27
Jan
ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் 350 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வந்தது. கிராபிக்ஸ் காட்சிகளின் பணியை மெருகேற்றும் விதமாக, அப்பணிகளுக்கு மேலும் 50 கோடியை ஒதுக்கியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். இதன் மூலம் படத்தின் பொருட்செலவு சுமார் 400 கோடிக்கு ஆகியிருக்கிறது. சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒருபுறம் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தாலும், மறுபுறம் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 3டி தொழில்நுட்பக் கேமிராவில் படமாக்கப்பட்டுவருவதால், இரண்டு கேமிராக்களில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்திவருகின்றனர். அதாவது, ஒரே காட்சியை இரண்டு கேமிராக்களில் ஒரே நேரத்தில் படமாக்குகின்றனராம், அதன்பின் இரண்டு கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் தனித்தனியே கிராஃபிக்ஸ் செய்து காட்சியை உருவாக்கிவருகின்றனர். அதுபோல, ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும்…
