வயிறு குலுங்க சிரிக்க வைக்க வரும் ‘கட்டப்பாவ காணோம்’

வயிறு குலுங்க சிரிக்க வைக்க வரும் ‘கட்டப்பாவ காணோம்’

சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும்  'கட்டப்பாவ காணோம்'. அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி,  'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படம் வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி வெளியாகின்றது. "இதுவரை இது போன்ற கற்பனை கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் தமிழ் படங்களில், நாய், பூனை, குரங்கு, யானை போன்றவைகளை தான் ரசிகர்கள் பார்த்து இருப்பார்கள். ஆனால் எங்களின் 'கட்டப்பாவ காணோம்' படத்தில் முதல் முறையாக அவர்கள் ஒரு உயிருள்ள மீன், மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்க்க போகிறார்கள். சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் சிறந்த நடிப்பும், மணி சேயோனின் அற்புதமான நகைச்சுவை கதையம்சமும் இணைந்து, நிச்சயமாக…
Read More
பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும்  “படைவீரன்”

பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் “படைவீரன்”

தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும்...அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம் "படைவீரன்".பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அம்ரிதா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கின்றார். கதையின் களம் மிகவும் பிடித்திருந்ததால் இயக்குனர் இமயம் பாரதிராஜா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் "கல்லூரி" அகில்,  கலையரசன், இயக்குநர் மனோஜ் குமார், இயக்குநர் கவிதா பாரதி, இயக்குநர் விஜய்பாலாஜி,  நித்தீஷ், கன்யா பாரதி, நிஷா, சிந்து, "பிச்சைக்காரன்" சுரேஷ் ஏகா, திண்டுக்கல் அலேக்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடல், ஓ காதல் கண்மணி படங்களில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்த தனா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். காஞ்சனா 2, நெடுஞ்சாலை படங்களியல் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராஜவேல் மோகன் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கார்த்திக் ராஜா இசைமைத்துள்ளார். இறுதிக்கட்ட பணிகளில் நெருங்கியுள்ள "படைவீரன்" படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் அர்விந்த்சாமி வெளியிட்டுள்ளார். தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்: தயாரிப்பு - மதிவாணன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - தனா இசை…
Read More
சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் தலைப்பு ‘வேலைக்காரன்’

சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் தலைப்பு ‘வேலைக்காரன்’

சிவகார்த்திகேயன் – மோகன் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ரஜினியின் ‘வேலைக்காரன்’ டைட்டிலை வைத்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் பிறந்த நாளன்று இந்த தலைப்பை பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சிவகார்த்திகேயன் – ஆர்.டி.ராஜா கூட்டணியில் உருவான ‘ரெமோ’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தற்போது அவர்கள் மீண்டும் இந்த ‘வேலைக்காரன்’ படத்திற்காக, மோகன்ராஜாவுடன் இணைந்திருப்பதால் இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிறந்த பொழுது போக்கு திரைப்படமாக உருவாகி வரும் இந்த ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில், சூப்பர் ஸ்டாரினி நடிகையான நயன்தாரா முதல்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் என்று பல முன்னணி நடிகர், நடிகையர் நடித்து வருகின்றனர். இசை – அனிருத், ஒளிப்பதிவு – ராம்ஜி, படத் தொகுப்பு – விவேக் ஹர்ஷன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களும் இந்த ‘வேலைக்காரன்’ படத்தில் பணியாற்றி…
Read More
‘அக்ராஸ் பிலிம்ஸ்’ வெளியிடும் “ குற்றம் 23

