித் மல்ஹோத்ராவின் ராமாயணம் – உலகின் மிகப்பெரிய காவியத்தின் அறிமுகம்!

  உலகெங்கிலும் உள்ள 2.5 பில்லியன் மக்களால் என்றென்றும் 5000 ஆண்டுகளுக்கு முன்பாக உருவான ராமாயணம் போற்றப்படுகிறது. இந்த ராமாயணக் கதை மிகப்பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகிறது. இந்தக் கதையில் ஹாலிவுட் மற்றும் இந்தியாவின் புகழ்பெற்ற திறமையாளர்கள் ஒன்றிணைகிறார்கள். இந்தக் கதையை நிதேஷ் திவாரி இயக்க, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் 8 முறை ஆஸ்கார் விருது பெற்ற VFX ஸ்டுடியோ DNEG, யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. ராமாயணம் IMAX க்காக படமாக்கப்பட்டு முதல் பாகம் உலகம் முழுவதும் தீபாவளி 2026 மற்றும் இரண்டாம் பகுதி தீபாவளி 2027-லும் வெளியாகிறது. ஜூலை 3, 2025: 'ராமாயணம்: தி இன்ட்ரடக்ஷன்' காவியத்தை உலகளவில் பிரம்மண்டமாக ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்துள்ளது. இந்தக் கதையின் மாபெரும் சக்திகளான ராமர் vs ராவணன் இடையேயான போர் அறிமுகமாக அமைந்துள்ளது. இந்த நிகழ்வு ஒன்பது இந்திய நகரங்களில் மற்றும் நியூயார்க்கின் டைம்ஸ்…
Read More
விஜய் சேதுபதி , பூரி ஜெகன்னாத் படத்தில் இணைந்த JB மோஷன் பிக்சர்ஸ் !!

விஜய் சேதுபதி , பூரி ஜெகன்னாத் படத்தில் இணைந்த JB மோஷன் பிக்சர்ஸ் !!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும், பான் இந்தியா திரைப்படத்தினை, பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் JB மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், பன்முகத் திறமை கொண்ட நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து பான் இந்திய அளவிலான படத்தை உருவாக்க உள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தயாரிப்பாளர்கள் இப்படத்தில் பங்குபெறும் நட்சத்திர நடிகர்களின் பட்டியலை வெளியிடத் தொடங்கியுள்ளனர், முக்கிய நடிகர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி, படத்தை சுற்றிய ரசிகர்களின்  எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர். மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தை, பூரி கனெக்ட்ஸ்  நிறுவனத்தின் சார்பில், பூரி ஜெகன்னாத் தயாரிக்கிறார். சார்மி கவுர் இப்படத்தை வழங்குகிறார், மேலும் JB மோஷன் பிக்சர்ஸின் ஜேபி நாராயண் ராவ் கோண்ட்ரோலா  இணைந்து வழங்கிறார். JB மோஷன் பிக்சர்ஸுடனான இந்தக் கூட்டணி, படத்தின் தொலைநோக்குப்…
Read More
நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின் “மைசா” – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின் “மைசா” – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அட்டகாசமான  ஆக்‌ஷன் அவதாரத்தை  வெளிக்காட்டிய போஸ்டர், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. தற்போது இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு“மைசா” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. பிரபல  இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராக பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம்  இயக்குநராக  அறிமுகமாகிறார். Unformula Films நிறுவனம் இந்தப் படத்தை மிகப்பெரிய  பட்ஜெட்டில் பான் இந்தியா படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத் தயாரிப்பாளராக சாய் கோபா பணியாற்றுகிறார். நேற்றைய அட்டகாசமான அறிவிப்பு போஸ்டரைத் தொடர்ந்து,  இந்த திரைப்படத்தின் தலைப்பும், ராஷ்மிகாவின் மிரட்டலான  லுக்குடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்டுள்ளனர். தெலுங்கில்: இயக்குநர் ஹனு ராகவபுடி தமிழில்: “குபேரா” படத்தில் நடித்த சக நடிகர் தனுஷ் இந்தியில்: “சாவா” பட நாயகன் விக்கி கௌஷல் மலையாளம் மற்றும் கன்னடத்தில்: துல்கர் சல்மான் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் இந்த…
Read More
“ஹாட்ரிக் ஹிட், கலக்கும் ராக்ஸ்டார் டிஎஸ்பி!”

“ஹாட்ரிக் ஹிட், கலக்கும் ராக்ஸ்டார் டிஎஸ்பி!”

இந்திய சினிமாவின் இசை உலகில் தனிச்சிறப்புடன் மின்னும் இசைப்புயல் ராக்ஸ்டார் தேவிஶ்ரீ பிரசாத் (DSP) மீண்டும் ஒரு மாபெரும் ஹாட்ரிக் வெற்றியைத் தந்து அசத்தியுள்ளார். மூன்று வெவ்வேறு வகை களங்களில், வேறு வேறு ஜானர்களில், மூன்று பிளாக்பஸ்டர் ஹிட்ஸ் தந்து, அசத்தியுள்ளார். இந்த சாதனை மூலம் தான் உண்மையான இசை சாம்ராட் என்பதை நிரூபித்துள்ளார். புஷ்பா 1 & 2 அல்லு அர்ஜுனின் புஷ்பா பிராஞ்சைஸ் – பாகம் 1 மற்றும் பாகம் 2 – இல் டிஎஸ்பியின் இசை படத்தின் உயிராக இருந்தது. “ஊ சொல்லவா”, “ஸ்ரீவள்ளி” முதல் “புஷ்பா புஷ்பா” என அப்படத்தின் பாடல்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளாவிய வகையில் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. அவரது இசை, புஷ்பாவின் நறுமணத்தை உலகம் முழுக்க பரவச் செய்துள்ளது. தண்டேல் சந்தூ மொண்டேட்டி இயக்கத்தில் வெளியான தண்டேல் திரைப்படத்தில், டிஎஸ்பியின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் (Background…
Read More
ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ – Google டிரெண்டிங்கில் நம்பர் 1!

ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ – Google டிரெண்டிங்கில் நம்பர் 1!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, கடந்த ஜூன் 20-ஆம் தேதி, மலையாள முன்னணி நடிகர் திலீப் நடித்த ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்படத்தைத் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியிட்டது. திரை ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், Google இல் ரசிகர்களின் விருப்பத் தேடலில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளது. மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் திலீப்பின் 150வது படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நவீன கால குடும்ப உறவுகளின் விசித்திரங்களையும், டிஜிட்டல் சோஷியல் மீடியா குடும்பங்களில் எவ்வளவு தாக்கத்தை உருவாக்குகிறது என்பதையும், நகைச்சுவை கலந்து, ஒரு அருமையான ஃபேமிலி எண்டர்டெயினராக சொல்லும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் பாராட்டுச்செய்திகளைத் தொடர்ந்து, ரசிகர்கள் இணையத்தில் படத்தைப் பற்றி அதிகம் தேட, Google டிரெண்டிங்கில் இப்படம் முதலிடத்தைப் பிடித்தும் சாதனை படைத்துள்ளது. எழுத்தாளர் ஷாரிஸ் முகமது எழுதியுள்ள…
Read More
‘மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !!

‘மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !!

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும் நல்ல படைப்பு என்ற விமர்சனத்தை வழங்கி வருகிறது. இதனால் இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நடிகர் 'லொள்ளு சபா' சாமிநாதன்…
Read More
நாகபந்தம் படத்திற்காக 10 கோடியில் உருவாக்கப்பட்ட  பிரம்மாண்டமான செட் !

நாகபந்தம் படத்திற்காக 10 கோடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான செட் !

விராட் கர்ணா, அபிஷேக் நாமா, கிஷோர் அன்னபுரெட்டி, NIK ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸ், பான் இந்தியா திரைப்படமான “நாகபந்தம்” படத்தின் பாடல் ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்க ஆனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் பிரம்மாண்ட செட்டில் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இளம் ஹீரோ விராட் கர்ணா, இந்த பான் இந்திய திரைப்படமான நாகபந்தத்தில் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார். அபிஷேக் பிக்சர்ஸுடன் இணைந்து NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கிஷோர் அன்னபுரெட்டி இப்படத்தை தயாரிக்கிறார். லட்சுமி இரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோர் பெருமையுடன் இப்படத்தை வழங்குகிறார்கள். படத்தின் முன்னோட்டம், அதைத் தொடர்ந்து வந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விராட் கர்ணா இந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டுள்ளார். அதிரடி அவதாரத்தில் தோன்றிய அவரது ஜிம் படங்கள் படத்திற்கான அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகின்றது. படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது,…
Read More
வித்தியாசமான புரமோ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ZEE5 !!

வித்தியாசமான புரமோ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ZEE5 !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான "டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படம், ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் விதத்திலும், ரசிகர்களைக் கவரும் விதத்திலும், "டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தின் பேய் தீமை அடிப்படையாக வைத்து, ஒரு வித்தியாசமான புரமோ நிகழ்ச்சியை நடத்தியுள்ளது Zee5. சந்தானம் நடிப்பில் "டிடி நெக்ஸ்ட் லெவல்" படம் Zee5 தளத்தில் வெளியான வேகத்தில், 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை மேலும் மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில், Zee5 ஒரு பஸ்ஸில் படத்தின் தீமை மையமாக வைத்து, படத்தின் போஸ்டர்களுடன் படத்தின் கருவை மையமாகக் கொண்ட செட் அமைக்கப்பட்டு, அதில் பேய் வேடமிட்ட ஒருவர் உலாவும் வகையில் உருவாக்கி, சென்னை முழுக்க மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் காட்சிப்படுத்தி வருகிறது. முதல் முறையாக இந்த பஸ் மக்கள் அதிகம் புழங்கும்,…
Read More
கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2 – இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது !

கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2 – இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது !

ஹாட்ஸ்டார் மலையாள ஸ்பெஷல் வெப் சீரிஸ் வகையில், முதல் படைப்பாக பெரும் வரவேற்ப்பை பெற்ற கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீரிஸின், பெரிதும் எதிர்பார்க்கபடும் இரண்டாவது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த சீரிஸின் அதிரடியான இரண்டாவது டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், வரும் ஜூன் 20ஆம் தேதி முதல், இரண்டாவது சீசன் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2 தி சர்ச் ஃபார் CPO அம்பிலிராஜு எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த புதிய சீசன், ஒரு சிவில் போலீஸ் அதிகாரியான அம்பிலி ராஜு காணாமல் போன, மர்ம வழக்கை அடிப்படையாக வைத்து, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 1 நிமிடம் 30 விநாடிகள் கொண்ட இரண்டாவது டிரெய்லர், கதையின் களத்தையும் அதன் தீவிரதன்மையையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. அஹம்மது கபீர் இயக்கியுள்ள இந்த சீரிஸின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை பஹுல் ரமேஷ் எழுதியுள்ளார். ஹாசன் ரஷீத்,…
Read More