19
Jan
இந்த பொங்கல் பண்டிகையில் பல படங்கள் வெளியானாலும் 12 வருடங்கள் கழித்து வெளியான மதகஜராஜா படத்தின் வெற்றியும், ஏழு வருடங்கள் கழித்து பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் வெற்றியும் மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறி இருக்கிறது. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் எதிர்கொளும் பாலியல் வன்முறைகளுக்கு கடுமையான தீர்வு காணப்பட வேண்டும் என ‘வணங்கான்’ படம் மூலம் இயக்குநர் பாலா அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது ரசிகர்களிடம், குறிப்பாக பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கும் அதுவே மிகப்பெரிய காரணமாக அமைந்து விட்டது. அருண்விஜய்யின் மாறுபட்ட கதாபாத்திரமும், உணர்வுப்பூர்வமான நடிப்பும், அதற்கு அவர் கொடுத்திருக்கும் கடின உழைப்பும், கதாநாயகி ரோஷிணி, தங்கை ரிதா உள்ளிட்ட படத்தில் இடம்பெற்ற அனைத்து நடிகர்களின் இயல்பான பங்களிப்பும் என எல்லாம சேர்ந்து வணங்கான் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்துள்ளன.. நல்ல படங்களை தயாரித்தால் மக்கள் நிச்சயம் வரவேற்பு தருவார்கள், வெற்றியை பரிசளிப்பார்கள் என தொடர்ந்து நம்பிக்கையுடன்…