நான் யாரையும் மதிப்பீடு செய்வதில்லை – பிரபுதேவா

நான் யாரையும் மதிப்பீடு செய்வதில்லை – பிரபுதேவா

  ‘‘ஹர ஹர மகாதேவகி’ இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் பொய்க்கால் குதிரை” என படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம், இசை மற்றும் ‘பொய்கால் குதிரை’ படம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விழா, பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா, இசையமைப்பாளர் டி இமான்,…
Read More
நடிகை வரலட்சுமி சரத்குமார் டைரக்ட செய்யப் போகும் ‘கண்ணாமூச்சி’!

நடிகை வரலட்சுமி சரத்குமார் டைரக்ட செய்யப் போகும் ‘கண்ணாமூச்சி’!

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனம் ‘மெர்சல்’ படத்திற்குப் பிறகு தயாரிக்க இருக்கும் புதிய திரைப்படம் ‘கண்ணாமூச்சி’. இந்தப் படத்தை நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்கவிருக்கிறார் என்பது இன்றைய தினத்தில் தமிழ்த் திரையுல கத்தை அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியப்படவும் வைத்திருக்கும் ஒரு செய்தி. இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பெண் இயக்குநரும் இவர்தான். பல்வேறு மொழி திரைப்படங்களில் பல சவாலான வேடங்களை ஏற்று தனக்கென்று நடிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.  அவர் திரையில் இதுவரையிலும் ஏற்று நடிக்காத ஒரு வேடத்தை ஏற்று இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். புதுமையான திரைக்கதையையும் அமைத்து தனது முதல் படமாக இந்த ‘கண்ணாமூச்சி’ படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். ‘கண்ணாமூச்சி’ என்ற இந்தப் படத்தின் தலைப்பு தாங்கிய போஸ்டரை இன்று (18.10.2020 ஞாயிறு) காலையில்  அரசியல், சமூகம், விளையாட்டு மற்றும் திரை உலகை சார்ந்த பெண் பிரபலங்கள் பலரும் இணைந்து ஒரே சமயத்தில் வெளியிட்டுள்ளனர்.…
Read More