Dungeons & Dragons 2023 – ஹாலிவுட் பார்வை

Viacom 18 Studios தயாரிப்பில் வந்திருக்கும்
டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ் என்பது வீட்டிற்குள் விளையாடப்படும் ஒரு போர்ட் கேம். . மேசையைச் சுற்றி வீரர்கள் அமர, அதிலொருவர் டன்ஜியன் மாஸ்டராகப் பங்கு வகிப்பார். மற்ற வீரர்கள் ஒரு பாத்திரத்தை பிரதிநிதித்துவப் படுத்துவார்கள். ஒவ்வொரு வீரரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கான செயல்களைப் புரிவதோடு, மற்ற கதாபாத்திரங்களுடன் அதற்குத் தக்கவாறு விளையாடுவார்கள். அமெரிக்காவில் மிகவும் ஃபேமஸான இந்த கேம் இப்போது படமாக வந்திருக்கிறது.

ஓர் அழகான புத்திசாலி திருடன், சாகசக்காரர்களின் குழுவுடன் கைகோர்த்து, தொலைந்து போன நினைவுச் சின்னத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஒரு சாகசக் பயணத்தை மேற்கொள்கிறான். ஆனால் அந்த குழு வில்லன்களை எதிர்கொள்ள நேரிடும்போது, அவர்கள் ஆபத்தில் சிக்குகிறார்கள். ஆக்ஷன் கலந்த நகைச்சுவையுடன் வந்திருக்கும் இப்போது தமிழுலும் திரையிடப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் கிறிஸ் பெய்ன் நடிப்பில் இயக்குநர் ஜொனாதன் கோல்ட்ஸ்டெய்ன் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது. வாரவிடுமுறையை கொண்டாட ஹாலிவுட் ஆக்சன் விரும்பிகளுக்கு ஒரு சரியான விருந்து.