ஜீ வழங்கும் ஃபிங்கர்டிப் சீசன் 2 பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஜீ வழங்கும் ஃபிங்கர்டிப் சீசன் 2 பத்திரிக்கையாளர் சந்திப்பு

  சென்னை (ஜூன் 13, 2022): ஜீ5 தளம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் பிரீமியர் செய்ய திட்டமிடப்பட்டுள்ள தொடரான ​​‘ஃபிங்கர்டிப்’ சீசன் 2 இன் செய்தியாளர் சந்திப்பு, இன்று படக்குழுவினர் கலந்து கொள்ள இன்று இனிதே நடைபெற்றது. ஜீ5 தளம் தொடர்ந்து வெற்றிகரமான தொடர்களான விலங்கு, ஆனந்தம், கார்மேகம் என பல ஒரிஜினல் படைப்புகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் தொடரான ​​‘ஃபிங்கர்டிப்’ இன் இரண்டாவது சீசனை தற்போது அறிவித்துள்ளது. இந்த தொடரை அருண் மற்றும் ஜார்ஜ் நம்பி தயாரித்துள்ளனர், சிவகர் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, வினோத் கிஷன், கண்ணா ரவி, ஷரத் ரவி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 17, 2022 அன்று ‘ஃபிங்கர்டிப்’ சீசன் 2 வெளியாவதை ஒட்டி…
Read More
“ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வுடன், தமிழ் புத்தாண்டை வரவேற்கிறது ஜீ5 !

“ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வுடன், தமிழ் புத்தாண்டை வரவேற்கிறது ஜீ5 !

ஜீ5 தளத்தில் வரவிருக்கும், புதிய அதிரடி ஒரிஜினல் தொடர்கள்  பற்றிய அறிவிப்பு,  தமிழ் படைப்பாளிகளான இயக்குநர் வெற்றிமாறன், விஜய், வசந்த பாலன், கிருத்திகா உதயநிதி ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. நடிகர்-இயக்குனர்- பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர், இத்தளத்தில் வரவிருக்கும் தங்களது நிகழ்ச்சிகளை,  வைரல் ஹிட் “விலங்கு” தொடரின்  நடிகர்கள் மற்றும் குழுவினர் முன்னிலையில் அறிவித்தனர். ஜீ5 , சென்னையில் மிளிரும் நட்சத்திரங்கள் நிரம்பிய பிரமாண்டமாக நடந்த  “ஒரு ஆசம் தொடக்கம்”  நிகழ்ச்சியில் –  தமிழில் அடுத்தடுத்து வரவிருக்கும் அழுத்தமான கதைகளின் வரிசையை அறிவித்தது. தமிழின் முக்கிய படைப்பாளிகள் பங்குகொள்ளும் இந்த படைப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. தமிழின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரிஜினல் தொடர்  “நிலமெல்லாம் ரத்தம்” எனும்  ஜீ5 பிரத்யேக தொடரை அறிவித்தார்.  இவருடன் பன்முக ஆளுமையாளரான பிரகாஷ் ராஜ் நடிப்பில்  ‘அனந்தம்’ என்ற அழகிய டிராமா தொடர்,  நடிகை ராதிகா…
Read More
“வலிமை” 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை கடந்து, சாதனை

