பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் & ஜோதிகா நடிக்கும் “நாச்சியார்” பட பூஜை ஆல்பம்!

பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் & ஜோதிகா நடிக்கும் “நாச்சியார்” பட பூஜை ஆல்பம்!

ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கும் ‘நாச்சியார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியாகி, சமூக வலைத்தளங்களை பரபரப்புக்கு ஆளாக்கியது. இந்நிலையில்,  நேற்று இப்படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளனர்.  படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை யடுத்து, இப்படத்தை வருகிற செப்டம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் ‘நாச்சியார்’ என்ற கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க விருக்கிறாராம். முழுக்க முழுக்க அவரை மையப்படுத்தியே இந்த கதை நகரவுள்ளதாம். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விரைவில், இப்படத்தில் நடிக்கவுள்ள மேலும் நடிகர், நடிகையர் விவரங்கள் வெளியிடப்படும் என தெரிகிறது.
Read More
அப்பாஸ் கலைவிழா 2017 – வெள்ளி விழா கொண்டாட்டம்.

அப்பாஸ் கலைவிழா 2017 – வெள்ளி விழா கொண்டாட்டம்.

அப்பாஸ் கல்சுரல் அகாடமி சென்னை மாநகரின் பொழுது போக்கு கலையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்ட நிறுவனம். என்றும் நினைவில் வாழும் அப்பாஸ் ஜெயராமன் அவர்களின் சீரிய உழைப்பு இன்று இந்த நிறுவனத்தை சிகரம் தொட வைத்திருக்கிறது. மெல்லிசை நிகழ்ச்சிகளையும் நாடகங்களையும் தனக்கே உரிய சீரிய முறையில் நடத்தி வந்த அப்பாஸ் நிறுவனர் திரு ஜெயராமன் ஒரு ஒருங்கிணைந்த கலைவிழாவினை ஆண்டு தோறும் நடத்த ஆசைப்பட்டார். அவருடைய இந்த கனவை பத்ம பூஷண் திரு K.J.ஜேசுதாஸ் அவர்களிடம் தெரிவிக்க அவர் திரு ஜெயராமனை உற்சாகப் படுத்தி உடனே ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லி தன் பரிபூரண ஆசியும் முழு ஒத்துழைப்பையும் தருவதாக உறுதி அளித்தார். திரு ஜேசுதாஸ் அவர்களின் நல்ல உள்ளம் தந்த ஒத்துழைப்பு இன்று அப்பாஸ் கல்சுரல் அகடமியை வெள்ளி விழா காணச் செய்துள்ளது. இதில் மற்றொரு சிறப்பு அன்று தொடங்கி இந்த ஆண்டு வரை…
Read More