16
Dec
இயக்குனர் சேரன், தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகரன் இருவரும் "மூவி உட்" ஆப்பின் வெப்சைட் மற்றும் ஆண்டிராய்ட், ஆப்பிள் ஆப்களை வெளியிட்டார்கள். இந்த Moviewud ஆப்-பில் சிறு முதலீட்டு படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை ஆல்பங்கள், வெப் சீரீஸ்கள் என மற்ற ஆப் களை போன்றே அனைத்தும் இடம்பெறும். மேலும் OTT தளங்களில் முதல் முறையாய் மேடை நாடகங்களை இத்தலைமுறை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். சிறு முதலீட்டுப் படங்கள், சுயாதீன திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒர் தளமாய் உருவாகியுள்ளார்கள். மிக முக்கியமாய் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களின் பார்வையாளர்கள் மற்றும் வருமானத்தை பார்த்து தெரிந்து கொள்ள அவர்களுக்கு. தனி டேஷ்போர்ட் அளிக்கப்படுகிறது. படங்களை வாடகை முறையில் 10 ரூ முதல் 50 ரூபாய் வரை பணம் கட்டி ஓர் நாள் வரையும் , ஆறு மாதங்களுக்கு ரு.200 ரூபாயும். வருடத்திற்கு ரூ.365 ருபாய் மட்டுமே. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு மூவி வுட் தளத்தில் ஸ்டைல்…