தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பி.எல்.தேனப்பன் விலகல்!

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பி.எல்.தேனப்பன் விலகல்!

கோலிவுட்டின்  தலைமை செயலகமான  தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் விலகியுள்ளார். இது தொடர்பாக  அவர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷாலுக்கு எழுதிய கடிதத்தில், விஷால் தலைமையிலான நிர்வாகிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களையும் கண்டனங்களையும் தெரிவித்திருக்கிறார். தேனப்பன் எழுதியுள்ள ராஜினாமா கடிதம் இதோ : “நான் இதுவரை தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக ஒரு முறையும், துணைத் தலைவராக ஒரு முறையும், பல முறை செயற்குழு உறுப்பினராகவும்  பணியாற்றியுள்ளேன். இப்பொழுது இருக்கும் நிர்வாகத்தில் எதிர்க்கட்சி அணியிலிருந்து செயற்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வெகு சில உறுப்பினர்களில் நானும் ஒருவன். இதுவரை என்னால் முடிந்த அளவிற்கு இந்த நிர்வாகத்திற்கு என்னுடைய ஒத்துழைப்பை அளிக்கத் தவறியதில்லை. இப்போது நான் தற்போதைய நிர்வாகத்தின் கீழ் செயற்குழு உறுப்பினராகத் தொடர விரும்பாததால் அப்பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன். என் ராஜினாமா முடிவுக்கான காரணங்களை கீழே குறிப்பிட்டுள்ளேன் : 1. முதலில் தி.நகா் அலுவலகம் தனியாக…
Read More