கட்ஸ் திரைப்பட விமர்சனம்!!

நடிப்பு: ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், நான்சி, டெல்லி கணேஷ், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா

இயக்கம்: ரங்கராஜ்

இசை: மனோஜ்

தயாரிப்பு: OPRP புரொடக்ஷன்ஸ் – ப்ரிடல், ஜக்வி, ஜெயபாரதி ரங்கராஜ்

அறிமுக இயக்குநர் ரங்கராஜ் இயக்கி நடித்துள்ள படம் கட்ஸ்.

ரங்கராஜ், நான்சி, டெல்லி கணேஷ், ஸ்ருதி நாராயணன், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீ லேகா, அறந்தாங்கி நிஷா, பிரவீன் மஞ்சரேக்கர் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

சின்ன வயதிலேயே தாயும் தந்தையும் இறந்துவிட அவர்களின் ஆசைப்படி போலீஸாகிறான் மகன், ஒரு நேர்மையான போலீஸாக இருக்கும் ரங்கராஜ் மணல் அள்ளும் பிரச்சனையில் கொல்லப்படும் ஒரு திரு நங்கையின் வழக்கை விசாரிக்கிறார். இந்த கொலைக்குப் பின் கார்பரேட் நிறுவனத்தின் தலைவன் ஒருவன் இருப்பது தெரிந்து அவனை கைது செய்து சிறையில் வைக்கிறார். ஆனால் கைது செய்த ஒரே மணி தனது அதிகாரத்தை வைத்து நேரத்தில் வில்லன் வெளியே வருகிறான். அப்படி வெளியே வந்த வில்லன் ரங்கராஜை பழிவாங்குவதும். தனது மகளை காப்பாற்ற ரங்கராஜ் எடுக்கும் முயற்சிகளே கட்ஸ் படத்தின் கதை. அந்த தலைவனுக்கும் நாயகனின் தந்தை மரணத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? அத்தோடு தமிழுணர்வை சேர்த்து சொல்லியிருக்கிறார்கள்.

தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களிலும் ரங்கராஜ் நடித்துள்ளார். நடிகராக ரங்கராஜ் பல இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்திருந்தாலும் ஒரு சில இடங்களில் அவரது மெனக்கெடல் பாராட்டிற்குரியது. நடிகர்கள் எல்லோரும் தங்களால் முடிந்தளவு சிறப்பான பணியைச் செய்துள்ளார்கள் ஆனால் காட்சிகள் எதுவும் சவாலாகவோ, சுவாரஸ்யமாகவோ இல்லை. அப்பா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ருதி நாராயணன், கிராமத்து பெண்மணியாக தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார்.

ஒரு கதையில் பல கிளைக்கதைகள், கார்பரேட் கம்பேனிகள் விவசாய நிலத்தில் கொட்டும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் , திருநங்கை இன்வெஸ்டிகேஷன் என கதை பயணிக்கும் போது , நாயகனுக்கு இரண்டு நாயகிகளுடனான ஃபிளாஷ்பேக் வேறு அவ்வப்போது வந்துகொண்டே இருக்கிறது. கதை பல னேறம் சம்பந்தமில்லாத காட்சிகளால் பயணிக்கிறது. இசை வெறும் அதிக சத்தமாக மட்டுமே மிஞ்சுகிறது. ஒளிப்பதிவாளர் மனோஜ் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்.

 

இதுவரை பலமுறை தமிழ் சினிமாவில் சொல்லப்பட்ட கதை தான் கதையிலோ , திரைக்கதையிலோ புதிதாக எதுவும் இல்லை, காட்சியமைப்பிலும் சுவாரஸ்யம் எதுவும் இல்லை. குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஒரு முறை பார்க்கலாம்