‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘ படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘ படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘ படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இயக்குநர் பேரரசு பேசினார். அவர் பேசும் போது, “இங்கே வந்திருக்கும் ரோபோ சங்கர் மகளைப் பார்க்கும்போது எனக்கு அவர் பிகில் படத்தில் நடித்த பாண்டியம்மா என்ற பாத்திரத்தின் பெயர் தான் ஞாபகம் வருகிறது.சொந்தப் பெயரை விட்டுவிட்டு கதாபாத்திரத்தின் பெயர் பேசப்பட்டால் அதுதான் அந்தப் பாத்திரத்தின் வெற்றி என்று சொல்லுவேன். நான் ‘திருப்பாச்சி’யில் பசுபதியை நடிக்க வைத்து இருந்தேன். அந்த படம் வெளியாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் பசுபதி என்னிடம் பேசினார் .”என்ன சார் இப்படி செய்து விட்டீர்கள்?” என்றார். என் படத்தில் நல்ல கேரக்டர் தானே அவருக்குக் கொடுத்து இருந்தேன். அவருக்கு நல்ல பெயர் தானே…
Read More
’கிராண்மா’ – வழக்கமான ஹாரர் படம் இல்லை!

’கிராண்மா’ – வழக்கமான ஹாரர் படம் இல்லை!

ஜி என் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ் ஆர்,விநாயகா சுனில் இணைந்து தயாரித்துள்ள படம் 'கிராண்மா'. இப்படத்தை ஷி ஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ஜெயராஜ். ஆர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவர் பேசும்போது, ''இந்தப் படம், இதில் நடித்திருக்கும் நடிகர்களாலும் தொழில்நுட்பக் கலைஞர்களாலும் தான் விரைவாக முடிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இது ஒரு ஹாரர் திரில்லர் படம். இதன் படப்பிடிப்பு கேரளாவில் நடந்தபோது கொரோனா காலம் வந்து விட்டது .எனவே 30 நாட்களில் எடுக்க வேண்டியதை 12 நாள்களில் எடுக்க வேண்டியிருந்தது. அதுவும் இரவு முழுக்க படப்பிடிப்பு நடத்த வேண்டும். இருந்தாலும் இதில் நடித்திருக்கும் அனைவரும் முகம் சுழிக்காது நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களது ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இந்த படம் இந்நேரம் உருவாகி இருக்காது. அவர்களுக்கு நன்றி .தமிழில் படத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பி எடுத்துள்ளோம். உங்கள்…
Read More