“சைக்கோ” டிசம்பர் 27 திரையரங்கில் வெளியாகும்!

0
280

ஒற்றை டீஸர் மூலம் ரசிகர்களை மயிர்க்கூச்செரியும், திரில்லின் உச்சத்திற்கு எடுத்துசென்ற மிஷ்கினின் “சைக்கோ” உன்னதமான படைப்பு எனும் பாராட்டை எல்லைகள் கடந்து உலகமுழுவதும் பெற்று வருகிறது. பயத்தை விதைக்கும் டீஸரில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் தங்களின் மாறுபட்ட வித்தியாசமான நடிப்பால் பாராட்டை குவித்து வருகிறார்கள். படக்குழுவிடமிருந்து அடுத்த ஆச்சர்ய அறிவிப்பாக “சைக்கோ” டிசம்பர் 27  திரையரங்கில் வெளியாகுமெனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இது பற்றி கூறியதாவது…

நாங்கள் எங்கள் Double Meaning Production தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகின்றோம். ஆனாலும் ஆரம்பம் முதல் “சைக்கோ” திரைப்படம் மனதுக்கு மிகவும் நெருக்க மான ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் பங்குகொண்ட ஒவ்வொருவருக்குமே இப்படம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்கி வருகிறது. எங்களிடம் மிஷ்கின் கதை சொன்ன நாளிலிருந்து அது உருவான ஒவ்வொரு தருணமும் மிகச் சிறப்பான நினைவலைகள் கொண்டது. ஒரு மிகச்சிறந்த திரைப்படம் தற்காலத்தில் மிகச்சரியான காலத்தில் வெளியிடப்படவேண்டியது அவசியம். சில, பல தேதிகளை பரிசீலித்தபின் டிசம்பர் 27 மிகச்சரியான தேதி என முடிவு செய்தோம்.

இப்படத்தில் பணிபுரிந்தது வாழ்நாளின் மிகச்சிறந்த அனுபவத்தை தந்தது. நிறைய கற்றுக் கொள்ளும் தருணங்கள் படமுழுக்க நிறைந்திருந்தது. படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரையும் இப்படம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.

டீஸர் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் இதை எப்படி எதிர் கொள்வார்கள் என்பதில் பல கலவை யான கருத்துக்கள் கொண்டிருந்தோம். ஆனால் ரசிகர்கள் இதை வரவேற்று கொண்டாடிய விதம் எங்களை பெரும் உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. காமெடி, திரில் என எந்தவொரு வகை படைப்பானாலும் அதனை மிகச்சரியாக தரும்போது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு உதாரணம் இந்த டீஸர். மிஷ்கினின் இசை இந்த டீஸருக்கு பெரிய பலமாக இருந்தது. படத்தில் இளையராஜாவின் இசை ரசிகர்களை இன்னும் மிரட்டக்கூடிதயதாக இருக்கும்.

Double Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படம் இந்த வருடத்தில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாகி விட்டிருக்கிறது. இப்படத்தில் இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி சென், ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகிய முக்கிய நடிகர்களும் நடித்துள்ளார்கள். படத்தின் வெளியீட்டு வேலைகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.