பாடகி வைக்கம் விஜய லட்சுமி ‘கால் டாக்ஸி’ படத்திற்காகப் பாடிய பாடல்!

கே.டி.கம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.கபிலா தயாரித்துள்ள திரைப்படம் ‘கால் டாக்ஸி’.

இந்தப் படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ‘மெர்லின்’, ‘மரகத காடு’, ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’, ‘ஜீவி’, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடிக்கிறார்.

மேலும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதன்பாப், இயக்குநர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், ‘பசங்க’ சிவகுமார், ‘கான மஞ்சரி’ சம்பத்குமார், முத்துராமன், ‘பெல்லி’ முரளி, சந்திரமௌலி, ‘போராளி’ திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார் பாணர். சண்டை காட்சிகளை எஸ்.ஆர்.ஹரிமுருகனும், படத் தொகுப்பை டேவிட் அஜய்யும் கவனித்துள்ளார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன்.

தமிழகத்தில் கால் டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக இந்த ‘கால் டாக்ஸி’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.

பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, தற்போது இந்த ‘கால் டாக்ஸி’ படத்தில் இடம் பெறும் ‘கிக்கு செம்ம கிக்கு…’ என்ற பாடலை பாடியுள்ளார். குத்துப் பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடலை வைக்கம் விஜயலட்சுமி தனக்கே உரிய பாணியில் பாடியிருக்கிறார்.

தற்போது இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!