சிரஞ்சீவியின் “விஸ்வம்பரா” டீசர் வெளியாகியுள்ளது !

சிரஞ்சீவியின் “விஸ்வம்பரா” டீசர் வெளியாகியுள்ளது !

மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி சாகசத் திரைப்படத்தில் நடித்து நீண்ட காலமாகிவிட்டது, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அவர், நம்மை புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், பிரம்மாண்டமான ஃபேண்டஸி சாகசத் திரைப்படமான, விஸ்வம்பரா படத்தில் நடித்து வருகிறார். பிம்பிசாராவின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, தனது ஆதர்ஷ நாயகனை இப்படத்தில் இயக்குகிறார் இயக்குநர் வசிஷ்டா. முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது, முன்னதாக ரசிகர்களுக்கு உறுதியளித்தபடி, தயாரிப்பாளர்கள் தசரா பண்டிகையை முன்னிட்டு, படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும் டீசர் ரசிகர்களைப் பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி உலகிற்கு அழைத்துச் செல்கிறது. இந்த டீசர் இது ஒரு மாய நிலப்பரப்பில் துவங்குகிறது. மீன் வடிவ பறவைகள் வானத்தில் பறக்க, கர்ஜிக்கும் காண்டாமிருகங்கள் அங்கு உலவுகிறது. ஒரு தீய சக்தி இந்த சாம்ராஜ்யத்தின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க அச்சுறுத்துகிறது. என்ன நடக்கும் ? காலம் தான் அந்த கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும்.…
Read More