‘அக்ராஸ் பிலிம்ஸ்’ வெளியிடும் “ குற்றம் 23

வியாபாரம், வர்த்தகம் மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளில் ஏறக்குறைய 12 வருட கால சிறந்த  அனுபவத்தை பெற்று, தற்போது திரையுலகின் வர்த்தக உலகில்  தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து  இருக்கிறார், 'அக்ராஸ் பிலிம்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர் பிரபு வெங்கடாச்சலம்.  முன்னதாக  வேறொரு பிரபல  தயாரிப்பு நிறுவனத்துடன்  இணைந்து பணியாற்றி, தரமான கதையம்சம் நிறைந்த படங்களை மட்டுமே  தேர்வு செய்யும் யுக்தியை நன்கு அறிந்து கொண்ட  பிரபு வெங்கடாச்சலம், 'டூ மூவி பஃப்ஸ்' நிறுவனத்தோடு கைக்கோர்த்து 'திட்டம் போட்டு திருடற கூட்டம்' படத்தை தற்போது தயாரித்து வருகிறார். அதுமட்டுமின்றி 'கொடி' திரைப்படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமையை வாங்கி வெளியிட்டது மூலம், விநியோக துறையிலும் கால் பதித்து இருக்கிறார். அந்த வெற்றியை தொடர்ந்து, திரையுலகின் மூத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவோடு இணைந்து, 'பறந்து செல்ல வா' படத்தையும் தமிழகத்தில் பிரபு வெங்கடாச்சலம் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.  விநியோக துறையில் நல்லதொரு பெயரை…
Read More
இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா

இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா

தாரைதப்பட்டை பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்க ஜோதிகா நடிக்கும் புதிய படமொன்றை EON Studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. அவர் யார் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என தயாரிப்பு தரப்பு கூறுகிறது. மார்ச் 1 முதல் துவங்கும் இப்படத்தினை பற்றிய விரிவான செய்திகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
Read More
நியூஸிலாந்தில் பிறந்தாலும் தமிழ்ப் படத்தில் நடிக்க விரும்பும் மாடல் !

நியூஸிலாந்தில் பிறந்தாலும் தமிழ்ப் படத்தில் நடிக்க விரும்பும் மாடல் !

தமிழ்த் திரைப் படங்களில் பிற மாநிலத்திலிருந்து பல்வேறு மொழிகளிலிருந்து நடிக்க வந்து நடிகைகள் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறார்கள். கண்டம் விட்டுக் கண்டம் வந்து கங்காரு தேசத்திலிருந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஒருவர் பெரிதும் ஆர்வமாக இருக்கிறார் .அவர் பெயர் சபிஜே. இவர் சர்வதேச மாடல். மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கு பெற்றவர். நியூஸிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவர். சர்வதேச மியூசிக் வீடியோக்களில் நடித்திருப்பவர். இனி சபிஜே வுடன் பேசுவோம். உங்கள் முன்கதைச் சுருக்கம் கொஞ்சம் சொல்லுங்களேன்? நான் தமிழ்ப் பெண்தான். எங்களுக்கு பூர்வீகம் ஸ்ரீலங்கா. அங்கிருந்து அப்பா அம்மா எல்லாரும் நியூஸிலாந்து போய் தங்கிவிட்டனர். நான் அங்குதான் பிறந்தேன். படித்தது ஆஸ்திரேலியாவில். பி.காம் முடித்திருக்கிறேன். ஒருகட்டத்தில் எனக்கு மாடலிங் மீது ஆர்வம் வந்தது. நான் நியூஸிலாந்து ,ஆஸ்திரேலியா என்று இரு நாடுகளிலும் பல மியூசிக் வீடியோக்களில் தோன்றியிருக்கிறேன். ஆஸ்திரேலிய அரசு விளம்பரம் உள்பட பல விளம்பரங்களிலும் நடித்தேன். எனக்கு பங்கரா நடனம்…
Read More
அருள்நிதி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’

அருள்நிதி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’

ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற  தரமான கதையம்சங்களை தேர்ந்தெடுப்பது தான் ஒரு கலைஞனுக்கு அழகு. அந்த கலையில் கைதேர்ந்தவராக திகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நடிகர் அருள்நிதி என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். இவர் நடித்த முதல் படமான 'வம்சம்' முதல் 'ஆறாது சினம்' திரைப்படங்கள் வரை, ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமரசகர்களின் அமோக  பாராட்டுகளையும் அருள்நிதி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக உலகினர் மத்தியில், தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கும் அருள்நிதி, தற்போது 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்கும் இந்த படத்திற்கு 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்று தலைப்பிட பட்டிருக்கிறது. இந்த தலைப்பு தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. "பொதுவாகவே இரவை விட பகலுக்கு தான் அதிக விழிகள் இருக்கிறது…
Read More
“இது வேதாளம் சொல்லும் கதை”

“இது வேதாளம் சொல்லும் கதை”

நம் அனைவருக்கும் தெரிந்த ஓர் புராணக்கதையின் பாத்திரங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது தான் "இது வேதாளம் சொல்லும் கதை" அஸ்வின் ககாமனு (இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ ) குரு சோமசுந்தரம் (ஆரண்ய காண்டம், ஜோக்கர் )மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் நடித்துள்ளனர். மேலும் பிரபல குத்துசண்டை வீரரும் ஹாலிவுட் நடிகருமான கிரஃ புரிட்ஜ் வில்லன் வேடத்தில் வந்து மிரட்டுவதோடு மட்டுமல்லாமல் படத்தின் சண்டை காட்சிகளையும் வடிவமைத்துள்ளார். படத்தில் பிரபல நடிகர் ஒருவருக்கும் முக்கியமான கெஸ்ட் ரோல் இருக்கிறது. படம் வெளியாகும் வரைக்கும் அந்த நடிகர் யாரு என்கிற விஷயம் ரகசியமா வைக்கப்படும். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்தோட பின்னணி இசையை இயற்ற ஆரம்பிச்சிட்டார். சர்வதேச விருதுகள் பல பெற்ற இத்தாலிய ஒளிப்பதிவாளர் ராபர்டோ சஸாரா தான் இந்த படத்தோட ஒளிப்பதிவாளர்..இவர் இயற்கை நிலப்பகுதிகளை பதிவு பண்ணுவதில் கைத்தேர்ந்தவர். பாங்காங்கை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த படத்தோட விஷுவல் எபக்ட்ஸ்…
Read More
மின்வெட்டை மையமாக கொண்டு  தயாரான ‘கனவு வாரியம்’

மின்வெட்டை மையமாக கொண்டு தயாரான ‘கனவு வாரியம்’

ஹாலிவுட்டின் மிகப் பெரிய படத் தயாரிப்பு நிறுவனம் வார்னர் பிரதர்ஸ். கலிபோர்னியாவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸில் இந்த நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த முதல் படம் "கோல்ட் டிக்கர்ஸ்.' வசூலை அள்ளிக் குவித்த "மேட்ரிக்ஸ்', "ஹாரி பார்ட்டர்', "பேட்மேன்' போன்ற பல படங்களைத் தயாரித்த நிறுவனம் இது.   இந்த நிறுவனம் முதன் முறையாக ஒரு தமிழ் படத்தை வெளியிடவுள்ளது. இதற்கு முன், பாலிவுட் படங்களை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப்படங்களை இதுவரை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டதில்லை. தமிழ்ப்படத்தின் பெயர் "கனவு வாரியம்.' தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் மின்வெட்டை மையமாக வைத்து இந்த படம் ஜனரஞ்சகமாக உருவாக்கப்பட்டுள்ளது.   காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் கொண்ட பொழுது போக்கு படமாக எடுக்கப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன் கதாநாயகனாவும் நடிக்கிறார்…
Read More
காமெடி + திகில் நிறைந்த   ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’

காமெடி + திகில் நிறைந்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’

திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகிய தமிழ் படங்களின் வரிசையில், இத்தகைய எண்ணிக்கையை இவ்வளவு குறைவான நேரத்தில் பெற்று இருக்கும் முதல் தமிழ்  திரைப்படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்ப டத்தின் டீசர் தற்போது பேஸ்புக்கில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை யும், 'யுடியூபில்' 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும், என மொத்தம் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று வெளியான இந்த படத்தின் 46 நொடிகள் ஓடக்கூடிய டீசர், சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை திகில் - நகைச்சுவை கதைக்களங்களில் உருவான தமிழ் திரைப்படங்களின் வரிசையில், இத்தகைய எண்ணிக்கையை இவ்வளவு குறைவான நேரத்தில் பெற்று, புதியதொரு சாதனையை இந்த திரைப்படம் பெற்று இருக்கின்றது. அதுமட்டுமின்றி இந்த பாணியில் இந்நாள் வரை வெளியான மற்ற…
Read More