புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் ’மதுரவீரன்’. இந்தப் படத்தில் சண்முகபாண்டியனின் ஜோடியாக புதுமுக நாயகி மீனாட்சி நடித்திருக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். மற்றும் ‘வேல’ ராமமூர்த்தி, மைம் கோபி, P.L.தேனப்பன், மாரிமுத்து, ’நான் கடவுள்’ ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இசை – சந்தோஷ் தயாநிதி, பாடல்கள் – யுகபாரதி, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், கலை – விதேஷ், சண்டைப் பயிற்சி – ‘ஸ்டன்னர்’ சாம், நடனம் – சுரேஷ், நிர்வாக தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு – விஜி சுப்ரமணியன். நிர்வாக தயாரிப்பு – ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி.பாலா, எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம் – பி.ஜி.முத்தையா.
ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. வி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை கேப்டன் விஜயகாந்த் அண்மையில் வெளியிட்டார்.
இதனிடையே இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து வியந்து போன ஸ்ரீசரவணபவா பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல விநியோகஸ்தருமான ஏ.சீனிவாச குரு இந்தப் படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார்,
படப்பிடிப்பு முடியும் முன்பே படம் வியாபாரமாகியுள்ளதால், தமிழச் சினிமாவுலகத்தில் இந்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.