12 பாடல்கள் பின்னணி என்ன?- “வள்ளியம்மா பேராண்டி” இசை ஆல்ப வெளியீட்டில் பா.ரஞ்சித்!

12 பாடல்கள் பின்னணி என்ன?- “வள்ளியம்மா பேராண்டி” இசை ஆல்ப வெளியீட்டில் பா.ரஞ்சித்!

தெருக்குரல் அறிவு எழுதி, மெட்டமைத்து, இசை வடிவமைத்து, சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி". இசை உலகில் கோலோச்சும் முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் (Sony Music) நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. இந்த ஆல்பம் பாடல் வெளியீடு விழா, திரைப்பிரபலங்களுடன் ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் D இமான் பேசியதாவது... தெருக்குரல் எனும் பெயரை மாற்றி, பல அடைமொழிகள் வைக்கும் அளவு அறிவு வளர்ந்துள்ளார். ஆல்பத்தின் பாடல் அத்தனை அற்புதமாக உள்ளது. பாடலை வெளியிட்ட சோனி மியூசிக் நிறுவனத்திற்கு என் நன்றிகள். ஆல்பம் வீடியோவில் அறிவு மிக நன்றாகச் செய்துள்ளார். அவர் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள். இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது... காஸ்ட்லெஸ் கலக்டிவ் செய்யும் போது தான் அறிவை முதல் முறை பார்த்தேன். கலை இலக்கியத்தை அரசியல் வடிவமாக்கி மக்களிடம் கொண்டு…
Read More