15
Aug
தரமணி திரைப்படம் வெறும் தீவிர சினிமாவாக மட்டும் உருவாக்க முயன்றிருந்தால் இதை எழுத வேண்டியத் தேவை இருந்திருக்காது. வணிகத்திரைப்படப்போட்டிக்குள் தரமணி போன்ற படைப்புகளை திறனாய்வு செய்பவர்கள் வெறும் அப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் மட்டும் இத்திரைப்படம் குறித்து விவாதித்தால் அதில் அவர்களுடைய அறியாமை மட்டுமே வெளிப்படும். இயக்குநர் ராம் என்னிடத்தில் பணி புரிந்தவர் என்பதற்காக இக்கருத்தை உரைக்கவில்லை. நூறு ஆண்டுகளுக்கு மேலாக பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி செயல்பட மறுக்கும் தமிழ் சினிமாவை ஒரு கண்டிப்பான ஆசிரியர் போல பிரம்பு கொண்டு மிரட்டி நவீன திரைப்பட மொழியில், அல்லாடும் சம கால சிக்கலை மக்கள் முன் போட்டு தோலுரிக்கிறார். 1950 - 60 ஆம் ஆண்டு இறுதி வாக்கில் மரபு மீறிய திரைப்படங்கள் பிரான்ஸ் நாட்டில் உருவான போது அதன் முன்னோடியாக இருந்தவரும் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநருமான "ப்ரான்ஸ்வோ த்ரூஃபோ என்பவர். அக்கால கட்டத்திற்குப்பின் வெறும் கதை சொல்லிக்கொண்டு வந்த திரைப்படக்கலை மரபுகளை உடைத்துக்…