“வலிமை” 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை கடந்து, சாதனை

ஜீ 5 ஓடிடி தளத்தில், நடிகர் அஜீத் குமாரின் சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் “வலிமை” 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை கடந்து, சாதனை படைத்துள்ளது. தமிழகத்தின் முதன்மை நட்சத்திரங்களுல் ஒருவரான நடிகர் அஜித்குமார் நடிப்பில், வெளியான 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான, ‘வலிமை’ சமீபத்தில் ஜீ5 தளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது இப்படம் 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை கடந்து, உலகளவில் சாதனை படைத்துள்ளது. ஜீ5 தளத்தில், “வலிமை” திரைப்படம், தமிழ், கன்னடம்,தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது தற்போது மலையாளம் மொழியிலும் இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் ஓடிடி இயங்குதளங்களின் மறுக்கமுடியாத வெற்றியாளரான ஜீ5, பல ஆண்டுகளாக அனைத்து வகையான கதைகள் மற்றும் மொழிகளில் எப்போதும் அருமையான திரைப்படங்களையும், அசல் உள்ளடக்கங்களையும் வழங்கி வருகிறது. நடிகர் அஜித் குமார் அவர்களை கௌதவபடுத்தும் வகையில், ‘வலிமை’ திரைப்படம், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் ஆனதை…
Read More
சாதனை படைக்கும் வலிமை !

சாதனை படைக்கும் வலிமை !

நடிகர் அஜீத் குமாரின் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் “வலிமை” 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்  பார்வை நிமிடங்களை கடந்து, மிகப்பெரிய ஓடிடி ஓப்பனிங்கை பெற்று, சாதனை படைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய  பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு, ஆக்‌ஷன் திரைப்படமான ‘வலிமை’ நேற்று ஜீ5 தளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான வேகத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை பெற்று, ஓடிடி உலகில் மிகப்பெரிய ஓபனிங் சாதனை படைத்துள்ளது. படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் ஜீ5 தளத்தில் தற்போது  காண கிடைக்கின்றன. “வலிமை” திரைப்படம், தமிழ், கன்னடம்,தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழ்  ஓடிடி இயங்கு தளங்களின் மறுக்கமுடியாத வெற்றியாளரான ஜீ5, பல ஆண்டுகளாக அனைத்து வகையான கதைகள்  மற்றும் மொழிகளில் எப்போதும் அருமையான திரைப்படங்களையும், அசல் உள்ளடக்கங்களையும் வழங்கி வருகிறது. நடிகர் அஜித் குமார் அவர்களை கௌரவபடுத்தும் வகையில், ‘வலிமை’  திரைப்படம், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் ஆனதை தொடர்ந்து, டிஜிட்டலில்…
Read More
10000 சதுர அடியில் அஜித்குமாரின் ‘வலிமை’ போஸ்டர் !

10000 சதுர அடியில் அஜித்குமாரின் ‘வலிமை’ போஸ்டர் !

பிரமாண்டத்தின் உச்சம் !!! அஜித்குமாரின் ‘வலிமை’ படத்திற்காக ஜீ5 நிறுவனம் 10000 சதுர அடியில் போஸ்டரை வெளியிட்டது. இந்தியாவில் வெளியான போஸ்டர்களில் இது உட்ச பட்ச சாதனை ஆகும். தமிழ் ஓடிடி இயங்குதளங்களில் மறுக்கமுடியாத வெற்றியாளராக, தன்னை நிரூபித்துள்ள ஜீ5 நிறுவனம், தொடர்ந்து பல மொழிகளில் அருமையான திரைப்படங்களையும் அசல் தொடர்களையும் வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் புதிய உள்ளடக்கத்துடன் கூடிய சிறப்பு மிகு படைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது, அஜித் குமாரின் சமீபத்திய ஆக்‌ஷன் அதிரடி திரைப்படமான ‘வலிமை’ படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிளாக்பஸ்டர் பிரீமியர் காட்சியைக் காணும் நேரம் வந்துவிட்டது. ‘வலிமை’ படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாவதை தொடர்ந்து, நடிகர் அஜித்குமாருக்கு சிறப்பு செய்யும் வகையில் ஜீ5, 10,000 சதுர அடியில் மிகப்பெரிய போஸ்டரை வெளியிட்டது. உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற பிறகு,…
Read More
வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜீ5 தளத்தில் மார்ச் 4, 2022 முதல் பிரத்யேகமாக வெளியாகியுள்ளது!

வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜீ5 தளத்தில் மார்ச் 4, 2022 முதல் பிரத்யேகமாக வெளியாகியுள்ளது!

'முதல் நீ முடிவும் நீ' முதல் திரைப்படம் 'விலங்கு' இணைய தொடர் வரை ப்ளாக்பஸ்டர் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ஜீ 5 நிறுவனம், சமீபத்தில் வெளியான நடிகர் விஷாலின் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான “வீரமே வாகை சூடும்” திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மார்ச் 4, 2022 உலகம் முழுதும் பிரத்யேகமாக வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் நடித்துள்ள இப்படம், தெலுங்கில் சாமந்திடு மற்றும் கன்னடத்தில் ஒப்பா என்ற பெயரில் ஒளிப்பரப்படவுள்ளது. இப்படத்தில் விஷாலுடன் டிம்பிள் ஹயாதி, ரவீனா ரவி, யோகி பாபு, ரமணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வலுவான கதை மற்றும் நட்சத்திர நடிகர்களின் சிறப்பான நடிப்பால், பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது, படம் வெளியான தொடக்க வாரத்தில் ரசிகர்களின் வாய்வழி பாரட்டினால் பலரையும் சென்றடைந்து, நல்ல வெற்றியை பெற்றது. தற்போது ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளதால், பெரிய திரையில் இப்படத்தை…
Read More
விறுவிறுப்பான கதைகளத்துடன் பார்வையாளர்களை கவர வருகிறது, ஜீ5 ஒரிஜினல் சீரிஸ் “விலங்கு” !

விறுவிறுப்பான கதைகளத்துடன் பார்வையாளர்களை கவர வருகிறது, ஜீ5 ஒரிஜினல் சீரிஸ் “விலங்கு” !

ஜீ5 தளமானது, பல்வேறு வகையிலான கதையுடன் மிகச்சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை சீரான இடைவெளியில் தந்து வருவதன் மூலம், ரசிகர்களின் விருப்பமிகு ஒடிடி தளமாகியுள்ளது. ஜீ5 யில் வெளியான ஆட்டோ சங்கர், பிங்கர் டிப், க.பெ.ரணசிங்கம், மலேஷியா டு அம்னீஷியா, டிக்கிலோனா, விநோதய சித்தம், பிளட் மணி, முதல் நீ முடிவும் நீ மற்றும் பல ஒரிஜினல் படங்கள், பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளன. தற்போது, ஜீ5 அடுத்ததாக ரசிகர்களுக்காக பிரத்யேகமாக, இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் "விலங்கு" என்ற ஒரிஜினல் வெப் சீரிஸை, ஃபிப்ரவரி 18, 2022 வெளியிடவுள்ளது. 7-எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், ஒரு புலனாய்வு தொடராக க்ரைம் ஜானரில் உருவாகியுள்ளது, இத்தொடரில் திருச்சிக்கு அருகிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் பரிதி என்ற பாத்திரத்தில், கதாநாயகனாக விமல் நடித்துள்ளார். இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், RNR மனோகர், ரேஷ்மா ஆகியோருடன்…
Read More
பிரியா பவானி சங்கர் நடிப்பில் புதிய படத்தை வெளியிடுகிறது – ஜீ5 நிறுவனம் !

பிரியா பவானி சங்கர் நடிப்பில் புதிய படத்தை வெளியிடுகிறது – ஜீ5 நிறுவனம் !

2021 ல் ஜீ5 ”மதில்” ”விநோதய சித்தம்” ”டிக்கிலோனா” ”மலேஷியா டு அம்னிஷியா” உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. ‘பிளட் மணி’ (Blood Money) என பெயரிடப்பட்டுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கிஷோர், ஷிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ வினோத் சாகர், ‘கலைமாமணி’ ஶ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் உருவான இப்படத்தை எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் இர்பான் மாலிக் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் கூறுகையில், "'ப்ளட் மணி' படத்தில் நான் ஒரு உணர்ச்சிகரமான பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல பத்திரிக்கையாளராக வாழ்க்கையை…
Read More