தர்பார் சீக்ரெட்ஸ் – மனம் திறக்கும் ஏ ஆர் முருகதாஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தர்பார்’.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்.  அனிருத் இசை அமைத்துள்ள இப் படத்துக்கு, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஜினி ஜோடியாக நயன் தாரா நடித்துள்ள இதில், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ப்ரதீக் பார்பர், நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 16-ம் தேதி இதன் ட்ரெய்லர் வெளியாகி, மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப் பட்ட இந்தப் படம், தற்போது ஒரு வாரம் முன்கூட்டியே, அதாவது ஜனவரி 9-ம் தேதியே வெளியா கிறது. அதற்கு இப்படத்தின் பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2 ஜி1 இண்டர் நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08ம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் சேர்த்து, அமெரிக்கா வெங்கும் சுமார் 250க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாக இருக்கிறது.

இதன் பொருட்டு ஃபைனல் மிக்ஸ் & சென்சார் என பிசியாக இருக்கும் முருகாதாஸை சந்தித்து பேசினோம். அப்போது தர்பார் படம் உருவான விதம், ரஜினி-யுடனான ஷீட்டிங் அனுபவம், யார், யாருக்கு என்ன ரோல், நெக்ஸ்ட் படமென்ன என்பது வரை பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். இதோ அவர் பேசியதன் முழு விபரம் :

இந்த அதிரடி ‘தர்பார்’ படம் மும்பையில் நடக்கும் போலீஸ் கதை. இந்த கதையின் கருவை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே ரஜினியை சந்தித்த போது கூறினேன். அது அவருக்கு மிகவும் பிடித்ததால், இணைந்து பணியாற்றினோம். கொஞ்சம் விளக்கமாக சொல்வதானால் ரஜினிக்கு நான் படம் இயக்க ஒத்துக்கொண்டது இப்போதெல்ல…ரமணா படம் முடிந்ததுமே “எனக்கு ஒரு கதை சொல்லுங்கள்…” என்றார் ரஜினி. அது அப்படியே தள்ளிப்போனது. அதற்குப்பின் நான் ‘கஜினி’ ஒத்துக்கொள்ள, பிறகு இந்திக்குப் போக, அவர் எந்திரன், 2.ஓ என்று கமிட்டாக அந்தத் திட்டம் அப்படியே தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அது சமீபத்தில்தான் முடிவுக்கு வந்தது.

ரஜினியைப் பொறுத்த வரை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் என்னைக் கூப்பிட்டுக் கதை கேட்டார் என்பதாலேயே அந்தப் படம் முடிவாகி விட்டதாக அர்த்தமில்லை. என்னிடம் கேட்டது போலவே இன்னும் சில பேரிடமும் கேட்டிருப்பார். அதில் எதைச் செய்வது என்று அவர்தான் முடிவெடுப்பார். அப்போதுதான் யார் இயக்குநர் என்று முடிவாகும்.

அப்படித்தான் ‘தர்பாரு’ம் முடிவானது. இந்தக் கதையை அவர் ஒத்துக்கொண்டதற்குக் காரணம் ‘மூன்று முகத்’திற்குப் பின் அவர் சீரியஸான போலீஸ் கதை எதுவும் செய்யவில்லை. அதனால் ஒரு இடைவெளிக்குப் பின்பு அப்படி ஒரு கதை சொன்னதால் அவர் ஒத்துக்கொண்டார்.

இந்தக் கதைக்கு முன்னால் ‘சந்திரமுகி 2’ செய்யலாம் என்று ஒரு ஐடியா சொன்னேன். அவரும் உற்சாகமானார். ஆனால், அதைச் செய்வதில் நிறைய அனுமதி பெற வேண்டியிருந்தது. முந்தைய படம் எடுத்த ‘சிவாஜி பிலிம்ஸ்’ மற்றும் இயக்குநர் வாசு எல்லோரிடமும் இது குறித்துப் பேச வேண்டியிருந்தது. அதை நானே பொறுப்பேற்றுக் கொள்ள ரஜினி சொன்னார். ஆனால், அது நீண்ட வேலை என்பதால் இந்தக் கதையைச் சொல்ல, அவர் ஒத்துக்கொண்டார்.

