தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 7 மொழிப்படங்களில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மாதவன். இவர் 2000-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானர். இதனையடுத்து முன்னணி கதாநாயகனாக ஜொலித்து வந்த மாதவன், 2012-ம் ஆண்டு ஆர்யாவுடன் இணைந்து நடித்த வேட்டை படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
பின்னர் நீண்ட வருடங்களுக்கு பிறகு, 2016-ம் ஆண்டு இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். இதற்கு பிறகு 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘விக்ரம் வேதா’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அந்த வரிசையில் தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாம் பக்கத்தில் மாதவன் நடிக்க உள்ளார்.
இதன் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாக, நீண்ட நாட்களாக இருந்து வந்த தோள்பட்டை பிரச்சனைக்கு தீர்வு காணும்படி ஆப்பரேசன் செய்துள்ளார். அதன் புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.