அஜித் நடித்த விஸ்வாசம் படத்துக்கு சென்சாரில் U சர்டிபிகேட்!

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது இந்த படத்தை அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா இயக்கியுள்ளார் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார் இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய படம் என்கிற ரீதியில் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர் இதுகுறித்து தயாரிப்பாளர் தரப்பில் கூறும்போது எங்களது நிறுவனத்தில் எப்போதுமே குடும்ப பாங்கான படங்களை தருவதில் முனைப்போடு இருப்போம்.. விஸ்வாசம் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.. இந்த படத்தில் இமானின் இசை நகரம் முதல் கிராமம் வரை பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும்” என்கிறார்

இந்தப்படத்தில் விவேக், தம்பிராமையா, யோகிபாபு, ரமேஷ் திலக், கோவை சரளா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது