“கேப்டனின் குரல் தான் எனக்கு சோறு போட்டது”  நெகிழ்ந்த நடிகர் டிஎஸ்கே !!

“கேப்டனின் குரல் தான் எனக்கு சோறு போட்டது” நெகிழ்ந்த நடிகர் டிஎஸ்கே !!

கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் சாம்பியன் பட்டம் வென்று தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமானவர் நடிகர் டிஎஸ்கே. இதனைத் தொடர்ந்து ‘பெட்ரோமாக்ஸ்’ என்கிற படத்தின் மூலம் சினிமாவிலும் ஒரு நகைச்சுவை நடிகராக நுழைந்து கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ள டிஎஸ்கே, இதுவரை தனது பாணியாக இருந்த நகைச்சுவை நடிப்பிலிருந்து விலகி சற்று வில்லத்தனம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது நடிப்பிற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்துள்ளது. அது மட்டுமல்ல இந்த படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷ், விஜயகாந்த் ரசிகராக நடித்திருக்கிறார் என்பதால் படம் முழுவதிலும் விஜயகாந்தின் புகைப்படங்கள், போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளது மற்றும் கிரிக்கெட் மைதானங்களில் கேப்டன் விஜயகாந்தின் புகழ்பெற்ற பாடல்கள் ஒலிப்பது என புரட்சி கலைஞரின் புகழ் பாடும் படமாக இது…
Read More
கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் “படை தலைவன்” படத்தின் பர்ஸ்ட் லுக்!

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் “படை தலைவன்” படத்தின் பர்ஸ்ட் லுக்!

  VJ கம்பைன்ஸ் ஜெகநாதன் பரமசிவம் மற்றும் சுமீத் ஆர்ட்ஸ் சுமீத் சாய்கல் வழங்க, Directors Cinemas  தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படம் "படை தலைவன்". இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் விடியோவை கேப்டன் விஜயகாந்த் தனது பிறந்தநாள் தினமான இன்று வெளியிட்டார். நிகழ்வின் போது திருமதி பிரேமலதா விஜயகாந்த், திரு விஜய பிரபாகரன், "படை தலைவன்" படத்தின் நாயகன் சண்முக பாண்டியன், இயக்குனர் U அன்பு மற்றும் படக்குழுவினர் உடனிருந்தனர். "படை தலைவன்" பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் விடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன்  "படை தலைவன்" படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. “வால்டர்”  மற்றும்…
Read More
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பூஜையுடன் இன்று துவங்கியது!

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பூஜையுடன் இன்று துவங்கியது!

  Directors Cinemas தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவினில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. “வால்டர்” மற்றும் "ரேக்ளா" பட இயக்குநர் U அன்பு கதையில், “நட்பே துணை” இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனத்தில், இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, இப்படத்தில் பதிவு செய்யப்படவுள்ளது. கேரள காடுகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும் ஒரிசா தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில்…
Read More
மும்பையில் ஹிப்-ஹாப் கான்சர்ட் நடத்தவுள்ளார் கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்!

மும்பையில் ஹிப்-ஹாப் கான்சர்ட் நடத்தவுள்ளார் கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்!

  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், அனைவராலும் கேப்டன் என்று அறியப்படும் விஜயகாந்த்-இன் மகன் விஜய பிரபாகரன் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மாற்றியமைக்க டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறார். இந்த கூட்டணியின் மூலம் மும்பையில் நடைபெற இருக்கும் முதல் கான்சர்ட்-இல் பிரபல ஹிப்-ஹாப் கலைஞரான 50-சென்ட் கலந்து கொள்கிறார். இவரது நிகழ்ச்சிகளுக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிராமி மற்றும் எம்மி விருதுகளை வென்ற புகழ்பெற்ற கலைஞர் கர்டிஸ் 50 சென்ட் ஜாக்சன் தனது உலகளாவிய இசைக்கச்சேரி "The Final Lap Tour 2023" இந்தியாவில் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு இசைக்கச்சேரியானது 50 சென்ட்-இன் "Get Rich or Die Tryin" ஆல்பத்தின் 20-ஆவது ஆண்டு விழாவை குறிக்கிறது. இந்த நிகழ்ச்சி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் அரங்கில் நடைபெற உள்ளது. நேரடி…
Read More