விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது!

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது!

  புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, இயக்குநர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில், இப்படம் அனைவரையும் கவரும் கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, நடிகை கிரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ் ஜே சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.கலக்கலான காதல் காமெடிப் படங்களுக்கு பெயர் பெற்ற விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணி இப்படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   இப்படத்திற்கு இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். பிரபல…
Read More
படத்தை பார்த்து விட்டேன் ஈகோ கிளாஷ்தான் இந்தப்படம் ! பார்க்கிங்க் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் லோகெஷ் கனகராஜ்!

படத்தை பார்த்து விட்டேன் ஈகோ கிளாஷ்தான் இந்தப்படம் ! பார்க்கிங்க் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் லோகெஷ் கனகராஜ்!

  ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. இந்த நிகழ்வில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, “இந்தப் படம் நான் முன்பே பார்த்துவிட்டேன். பார்க்கிங் என்ற விஷயத்தை வைத்து எவ்வளவு பெரிய பிரச்சினையைப் படம் பேச இருக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறீர்கள். ‘மாநாகரம்’ படத்தை ஸ்ரீனிஸ்தான் முதலில் தயாரிப்பதாக இருந்தது. இரண்டு கதாபாத்திரங்களின் ஈகோ கிளாஷ்தான் இந்தப் படமாக இருக்கும். எம்.எஸ். பாஸ்கர் சாருடன் வொர்க் பண்ண வேண்டும் என்பது என் விருப்பம். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன். எல்லோருமே நன்றாக நடித்துள்ளார்கள். வாழ்த்துகள்”. நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு 100ஆவது நாள் விழா நடக்க வேண்டும் என்ற…
Read More
தேனிசைத்தென்றல் தேவா இசையமக்கும் ‘வா வரலாம் வா’ படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

தேனிசைத்தென்றல் தேவா இசையமக்கும் ‘வா வரலாம் வா’ படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக கருமேகங்கள் கலைகின்றன படத்தில் நடித்த மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். வில்லனாக "மைம்" கோபி நடிக்க, முதன்மையான கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லீ, காயத்ரி ரேமா நடித்திருக்கின்றனர்.இவர்களுடன் சிங்கம் புலி, சரவண சுப்பையா, தீபா, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன், பிரபாகரன், யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்ட மேலும் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். முக்கியமாக இந்த படத்தில் 40 குழந்தைகளும் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளராக தேனிசைத்தென்றல் தேவா, ஒளிப்பதிவாளராக கார்த்திக் ராஜா, எடிட்டராக ராஜா முகமது, நடன இயக்குநராக நோபல், சண்டை பயிற்சியாளராக இடிமின்னல் இளங்கோ என பிரபலமானவர்களே பணியாற்றி உள்ளனர். ஏற்கனவே 'வா வரலாம் வா' படத்தின் First Look வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் தேதி "வா வரலாம்…
Read More
இயக்குநர் அமீர் நடித்து இயக்குனர் வெற்றிமாறன் வெளியிடும் ‘மாயவலை’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

இயக்குநர் அமீர் நடித்து இயக்குனர் வெற்றிமாறன் வெளியிடும் ‘மாயவலை’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் 'மாயவலை' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் ஞாயிறு (நவம்பர் 5) அன்று நடைபெற்றது. சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் 'தயா' செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜேந்திரன் (வாபோ), ஏ.ஆர். ஜாஃபர் சாதிக் (ஜே எஸ் எம் பிக்சர்ஸ்) மற்றும் சர்தார் ஆவர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில், எஸ்.பி. அஹ‌மதின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள 'மாயவலை' திரைப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுத, வீரமணி கணேசன் கலை இயக்கத்தை கையாண்டுள்ளார். சண்டை பயிற்சிக்கு பிரதீப் தினேஷும், வடிவமைப்புக்கு கோபி பிரசன்னாவும் பொறுப்பேற்றுள்ளனர். இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. இந்த…
Read More
தீபாவளிக்கு வெளியாகவுள்ள  ‘ரெய்டு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘ரெய்டு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

  விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்வில், இயக்குநரும் இந்தப் படத்தின் வசனகர்த்தாவுமான முத்தையா, "'கொம்பன்', 'மருது' போன்ற மண் சார்ந்த படங்களை முடித்துவிட்டு சிட்டி சார்ந்த ஒரு கதை எடுப்போம் என நினைத்திருந்தேன். அந்த நம்பிக்கையை என் மீது கொடுப்போம் என 'ரெய்டு' படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமையை வாங்கினேன். அந்த சமயத்தில் 'டாணாக்காரன்' நல்ல ரீச் இருந்தபோது விக்ரம் பிரபு சாரிடம் படம் காட்டி கேட்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். என் தங்கச்சி பையன் சின்சியராக செய்திருக்கிறான். என் பெயருக்காக இதில் பல பேர் வந்திருப்பது மகிழ்ச்சி. 'ரெய்டு' படம் நன்றாக வந்திருக்கிறது. தீபாவளிக்கு நல்லபடியாக வெற்றி பெற…
Read More
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரா.சவரி முத்து இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரா.சவரி முத்து இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது!

