12
Aug
ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இணைந்து நடனமாடிய இதயத்தைத் தொடும் பாடலான 'நீதானே நீதானே...' என்ற பாடல் 'வேதா'வில் இருந்து இப்போது வெளியாகியுள்ளது! ஷர்வாரி, ஜான் ஆபிரஹாம் மற்றும் அபிஷேக் பானர்ஜி நடிப்பில், ஜீ ஸ்டுடியோஸ், எம்மே எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜேஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகியவை வழங்கும் 'வேதா' படத்தில் இருந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் பாடலான, ‘நீதானே நீதானே’ வெளியாகியுள்ளது. 'ஹோலியான்' மற்றும் 'மம்மி ஜி' ஆகிய இரண்டு எனர்ஜிட்டிக் பாடல்களுக்குப் பிறகு, இந்த அழகான பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர். இந்தப் பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இடையேயான கெமிஸ்ட்ரி நிச்சயம் பார்வையாளர்களை மயக்கும். அதேசமயம், பாடலின் முடிவில் ஒரு அதிர்ச்சி தரும் ட்விஸ்ட்டும் உள்ளது. பாடலை வெளியிட்ட ஜான் ஆபிரகாம், "'நீதானே நீதானே...' பாடல் 'வேதா' படத்தின் ஆன்மா. என் கதாபாத்திரத்தின் எமோஷனல் மற்றும் ரொமாண்டிக் பக்கத்தை…