மகள் திருமண வரவேற்பில் தன் ரசிகர்கள் அத்தனை பேருக்கும் தனி மரியாதை கொடுத்த சீயான் விக்ரம்!

0
287

நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், கெவின் கேர் நிறுவனத் தலைவர் சி கே ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள், நண்பர்கள், என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

விக்ரமின் ரசிகர்கள் அனைவரும் மேடையேறி தங்கள் நாயகனின் மகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியப்படவைத்தது. ஏனைய நட்சத்திரங்களின் வீட்டு விசேஷங்களில் ஒருசிலருக்கு மட்டுமே மேடையேறி வாழ்த்து சொல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் விக்ரம், தன்னுடைய ரசிகர்கள் அனைவரையும் மேடையேற்றி, வாழ்த்துச் சொல்ல அனுமதித்தார். இதன் மூலம் ரசிகர்கள் உற்சாகமடைந்து, வரிசையில் நின்று மணமக்களைச் சந்தித்து, வாழ்த்து தெரிவித்து சந்தோஷமடைந்தனர்.

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பலத்த ஆரவாரங்களுக்கிடையே ‘ஓ பட்டர்ஃப்ளை’ பாடலை பாடினார் விக்ரம்.

‘தமிழ் திரையுலகில் விக்ரமின் நடிப்பு எப்படி தனித்துவம் மிக்கதோ, அதே போல் அவருடைய மகளின் திருமண வரவேற்பில் ரசிகர்களையும் வரவழைத்து, அவர்களையும் கவுரவித்ததன் மூலம் சொந்த வாழ்க்கையில் விக்ரம் தனித்தன்மையுடைய மனிதநேய பண்பாளர் என்பதை நிரூபித்துவிட்டார்’ என்று தங்களது இணையப்பக்கத்தில் மகிழ்ச்சியுடன் இதனை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.