10
Dec
நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் திறமைமிகு நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் "தி கேர்ள்பிரண்ட்". பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை, கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மெண்ட் பேனர்கள் இணைந்து தயாரிக்கிறது. ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள "தி கேர்ள்பிரண்ட்" படம் ஒரு அழகான காதல் கதையைச் சொல்கிறது. இப்படத்தை தீரஜ் மொகிலினேனி மற்றும் வித்யா கோப்பினிடி ஆகியோர் தயாரித்துள்ளனர். இன்று, பிரபல முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா "தி கேர்ள்பிரண்ட்" படத்தின் டீசரை வெளியிட்டார். படம் குறித்து விஜய் தேவரகொண்டா கூறியதாவது.. ""தி கேர்ள்பிரண்ட்" டீசரில் உள்ள ஒவ்வொரு காட்சியும் வெகு சுவாரஸ்யமாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகாவை சந்தித்தேன். பல பெரிய வெற்றிகளைப் பெற்றாலும், இன்னும் அவர் மிகவும் அடக்கமாகவே இருக்கிறார். "தி…