இந்துஜாவின் நடிப்புத் திறமை இந்த ‘பூமராங்’ படத்தில் ஆஹா.. ஓஹோ! –

இயக்குநர் கண்ணன் தற்போது தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘பூமராங்’. இந்தப் படத்தில் அதர்வா முரளி, மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா மூவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.‘மேயாத மான்’ மற்றும் ‘மெர்க்குரி’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்ட இந்துஜா இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறராம்.

“இந்துஜாவின் நடிப்புத் திறமை இந்த ‘பூமராங்’ படத்தை மேலும் சிறப்பாக்கியிருக்கிறது” என்கிறார்  படத்தின் இயக்குநரான கண்ணன். அவர் இது பற்றி பேசுகையில், “இந்துஜாவின் திறமையைப் பற்றி கூற வேண்டுமெனில் ‘திறமை’ என்ற வார்த்தை மிக சாதாரண வார்த்தையாக இருக்கலாம். ஒவ்வொரு காட்சியிலும் தன் தன்னிச்சையான நடிப்பின் மூலம் எனது வேலையை எளிதாக்கினார் இந்துஜா. அவரது கதாபாத்திரத்தின் மிக உயர்ந்த தரத்தை உணர்ந்து, மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதர்வா முரளி மற்றும் மேகா ஆகாஷ் கதாபாத்திரங்கள் ‘பூமராங்’ ஸ்கிரிப்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஸ்கிரிப்ட் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும்போது, மிகச் சிறப்பான நடிப்பை வழங்கும் இன்னும் ஒரு திறமையான கலைஞரைக் கோருகிறது. இந்துஜா நடித்த இரண்டு படங்களில் அவரது நடிப்பை பார்த்தவுடன், இந்த கதாபாத்திரத்துக்கு அவர் உடனடி தேர்வாக அமைந்தார்..” என்றார்.

ஆக்‌ஷன் – த்ரில்லர் படமான ‘பூமராங்’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் படம் வெளியாகவுள்ளது. அதற்கு முன்பாக இசை மற்றும் டிரெய்லர் இரண்டும் விரைவில் வெளியிடப்படுமாம்.

error: Content is protected !!