  Dwarka Productions தயாரிப்பில், பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்கும், அறிமுக இயக்குநர்  ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் கலக்கலான காமெடி படமாக உருவாகும் புதிய திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது.இப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. டார்லிங்க், இரும்புத்திரை, அண்ணாத்தே, ஹீரோ, மற்றும் மார்க் ஆண்டனி படங்களில், திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய  ரா.சவரி முத்து இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ரசித்துச் சிரிக்கும் ஒரு அருமையான படைப்பாக இருக்கும். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி…
Read More
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள தங்கலான் படத்தின் டீசர் வெளி

இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள தங்கலான் படத்தின் டீசர் வெளி

  ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, இன்று சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் பிரமிக்க வைக்கும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங்க் வீடியோ பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்குத் திரையிடப்பட்டது. இந்நிகழ்வினில் கலந்துகொண்ட   ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா பேசியதாவது... சீயான் விக்ரம் சாருக்கு ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் முதல் படம், மிகவும் அன்பானவர், கடின உழைப்பாளி தன் வேலையை மிக அர்ப்பணிப்புடன் செய்பவர். நானும் பா ரஞ்சித்தும் விக்ரம் சாரை சந்திக்கச் சென்ற போது என்ன தேதிகள்…
Read More
மகாராஜா ரவி தேஜா மற்றும் கோபிசந்த் மலினேனி இணையும் நான்காவது படத்தின் பூஜை!

மகாராஜா ரவி தேஜா மற்றும் கோபிசந்த் மலினேனி இணையும் நான்காவது படத்தின் பூஜை!

  வெற்றிக்கூட்டணியான மாஸ் மகாராஜா ரவி தேஜா மற்றும் மாஸ் மேக்கர் கோபிசந்த் மலினேனி நான்காவது முறையாக இணைந்துள்ளனர், இப்படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் #RT4GM படத்தை, பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. திரையில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரவி தேஜா இப்படத்தில் நடிக்கிறார். மாஸ் மஹாராஜா ரவி தேஜா, செல்வராகவன், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் இதர படக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில், இன்று பூஜையுடன் படம் பிரம்மாண்டமாக துவங்கியது. இப்படத்தின் ஸ்கிரிப்டை அல்லு அரவிந்த் தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தார். படத்தின் முதல் காட்சிக்காக ஆன்மோல் சர்மா கேமராவை இயக்க, VV விநாயக் கிளாப்போர்டு அடித்தார். K ராகவேந்திரா ராவ் முதல் காட்சிக்கு இயக்கம் செய்து கௌரவித்தார். நடிகரும் திரைப்படத் இயக்குநருமான செல்வராகவன், தெலுங்கு மொழியில் இப்படம் மூலமாக நடிகராக…
Read More
பிரபாஸின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள் ! திருவிழா போல காட்சியளிக்கிறது!

பிரபாஸின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள் ! திருவிழா போல காட்சியளிக்கிறது!

  தென்னிந்திய திரையுலகின் டார்லிங் பிரபாஸ் பாகுபலி மூலம் பான் இந்திய அளவில் பிரபலமானார். தற்போதைக்கு இந்திய திரையுலகில் மிகபபெரும் ரசிகர் பட்டாளம் அவருக்கு இருக்கிறது என்றால் அது மிகையில்லை. அவரது திரைப்படங்கள் வெளியீட்டுக்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கிறது. இந்திய முழுமைக்கும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் பிரபாஸின் பிறந்த நாளை நேற்று ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர். தென்னிந்திய ரிபெல் ஸ்டார் பிரபாஸ் நேற்று 23 அக்டோபர் அவரது 44 பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி நேற்று ஹைதராபாத்தில் ஆயிரக்கணக்கில் கூடிய அவரது ரசிகர்கள், இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவில் பிரம்மாண்டமான கட் அவுட் அமைத்து, கிரேனில் அதற்கு மாலை அணிவித்து, பாலபிஷேகம் செய்து, இனிப்பு விநியோகித்து கொண்டாடினார்கள். எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத வகையில் வெகு பிரம்மாண்டமாக, பெரும் கொண்டாட்டமாக நடந்த இந்த நிகழ்வு, பார்வையாளர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக, அமைந்தது
Read More
இது என்னுடைய முதல் படம்! ‘சித்தா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகர் சித்தார்த் உனர்ச்சிவசம் !

இது என்னுடைய முதல் படம்! ‘சித்தா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகர் சித்தார்த் உனர்ச்சிவசம் !

  S.U. அருண் குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சித்தா'. செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம் பேசியதாவது, "இதுதான் எனக்கு முதல் படம். இயக்குநர் அருண் தந்த வாய்ப்பு இது. என்னை நம்பிய தயாரிப்பாளர் சித்தார்த்துக்கும் நன்றி" இயக்குநர் அருண் பேசியதாவது, "நானும் சித்தார்த்தும் சேர்ந்துதான் இந்தப் படத்தை ஆரம்பித்தோம். படம் ஆரம்பிக்கும் போது என்ன நம்பிக்கை இருந்ததோ அதே நம்பிக்கைதான் இப்போது வரை இருக்கிறது. என்னைவிட ஒரு நடிகராக தயாரிப்பாளராக இந்தப் படத்தைத் தூக்கி சுமந்தது சித்தார்த்தான். எந்த தடங்கலும் இல்லாமல் என்னை முழு சுதந்திரத்தோடு படம் செய்ய வைத்தார்கள். இந்தப் படம் இந்தளவு நன்றாக வர துணையிருந்த தொழில்நுட்பக்குழுவினர், நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் முதல் படம் போல நினைத்து…
Read More