இடையில் அவரை ‘தாதா’வாக, வில்லனிக் ஹீரோவாக, எந்திர மனிதனாகவெல்லாம் பார்த்ததில் இருந்து இந்தக் கேரக்டர் முற்றிலும் புதிதாக இருக்கும். இந்தி, தெலுங்கிலும் அவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால் மூன்று மொழி ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் பிரமாண்டமான சூப்பர் ஸ்டாரின் ஆக்‌ஷன் படமாக ‘தர்பார்’ இருக்கும்..!”

இந்த தர்பார்-ரில் மும்பை போலீஸ் கமிஷனராக ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரில் ரஜினி நடித்துள்ளார். கட்டிட கலை வல்லுனராக நயன்தாரா நடித்துள்ளார். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடித்துள்ளார். பவர்புல்லான வில்லனாக சுனில் ஷெட்டி கலக்கி உள்ளார். இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான படமாக அமையும். ஏனென்றால் ரஜினி இதுவரை நடித்துள்ள எந்த படத்தின் சாயலும் இதில் இருக்காது. சமீப கால படங்களில் ரஜினியின் பாணி சில இடம் பெறாமல் உள்ளது. ஆனால் இதில் 90-களில் ரஜினியின் மிடுக்கான, ஸ்டைலான, துடிப்பான எனர்ஜியை பார்க்க முடியும். போலீஸ் கதை என்பதால் அவுட்டோர் ஷூட்டிங் அதிக அளவில் நடத்த வேண்டும். இங்கு நடத்தினால் ரசிகர்கள் அதிக அளவில் வந்துவிடுவார்கள் என்பதற்காக மும்பையை கதை களமாக தேர்ந்தெடுத்தோம். அது தவிர இந்த படம் ஒரு பான்-இந்தியா மூவி என்பதால் பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. அதற்கும் இந்த களம் உதவியாக இருக்கும் என்பதால் இதை முடிவு செய்தோம்.

போலீஸ் அதிகாரி தாடி, பரட்டை தலையுடன் நடித்திருப்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் அதற்கான விளக்கங்கள் படத்தில் தரப்பட்டுள்ளது. இதில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சில சமூக அக்கறையுள்ள விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளது. அதே போல் பாடல்களும் துள்ளலாக இருக்க வேண்டும் என்பதற்காக எஸ்பிபி, அனிரூத், விவேக் கூட்டணியில் சிறப்பாக வந்துள்ளது. ரஜினியின் ஓபனிங் சீன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இதுக்கிடை யில் தர்பார் படத்தின் டிரைலர் தமிழை விட இந்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறதே, ஏன் என்று கேட்டால், அது முதலிலேயே நாங்கள் திட்டமிட்டது தான். சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அப்படியா னால் தமிழ் மார்க்கெட்டை மட்டும் இன்றி இந்தி மற்றும் தெலுங்கு மார்க்கெட்டையும் குறி வைத்து தான் டிரைலரை தயார் செய்தோம். அதன்படி, இந்தி ரசிகர்களுக்கு டிரைலர் எப்படி இருந்தால் பிடிக்கும் என்பதை மனதில் வைத்து தான் டிரைலரை தயார் செய்தோம். அதனால், தான் இந்தியில் டிரைலர் பெரிய அளவில் ரீச் ஆகி இருக்கிறது.

மேலும், தமிழில் ரஜினிகாந்த் படம் வெளியாவதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால், பாலிவுட்டில் தர்பார் வெளியாகும் போது, இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது. அவர்களது படங்களை தாண்டி ரஜினி சார் படம் வெளியாவதை தெரியப்படுத்த வேண்டும் என்பதற் காகவே இந்தி ரசிகர்களுக்கு பிடித்தவாறு டிரைலரை ரெடி செய்தோம்.”

இந்த ஹிட் மேன்ஸ் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்றோரைத் திரையில் பார்த்து ரசித்துத்தான் சினிமாவுக்கே வந்தோம். அவர் களுடனே இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமைந்தபோது அளவு கடந்த சந்தோஷம் கிடைத்தது.ஒரு இயக்குநர் என்பதையும் மீறி ரஜினி சார் செட்டுக்குள் வந்தாலே ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். ஒரு பஞ்ச் வசனத்தை அவர் பேசும்போதும் நாமே எதிர்பாராத விதமாக புதிதாக ஏதாவது அவர் செய்தாலோ நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த செட்டும் கைதட்டி ஆரவாரம் செய்யும்.

அது மட்டுமில்லாமல் ரஜினி சார் மாதிரி பெரிய நடிகர்களுடன் பணியாற்றும் போது மிகவும் கம் போர்ட்டாக இருக்கும், என்ன கம்போர்ட்- என்றால் அவர்கள் வொர்கிங் ஸ்டைலே வேறு மாதிரி இருக்கும். அதாவது ஷூட் போகறதுக்கு முன்னாடியே அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கேட்டு ஒரு முடிவுக்கு வந்துடுவாங்க. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இவர் மாதிரி சீனியர் ஆர்டிஸ்டிஸ் டுகள் வந்துவிட்டால், சின்ன இயக்குநர், பெரிய இயக்குநர் என்ற பாகுபாடு பார்க்காமல் ஸ்பாட்டில் ஒரு இயக்குநர் சொல்வதை கேட்டு நடிப்பார்கள், டைரக்டர் தான் அங்கு மாஸ்டர், அவர் சொல் வதை கேட்டு நாம் நடிக்க வேண்டும் என்பது இந்த மூத்த நடிகர்கள் எல்லோருக்கும் இருக்கிறது. அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த விதமான ஆர்கியூமெடுவும் அந்த மூத்த கலைஞர்களிடம் இருக்காது. அப்படியே அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், ஒரு காட்சி முடிந்த பிறகு டபுள் பாசிட்டிவ் பார்க்கும் போது, இதை இப்படி செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நம்மிடம் ஒரு ஆலோசனையாக தான் சொல்வார்கள்

அதே யங் ஆர்ட்டிஸ்டுகள், தாங்கள் கஷ்டப்பட்டு வந்த பாதை, தான் இருக்கும் இடத்தை விட்டுவிட கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். எனவே ஷூட்டிங் போதே அவர்கள் அவர்களுடைய சந்தேகங்களை கேட்பார்கள். காரணம் அவர்களுக்கு காட்சி எப்படி வருமோ என்ற ஒரு சந்தேகம் இருக்கும். அவர்கள் அப்படி கேட்கும் போது, நமக்கே ஒரு டவுட் வந்து விடும். சினிமா என்பது ஒரு மெட்டிரியல் கிடையாது, அது ஒரு மேஜிக் தானே. எனவே இளம் நடிகர்களுக்கு அந்த சந்தேகம் வரும், அது தவறு கிடையாது. இது தான் மூத்த நடிகர்களுக்கும் யங் நடிகர்களுக்கும் உள்ள வித்யாசம்.

இந்த ’தர்பார்’ படத்திற்குப் பிறகு விஜயுடன் இணையப் போவதாகவும், அடுத்த ரஜினிக்கே மீண்டும் ஒரு படம் இயக்கப் போவதாகவும், அஜித்தை வைத்து இயக்கப் போவதாகவும் தகவல் பரவுகிறது, உண்மையில் அடுத்தப் படம் எந்த ஹீரோவுடன்? என்று கேட்டால், நான் ஒரு ஹீரோ, ஒரு தயாரிப் பாளர் என்று இருக்க மாட்டேன். அடுத்தப் படம் என்றால், ஐந்து தயாரிப்பாளர்கள் என்னை தொடர்பு கொள்வார்கள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடக்கும், அதில் யார் எனக்கு செட்டாவார் கள், என்று யோசிப்பேன். அதுபோல முன்று, நான்கு ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை போகும், அதில் ஒருவ ருடன் தான் இணைவேன். ஆனால், அவை அனைத்தும் உடனே நடந்து விடாது. சில மாதங்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தான் எனக்கே தெரிய வரும். அதே போல், எப்போது வேண்டுமா னாலும், எது வேண்டுமானாலும் மாறும். அதனால், இப்போதைக்கு எனது அடுத்தப் படம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.” என்றார்.