பியர் கிரில்ஸூடன் காட்டுக்குள் பயணம் செய்த ரஜினி!

அகில உலக அளவில் புகழ் பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது.

டிஸ்கவரி தொலைக்காட்சியில் Man Vs Wild என்கிற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. இதில் Bear Grylls என்னும் சாகச வீரர், மயிர் கூச்செறியும் அற்புத சாகசங்களை அடர்ந்த காடுகளிலும், விலங்கு களுக்கு மத்தியிலும் செய்து, உலக முக்கிய பிரமுகர்களிடம் பேட்டி கண்டு நிகழ்ச்சியை நடுத்துவார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹாலிவுட் நடிகைகள் ஜூலியா ராபர்ட்ஸ், கேட் வின்ஸ்லெட் ,டென்னிஸ் வீரர் ராஜர் பெடரர் , மற்றும் சென்ற வருடம் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்றுள்ளனர் . பிரதமர் மோடியுடன் நடந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றது. உத்தர காண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய சரணாலயத்தில் இந்நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. இந்த சாகச பயணம் உலகெங்கிலும் பேசப்பட்டது.

இப்போது இந்த நிகழ்ச்சி புதிய வடிவில் Into the Wild with Bear Grylls என்ற தலைப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கர்நாடகாவில் உள்ள பாந்திப்பூர் காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இது ரஜினி காந்த் பங்கு பெரும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். அவரை திரையில் அறிமுகப் படுத்திய இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் சின்ன திரைக்கு அவரை முதன் முதலாக டிஸ்கவரி தொலைக்காட்சி சார்பாக அழைத்து வருவதில் பெருமை கொள்கிறது .

ஆபத்துகள் நிறைந்த வனப்பகுதிகளில் இயற்கையோடு ஒட்டி உயிர் வாழும் முறைகளை உணர்த்தும் வகையில் நம் சூப்பர்ஸ்டார் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார் . நீர் வளத்தின் பாதுகாப்பை பற்றி புரிய வைக்கிறார்.

Discovery குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மேகா டாடா கூறுகையில் Bear Grylls மற்றும் சூப்பர் ஸ்டார் இணைந்து செய்யும் சாகசங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று உறுதி கூறுகிறார் .
Bear Grylls கூறுகையில் “ரஜினி அவர்களை தலைவா என்று அன்புடன் இந்திய துணைக்கண்டம் அழைக்கிறது. அவருடைய எளிமை, பொறுமை, பெருந்தன்மை பார்த்து வியக்கிறேன். அவரை ஒரு உன்னத மனிதராகவும் நான் பார்க்கிறேன்”. என்றார்