22
Sep
பிரதமர் நரேந்திர மோதியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோதியாக நடிக்கிறார் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். மோதியின் அதிகம் வெளிவராத உணர்வுப்பூர்வமான பக்கங்களை பேசுவதை நோக்கமாக கொண்டுள்ளது இந்தப் படம். நரேந்திர மோதியின் 75 ஆவது பிறந்த தினமான செப்டம்பர் 17 அன்று இந்தப் படம் குறித்தான அறிவிப்பும் வெளியானது. சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கிராந்தி குமார். C. H. இயக்கும் 'மா வந்தே' படம் மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும். குஜராத்தில் ஆரம்பித்த அவரது பயணம் இந்தியாவை செதுக்கும் நபராக அவர் எவ்வாறு மாறினார் என்பதையும் காட்ட இருக்கிறது. இதுகுறித்து உன்னி முகுந்தன் பகிர்ந்து கொண்டதாவது, "மரியாதைக்குரிய இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர தாமோதரதாஸ் மோதி அவர்களாக 'மா வந்தே' படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. அகமதாபாத்தில் சிறுவனாக நான் வளர்ந்தபோது அவரை முதலில் முதலமைச்சராக…
