டொவினோ தாமஸின் “ARM” படத்தின் ”கிளியே” பாடல் வெளியாகியுள்ளது!

டொவினோ தாமஸின் “ARM” படத்தின் ”கிளியே” பாடல் வெளியாகியுள்ளது!

"மின்னல் முரளி" படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டொவினோ தாமஸ். தற்போது அடுத்ததாக "ARM" படத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் ப்ரோமோஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இப்படத்தின் முதல் பாடல் மலையாளத்தில் "கிளியே", தெலுங்கில் "சிலகே", தமிழில் "கிளியே", கன்னடத்தில் "கினியே" மற்றும் இந்தியில் "து ஹை" என்ற பெயர்களில் வெளியாகியுள்ளது. இந்த மெல்லிசை பாடல் ஒவ்வொரு மொழியிலும் அழகான வரிகளைக் கொண்டுள்ளது, அது ரசிகர்களின் மனதில் கேட்டவுடனே இடம் பிடித்துள்ளது. இப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார். இந்த பாடலில் திருச்சூரில் இருந்து 30 பேர் கொண்ட செண்ட மேளம் மற்றும் புடாபெஸ்டில் இருந்து 40 பேர் கொண்ட இசைக்குழு இடம்பெற்றுள்ளனர். இந்த ட்யூன் பலரது இதயங்களையும் கவர்ந்துள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் கபில் கபிலன்…
Read More
மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த டோவினோ தாமஸின் “ARM” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது!

மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த டோவினோ தாமஸின் “ARM” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது!

"மின்னல் முரளி" மற்றும் "2018" ஆகிய படங்களின் மூலம் மலையாள சினிமா தாண்டி மற்ற மொழி ரசிகர்களிடமும் கவனத்தை ஈர்த்தார் டோவினோ தாமஸ். அவரின் அடுத்த படமான "ARM" ஒரு பான்-இந்தியா ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகி உள்ளது. மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் பேனர்களின் கீழ் தயாராகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்கி உள்ளார். "ARM" படம் முழுக்க முழுக்க 3Dயில் தயாராகி, மலையாள சினிமா வரலாற்றில் தொழில்நுட்ப ரீதியாக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படமாக மாறி உள்ளது. இந்த படம் பற்றி அறிவிப்பு வெளியானதிலிருந்து, ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் இருந்து இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது புதிதாக வெளியிடப்பட்ட டிரெய்லர் படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இந்த ட்ரெய்லரில் பூமியை ஒரு எரியும் சிறுகோள்…
Read More