சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு !!

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு !!

“எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. குறிப்பாக "தேவைக்கு கிடைக்காததும்... தேவைக்கு அதிகமாக கிடைக்கிறதும்... எப்பவுமே ஒரு வலிதான்..." என பாரதிராஜா குறிப்பிடும் வசனம் மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தி வைரலாகி கொண்டு வருகிறது. திரு.மாணிக்கம் படம் மாஸ்டர் பீஸ் நிறுவனம் மூலம் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் பெருவாரியான திரையர‌ங்குகளில் வெளியிடப்படுகிறது. மேலும் ZEE தொலைக்காட்சி நிறுவனம் திரைக்கு வரும் முன்னரே திரு.மாணிக்கம் திரைப்படத்தை பார்த்து இதயம் கரைந்து இந்தப் படம் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற படமாகவும் மனதை நெகிழவைக்கும் படமாகவும் இருக்கும் என்பதை உணர்ந்து, திரு.மாணிக்கம் திரைப்படத்தின் OTT மற்றும் SATELLITE உரிமையை வாங்கி உலகமெங்கும் வெளியிடவிருக்கிறார்கள்... ‘ராஷ்மி ராக்கெட்’ என்ற…
Read More