Latest Posts

மறைந்தாலும் மறக்க இயலாதப் படைப்பாளி மணிவண்ணன்!

இந்த கோலிவுட் சினிமா எத்துணையோ படைப்பாளிகளைக் கண்டிருக்கிறது.. கண்டு கொண்டுமிருக்கிறது.. அப்படியான படைப்பாளிகளில் சிலரே மறைந்த பின்னரும் நினைவில் கொள்ளத் தக்க சாதனையோ, செயலோ செய்து மனதில் வாழ்கிறார்கள். அப்படியான லிஸ்டில் ஒருவரான...

சந்தோஷ் நாராயணன் : பிறந்த நாள் சிறப்புப் பதிவு!

கோலிவுட்டோ, ஹாலிவுட்டோ- எங்கே ஆனாலும் இசையமைப்பாளர் ஒவ்வொரு வருக்கு ஒவ்வொரு பாணி இருக்கும், இதில் ஏனைய இசையமைப்பாளார்களிடம் இருந்து சந்தோஷ் நாராயணனின் இசை சற்று வித்யாசமாகவே இருக்கும். குறிப்பாக இவர் இசையமைக்கும் படங்கள்...

சிம்பு & ஹன்ஸிகா இணைந்து நடித்திருக்கும் ‘மஹா’ படத்தினை வெளியிட தடை கோரி வழக்கு!

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.மதியழகன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மஹா’. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் ஹன்ஸிகா நடிக்கும் 50-வது திரைப்படமாகும். ஹன்ஸிகாவின் முன்னாள்...

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ இரண்டு பாகங்களாக வெளியாகிறது

அனைத்திந்திய படமான புஷ்பாவின் முதல் பார்வையான 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அதன் தயாரிப்பாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை (முட்டம்செட்டி மீடியாவுடன்...

மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய சிலம்பரசன்!

னது திரைப்படங்கள் மூலமாக சமூக விழிப்புணர்வு கருத்துக்களை கூறி, ‘சின்ன கலைவாணர்’ என அனைவராலும் ஒருமனதாக பாராட்டப்பட்ட, பத்மஸ்ரீ நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். அதேபோல, நிஜ வாழ்க்கையில் இயற்கையை பாதுகாக்கும் முயற்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட விவேக், மரம் நடுதலின் அவசியத்தை அனைவரிடமும் வலியுறுத்தி வந்தார். மேலும் தனது வாழ்நாளில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்பதை தனது லட்சிய கனவாக கொண்டு செயல்பட்டு வந்த அவர், 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டு செயற்கரிய பணியையும் செய்துவிட்டு சென்றுள்ளார்.

அவருக்கு அஞ்சலி செலுத்தியபோது, நடிகர் சிலம்பரசன், விவேக்கின் கனவை நனவாக்கும் விதமாக, ஆளுக்கொரு மரமாவது நடுவதுதான் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என கூறியிருந்தார். அப்படி கூறியதுடன் நில்லாமல் தற்போது அதை செய்தும் காட்டியுள்ளார் சிலம்பரசன்.

வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை விஜிபி கடற்கரையில் நடைபெற்று வருகிறது. இன்று படிப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாக மறைந்த நடிகர் விவேக்கின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து ஏற்கெனவே தான் கூறியபடி படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சேர்ந்து பத்து மரக்கன்றுகளை நட்டு விவேக்கிற்கு தனது அஞ்சலியை செலுத்தினார் சிலம்பரசன்.

இந்த நிகழ்வில் நாயகி கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன், அஞ்சனா கீர்த்தி ஸ்டன்ட் சில்வா, ஒளிப்பதிவாளர், இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோரும் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.. இந்த நிகழ்வை பிளாக் ஷீப் யூடியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்தது.

மேலும், தொடர்ந்து மரங்களை நடுவதில் தான் ஆர்வம் காட்டப்போவதாக கூறிய நடிகர் சிலம்பரசன், தனது ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரையும் ஆளுக்கொரு மரம் நட்டு, விவேக் கண்ட கனவை நனவாக்குவோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Latest Posts

மறைந்தாலும் மறக்க இயலாதப் படைப்பாளி மணிவண்ணன்!

இந்த கோலிவுட் சினிமா எத்துணையோ படைப்பாளிகளைக் கண்டிருக்கிறது.. கண்டு கொண்டுமிருக்கிறது.. அப்படியான படைப்பாளிகளில் சிலரே மறைந்த பின்னரும் நினைவில் கொள்ளத் தக்க சாதனையோ, செயலோ செய்து மனதில் வாழ்கிறார்கள். அப்படியான லிஸ்டில் ஒருவரான...

சந்தோஷ் நாராயணன் : பிறந்த நாள் சிறப்புப் பதிவு!

கோலிவுட்டோ, ஹாலிவுட்டோ- எங்கே ஆனாலும் இசையமைப்பாளர் ஒவ்வொரு வருக்கு ஒவ்வொரு பாணி இருக்கும், இதில் ஏனைய இசையமைப்பாளார்களிடம் இருந்து சந்தோஷ் நாராயணனின் இசை சற்று வித்யாசமாகவே இருக்கும். குறிப்பாக இவர் இசையமைக்கும் படங்கள்...

சிம்பு & ஹன்ஸிகா இணைந்து நடித்திருக்கும் ‘மஹா’ படத்தினை வெளியிட தடை கோரி வழக்கு!

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.மதியழகன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மஹா’. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் ஹன்ஸிகா நடிக்கும் 50-வது திரைப்படமாகும். ஹன்ஸிகாவின் முன்னாள்...

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ இரண்டு பாகங்களாக வெளியாகிறது

அனைத்திந்திய படமான புஷ்பாவின் முதல் பார்வையான 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அதன் தயாரிப்பாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை (முட்டம்செட்டி மீடியாவுடன்...

Don't Miss

MGR -ன் உலகம் சுற்றும் வாலிபன் புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ்!

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். ஆம்... தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன், படம் வெளியானது. இப்படத்தில்,...

கொரோனா தனிமையால் உருவான “Thousand Kisses” வீடியோ பாடல் !

இரண்டு பொம்மைகளை மட்டும் வைத்து கொண்டு, கோவிட் பொதுமுடக்கத்தில் தன்னை நோய் தாக்கிய நிலையிலும், வீட்டுக்குள் தனியாளாக இருந்து ஒரு அழகான வீடியோ பாடலை உருவாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ். “Thousand Kisses”...

அன்பிற்கினியாள் – விமர்சனம்!

முழுமையாக ஆன் லைன் யுகமாகி விட்ட இந்த கொரோனா காலத்திலும் எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் சொல்லும் கூகுளில் அப்பா-மகள் கதை என்று டைப்-பிட்டு சர்ச் செய்து பாருங்கள்.. அந்த கூகுள் நடத்தும் குடும்பதாரரின்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.